ஆண்களின் வீடியோக்களே ஹிட் அடித்துக் கொண்டிருந்த யூடியூப் தளத்தில், `மேல ஏறி வர்றோம் நீ ஒதுங்கி நில்லு...' என்று தடதடவென வந்திறங்கியவர் பூர்ணிமா. டாப் டிரெண்டிங் வீடியோக்கள், 15 லட்சத்துக்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்கள் என மிரட்டி வருகிறார். மீடியாவுக்கு அந்நியமான சாதாரண குடும்பத்திலிருந்து வந்து, சினிமா வரை தன் கடின உழைப்பால் வளர்ந்திருக்கிறார். லாக்டௌன் காலத்தில் யூடியூப் ரசிகர்களின் செல்லப்பிள்ளையாகியிருக்கும் `அராத்தி' பூர்ணிமாவுடன் ஓர் அரட்டை!

அதென்ன `அராத்தி'..?

`சரியான அராத்து'னு சொல்வோம்ல... அப்படியான கேரக்டர்தான் அராத்தி. இந்த யூடியூப் சேனல் ஹிட் ஆகக் காரணம், அந்த டைப் வீடியோக்கள்தான். வீடியோவுக்காக ஒண்ணுமே மாத்திக்கல. வீட்ல எப்படி இருப்பேனோ அப்படியே கேமரா முன்னாடி யும் இருப்போம்னு நினைச்சு பண்ணின வீடியோக்கள்தான் எல்லாம். `நம்மள மாதிரி இருக்கே', `நம்ம வீட்டுப் பொண்ணு மாதிரி இருக்கே'னு எல்லாருக்கும் ஒரு கனெக்ட் கிடைக்க, யூடியூப் சேனல் ஹிட்!

`அராத்தி'க்கு முன் பூர்ணிமா?

அண்ணனுக்கு வேலை போய்டுச்சு, அண்ணிக்கு பிரசவ நேரம். அந்த இக்கட்டான சூழ்நிலையில என் வேலையும் போயிடுச்சு. எஜுகேஷனல் லோன் சுமையும் இருந்தது. எனக்கு வேலை போனதையே வீட்டுல சொல்லாம, நண்பர்களோட ஷார்ட் ஃபிலிம்ல நானே ஸ்கிரிப்ட் எழுதி நடிக்க ஆரம்பிச்சேன். நைட் எவ்ளோ நேரமானாலும் வேலைபார்ப்பேன். ஒரு வீடியோவுக்கு 2,500 ரூபாய் கிடைக்கும்.

ஆரம்ப காலத்துல, மாசம் 30,000 ரூபாய் சம்பளத்துல மதுரையில வேலை பார்த்தேன். நான் அங்கே வசிக்கிறது என் பெற்றோருக்குக்கூடத் தெரியாது. அப்புறம் சென்னைக்கு வந்தேன். படப்பிடிப்பு முடிய இரவு ஆகிடும். அந்த நேரத்தில் தனியா வீட்டுக்குப் போவதைத் தவிர்க்க, உடன் வேலைபார்க்கும் ஆண்கள் எடுத்திருந்த வாடகை வீட்டில் நானும் தங்கி வேலை பார்த்திருக்கேன்.

எட்டு பேர் தங்கியிருந்த வீடு என்பதால, வாடகையும் கணிசமா குறைஞ்சது. தனி வீடுனா, அப்போ நான் இருந்த பொருளாதார நிலைமைக்கு வாடகைக்கே அதிகம் செலவாகி யிருக்கும். நண்பர்கள் என்னை ரொம்ப கண்ணியமா நடத்தினாங்க, ரொம்ப பாதுகாப்பா இருந்தேன். இருந்தாலும், ஒரே பாத்ரூமை ஷேர் செய்துக்கறது போன்ற சிரமங்கள் இருந்தன. மூணு மாசம் அப்படி தங்கியிருந்தேன்.

நான் வேலையைவிட்டதோ, `அராத்தி' சேனல்ல வேலைபார்த்ததோ ஆரம்பத்தில் எங்க வீட்ல யாருக்கும் தெரியாது. ஓரளவுக்கு வருமானம் வந்ததுக்கு அப்புறம்தான் எல்லாத்தையும் சொன்னேன். எல்லா மிடில் கிளாஸ் குடும்பங்களையும்போல அவங்களுக்கும் மீடியா வேலை குறித்த பயம் இருந்தாலும், என் முயற்சிகள் மேலயும் என் மேலயும் இப்போ அவங்களுக்கு நம்பிக்கை வந்திருக்கு.

கமென்ட்ஸ்..?

நான் மாநிறம் என்பதால பலரும் என்னை குறைவாவே எடைபோடுவாங்க. ஆனா, என்னைப் பொறுத்தவரைக்கும் அது குறையே இல்ல. அதனால அவற்றையெல்லாம் நான் கண்டுக்கவே மாட்டேன். என்றாலும், சேனலை குழந்தைகள் பலரும் பார்க்கிறதால, மோசமான கமென்ட்ஸை மட்டும் ஆஃப் செஞ்சிடுவேன்.

பலரும் என்னை கறுப்பினுதான் கூப்பிடுவாங்க. `பிளாக் டைமண்ட்'னு என்னைக் கொண்டாடுறவங்களும் இருக்காங்க.

`கருவண்டு மாறி இருந்துகிட்டு எவ்ளோ நல்லா பண்றா...'னு சொல்லும்போது, அதை பாசிட்டிவ்வா எடுத்துக்கிறதா, நெகட்டிவ்வா எடுத்துக்கிறதான்னு தெரியல. `கறுப்பா இருந்தாலும்'ல அந்த `இருந்தாலும்' கஷ்டமா இருக்கும். `வெள்ளையா இருந்தாலும்'னு யாரும் சொல்றதில்லை. இந்த மாதிரி சமூகத்துல, கறுப்பாயிருந்து மேல வர்றது பெரிய விஷயம்.

ஹீரோயின்னாலே வெள்ளையா இருப்பாங்க, க்யூட்டா நடந்துக்குவாங்க அல்லது லூஸுத்தனம் செய்வாங்கன்னு ஒரு ஸ்டீரியோடைப் செட் செய்து வெச்சிருக்காங்க. இவற்றையெல்லாம் மீறி, பிரேக் த ஸ்டீரியோடைப் ஸ்கிரிப்ட், நடிப்புனு என் உழைப்புதான் மீடியாவில் எனக்கு வாய்ப்பும் வெற்றியும் வாங்கிக்கொடுத்திருக்கு.

அடுத்து..?

நடிப்பு, ஸ்கிரிப்டை தாண்டி, நானே தயாரித்து, நானே டீம் அமைச்சுன்னு யூடியூப் சேனல் வேலைகள் செய்துகிட்டிருக்கோம். எனக்கு சோறு போட்டது, போடுறது யூடியூப் சேனல்தான். படங்கள்ல நடிச்சாலும் அதை விடமாட்டேன். மாசம் ஒரு வீடியோ, வ்லாக் (vlog)னு தொடர்வேன்.