Published:Updated:

நியூஸ் ரீடர் டூ சீரியல் அம்மா! - சுஜாதா பஞ்சு

சு.சூர்யா கோமதி
நியூஸ் ரீடர் டூ சீரியல் அம்மா! - சுஜாதா பஞ்சு
நியூஸ் ரீடர் டூ சீரியல் அம்மா! - சுஜாதா பஞ்சு

தென்றல், கேளடி கண்மணி போன்ற சீரியலில் அம்மா வேடங்களில் கலக்கியவர் சுஜாதா பஞ்சு. சீரியலுக்கு சின்ன பிரேக் கொடுத்து திரைப்படங்களில் நடித்து வந்தவர், தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் `பேரழகி' சீரியல் மூலம் தன்னுடைய ரீ-என்ட்ரியைத் தொடங்கியுள்ளார். இது குறித்து சுஜாதாவிடம் பேசினோம்.

``சீரியல் நடிகைனு சொல்கிறதைவிட செய்தி வாசிப்பாளராகத்தான் என்னை நிறைய பேருக்குத் தெரியும். என்னுடைய வாய்ஸ் ரொம்ப மென்மையாக இருக்கும். எந்தவொரு தகவலையும் சரியான உச்சரிப்பில் சொல்லணும் என்பதில் ரொம்ப கவனமா இருப்பேன். ஆங்கில ஊடகங்களில் செய்தி வாசிப்பாளராகப் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. சீரியல், சினிமாவில் டப்பிங், ரயில்வே என்கொயரி வாய்ஸ் ஓவர்னு என்னைவிட என் குரல் ஃபேமஸ். அதன் மூலமாக சீரியலில் என்ட்ரி ஆகும் வாய்ப்பு கிடைத்தது. நடிப்பு மீதும் ஆர்வம் இருந்ததால் சீரியல்கள் மூலம் மீடியா பயணத்தைத் தொடர்ந்தேன். விகடன் இயக்கிய 'தென்றல்' சீரியல் எனக்கு நல்ல ரீச் கொடுத்துச்சு. பிறகு, வெள்ளித்திரையிலும் வாய்ப்பு கிடைக்கவே சீரியலுக்கு சின்ன பிரேக். ரெண்டு வருஷம் கழிச்சு இப்போ 'பேரழகி' சீரியல் மூலமா கம்பேக் கொடுத்திருக்கேன். இந்த சீரியலில் நிறைய புது முகங்கள் என்றாலும் நல்ல பயிற்சியோடு வந்து நடிக்கிறதைப் பார்த்தா பிரமிப்பா இருக்கு. ஜூனியர்களாக இருந்தாலும் நல்ல விஷயங்களை நானும் அவங்ககிட்டேருந்து கத்துக்கிறேன். இப்போதைக்கு பாசிட்டீவ் ரோலில் கதைக்களம் நகருகிறது. டி.ஆர்.பி க்காக நெகட்டீவ் ரோலுக்கு என் கேரக்டர் மாறினாலும் பின்னிப் பெடல் எடுக்கணும்னு ஆசை'' என்றார்.

சு.சூர்யா கோமதி