Published:Updated:

எம்.எல்.ஏ-வை எதிர்க்கும் ஏழு வயது மைனா!

எம்.எல்.ஏ-வை எதிர்க்கும் ஏழு வயது மைனா!
பிரீமியம் ஸ்டோரி
எம்.எல்.ஏ-வை எதிர்க்கும் ஏழு வயது மைனா!

எம்.எல்.ஏ-வை எதிர்க்கும் ஏழு வயது மைனா!

எம்.எல்.ஏ-வை எதிர்க்கும் ஏழு வயது மைனா!

எம்.எல்.ஏ-வை எதிர்க்கும் ஏழு வயது மைனா!

Published:Updated:
எம்.எல்.ஏ-வை எதிர்க்கும் ஏழு வயது மைனா!
பிரீமியம் ஸ்டோரி
எம்.எல்.ஏ-வை எதிர்க்கும் ஏழு வயது மைனா!

விசும்பல் சத்தம் இல்லாமல் சீரியல்களா? ஆம்! முற்றிலும் மாறுபட்ட கதைக் களங்களோடு, கலக்கலான கலகலப்பான சீரியல்களை வழங்கிவரும் கலர்ஸ் தமிழ்த் தொலைக்காட்சியின் மற்றுமொரு புதிய தொடர் ‘மைனா’, இனி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

யாரிவள்..?

‘மைனா’ - அடிமைப் பெண்ணின் கதை

அழுது அடிபட்டு துவண்டுபோகும் பெண் அல்ல, அசத்தும் அறிவாற்றலால் தனக்கு வரும் துன்பங்களை ஒருகை பார்த்துவிடக் கூடிய இந்த மைனாவின் வயதோ ஏழு!

நவீன நூற்றாண் டான இன்றும் அதிகம் பேசப்படாத கொத்தடிமைகளாக அவதியுறும் மக்களின் வாழ்வைச் சின்னத்திரை யில் ‘மைனா’ மூலம் பேசவிருக்கின்றனர். கொத்தடிமைப் பணிகளில் குழந்தைகளும் விதிவிலக்கல்லர் என்பதே ஏழு வயது ‘மைனா’ கதாபாத்திரச் சித்திரிப்புக்குக் காரணம்.

எம்.எல்.ஏ-வை எதிர்க்கும் ஏழு வயது மைனா!

பழநியில் நடக்கும் பலப்பரீட்சை...

மைனாவின் கதையைத் தெரிந்துகொள்ள தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி மலைக்குச் செல்ல வேண்டும். பழநி அடிவாரத்திலுள்ள கல்துறை கிராமத்தில் வசிக்கும் மொத்த மக்களையும் தனக்கு அடிமையாக நடத்துகிறார் எம்.எல்.ஏ சிங்கப்பெருமாள். அவரது அடாவடிக்குப் பயந்தே ஒவ்வொரு முறையும் மக்கள் ஓட்டுப்போட்டுவிடுவதால், தொடர்ந்து மூன்றாவது முறையாகத் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக வெற்றி பெறுகிறார். தன்னிடம் கடன் வாங்கியவர்களால் அதைத் திருப்பிச் செலுத்த இயலாமல் போனால், அவர்கள் கையில் பச்சைக் குத்தி தன் குடும்பத்துக்கு அடிமையாக்கி விடுவதே சிங்கப்பெருமாளின் ஸ்டைல்.

மைனாவுக்கு அடிமை முத்திரை குத்தப்பட்டதா? எப்போது முதல் அவள் எம்.எல்.ஏ வீட்டுக்கு அடிமை யாகச் செல்கிறாள்? அங்கு அவள் செய்யும் வேலை என்ன? படும் துயரம் என்ன? அவளது கல்வி ஆசை நிறைவேறுமா? அவளை யாராவது காப்பாற்றுவார்களா? அந்தக் கிராமம் சிங்கப்பெருமா ளின் பிடியிலிருந்து விடுபடுமா?

இப்படிப்பட்ட கேள்வி களுக்கான பதில்கள் தொடரின் நெடும் பயணத்தில் கிடைக்கப் போகின்றன.

மைனாவாக பேபி திவ்ய தர்ஷினி நடிக்கிறார். ராஜ்காந்த், ஸ்ரீவாணி ஜோடி மைனாவின் பெற்றோராக நடிக்கின்றனர். சிங்கப்பெருமாளாக ‘விஸ்வரூபம்’ படத்தில் வில்லனாக நடித்த முக்தர் கான் நடிக்கிறார். பழம்பெரும் தயாரிப்பாளரான சங்கிலி முருகனுக்கு மைனாவின் தாத்தா வேடம். இவர்கள் தவிர மேலும் பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் மைனா சீரியலின் படப்பிடிப்பு, பழநி நெய்க் காரப்பட்டியில் தற்போது நடந்து வருகிறது.

எம்.எல்.ஏ-வை எதிர்க்கும் ஏழு வயது மைனா!

குழந்தைகளுக்கு ‘மைனா’ ஒரு ரோல் மாடல்...

நமக்கெல்லாம் வாழ்வில் சில பிரச்னைகள், மைனாவுக்கோ வாழ்வே பிரச்னைதான். தினம் தினம் அடிமைத்தனத்தால் உடல் துவண்டுபோகும் பிஞ்சு மைனாவின் உள்ளம் மட்டும் எப்போதும் துவண்டுபோவதில்லை. துன்பங்களைப் புன்னகையுடன் கடக்கிறாள், பிரச்னைகளைத் தன் சாமர்த்தியத்தால் வென்று காட்டுகிறாள் இந்தச் சுட்டி.

``சின்ன சின்ன ஏமாற்றங்களை, துன்பங்களைக்கண்டு பெரியவர்களே கலங்கிவிடும் நேரத்தில், ஒரு குழந்தை அதை எளிமையாகக் கையாளும்விதம் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் வித்தியாசமான அனுபவமாக இருக்கும். சிரித்துக்கொண்டே ஒவ்வொரு பிரச்னையையும் மைனா டீல் செய்யும்விதம், நிச்சயம் நம் வீட்டுக் குட்டீஸுக்கு நல்ல பழக்கங்களைக் கற்றுத் தரும்'' என்கின்றனர் இந்தத் தொடரின் தயாரிப்பாளர்கள்.

டேவிட் - கோலியாத், பிரகலாதன் - இரணியன் போல, மைனா - சிங்கப்பெருமாள் மோதல் நாள்தோறும் திருப்பங்களுடன் அமைந்து ரசிகர்களுக்கு விருந்தாகப் போகிறது என உறுதியாகச் சொல்லலாம்!

பிரமாண்டமான ‘நாகினி’ தொடருக்குப் பின், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள பிரைம் டைம் தொடரான ‘மைனா’வை கலர்ஸ் தமிழ்த் தொலைக்காட்சியில் ஜூன் 10 முதல் கண்டுகளிக்கலாம்!