Published:Updated:

``நான் பேயா மாறிட்டா என் பொண்ணுக்கு சந்தோஷம்'' - `தேவதையைக் கண்டேன்' கிருத்திகா

சு.சூர்யா கோமதி
``நான் பேயா மாறிட்டா என் பொண்ணுக்கு சந்தோஷம்'' - `தேவதையைக் கண்டேன்' கிருத்திகா
``நான் பேயா மாறிட்டா என் பொண்ணுக்கு சந்தோஷம்'' - `தேவதையைக் கண்டேன்' கிருத்திகா

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் `தேவதையைக் கண்டேன்'  சீரியலில் கதாநாயகி சியாமளா விலக, அந்தக் கதாபாத்திரத்துக்கு `பூவே பூச்சுடவா' கிருத்திகா என்ட்ரி கொடுத்துள்ளார். இது குறித்து கிருத்திகாவிடம் பேசினோம்.

``ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் கதாநாயகியாக அறிமுகமாகிற முதல் சீரியல் இது. `பூவே பூச்சூடவா' சீரியல்ல ரசிகர்களின் மனதில் ஹோம்லி லுக்கால இடம்பிடிச்சேன். `தேவதையைக் கண்டேன்' சீரியல்ல `நல்லம்மா', `லஷ்மி'னு ரெண்டு கதாபாத்திரங்கள் பண்றேன். இந்த சீரியலில் நடித்துக்கொண்டிருந்த சியாமளா திடீர்னு விலகிட்டாங்க. அந்தக் கதாபாத்திரத்துக்கு ஆள் தேடிட்டு இருக்கும்போதுதான் சீரியல் புரொடியூசர் என்னை ரெஃபர் பண்ணிருக்காங்க. டைரக்டர் என்கிட்ட கேட்டதும் தயக்கமே இல்லாமல் உடனே ஓ.கே சொல்லிட்டேன்.

முன் ஜென்ம வாழ்க்கைக்கும் தற்போதைய வாழ்க்கைக்கும் இடைப்பட்டதுதான் என்னுடைய கதாபாத்திரம் என்பதால் கொஞ்சம் சவாலான கேரக்டராகதான் இருக்குது. முக பாவனைகளுக்காக நிறைய மெனக்கெடுறேன். பேய் மாதிரி நடிக்கப் போகிறோமே மக்கள் ஏத்துப்பாங்களானு ஆரம்பத்துல ஒரு சந்தேகம் இருந்துச்சு. ஆனால், சில எபிசோடுகளிலேயே பாசிட்டிவ் கமென்ட்ஸ் வர ஆரம்பிச்சுருக்கு. இப்போ ரெண்டு சீரியல்களில் பிஸி. பொண்ணுக்கு ஸ்கூல் லீவ் விட்டுட்டாங்கிறதுனால ஷூட்டிங்குக்கு பொண்ணையும் கூட்டிட்டு போயிடுறேன். முன் ஜென்ம கதாபாத்திரம் நடிக்கும்போது ``மம்மி பேயா மாறிட்டாங்க'னு என் பொண்ணு சந்தோஷத்துல என்னை கலாய்ச்சுட்டு இருப்பா. அவளோட கமென்ட் எனக்கு உற்சாகத்தைத் தருது'' என்றார் கிருத்திகா.

சு.சூர்யா கோமதி