Published:Updated:

``என் பையன் என்கூடவே இருக்கணும்னுதான் டாட்டூ போட்டுக்கிட்டேன்!" - நடிகை கனிகா

Actress Kanika with her son
Actress Kanika with her son

நடிப்பு, பிசினஸ், ஃபிட்னஸ்னு பல விஷயங்கள்ல கவனம் செலுத்தினாலும், அதையெல்லாத்தையும்விட அம்மாங்கிற பொறுப்புதான் எனக்கு ரொம்ப முக்கியம்.

நடிகை கனிகா, மீண்டும் நடிக்கத் தொடங்கியிருப்பதுடன், ரெஸ்டாரன்ட் ஒன்றையும் நடத்திவருகிறார். நடிப்பு, பிசினஸ் பயணங்களுக்கு இடையே பொறுப்புள்ள தாயாகவும் செயல்படுகிறார். கனிகா, தன் பர்சனல் விஷயங்கள் குறித்து சுவாரஸ்யமாகப் பேசுகையில்...

actress kanika
actress kanika

"என் பூர்வீகம் தமிழ்நாடுதான். கல்யாணமானதும் அமெரிக்காவில் குடியேறிட்டேன். அப்போ மலையாள பட வாய்ப்புகள் மட்டும் அதிகம் வந்ததால, அவ்வப்போது இந்தியா வந்து நடிச்சுட்டுப்போவேன். இந்நிலையில மீண்டும் சென்னைக்குக் குடியேறினோம். நம்ம தமிழ்நாட்டுக்கு வர்றதுனாலே தனி சந்தோஷம்தான். தமிழ்நாட்டில் குடியேறியபோதும், தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்க ஆரம்பிச்ச போதும் அளவில்லா சந்தோஷமடைந்தேன்.

நடிப்பு, பிசினஸ், ஃபிட்னஸ்னு பல விஷயங்கள்ல கவனம் செலுத்தினாலும், அதையெல்லாத்தையும்விட அம்மாங்கிற பொறுப்புதான் எனக்கு ரொம்ப முக்கியம். என் பையன் ரிஷியைக் கவனிச்சுக்க, மற்ற வேலைகளுக்குக் குறைவாகவே முக்கியத்துவம் கொடுக்கிறேன். என் உலகம், உயிர் எல்லாமே என்னுடைய பையன்தான்.

actress kanika
actress kanika

நடிப்பைத் தாண்டி, ஓவியம், டான்ஸ், பாடுறதுலயெல்லாம் ஆர்வம் அதிகம் உண்டு. ஒரு தாய் தன் குழந்தைக்கு முத்தமிடுற மாதிரி ஓர் ஓவியம் வரைஞ்சேன். அந்த உருவத்தை என் கையில டாட்டூவா பச்சைக் குத்திகிட்டேன். அதனால என் பையன் எப்போதும் என்கூடவே இருக்கிற மாதிரி உணர்வேன்.

என் மகனுக்கும் டான்ஸ்ல அதிக ஆர்வம் உண்டு. மலையாளத்தில் ஒரு நடன நிகழ்ச்சியில் நடுவரா இருக்கேன். சக நடுவரான ஶ்ரீதர் மாஸ்டர், `இந்த நிகழ்ச்சியில உங்க பையனுடன் சேர்ந்து டான்ஸ் ஆடுங்க. நல்லா இருக்கும்'னு சொன்னார். அதன்படி ஒரு எபிசோடில் என் பையனும் நானும் குத்து டான்ஸ் ஆடினோம்" என்கிற கனிகா ஃபிட்னஸ் ஆர்வம் குறித்துப் பேசுகிறார்.

நான் தினமும் ஒரு மணி நேரம் ஜிம் போறேன். ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுறேன். நான் ஆரோக்கியமா இருந்தால்தான் என் குடும்பத்தையும் பார்த்துக்க முடியும்.
நடிகை கனிகா

"நமக்கு வயசு கூடக்கூடத்தான் ஆரோக்கியத்தின் அருமை புரியும். அதை, அமெரிக்காவில் வசிச்சப்போ அந்த நாட்டின் ஜங்க் ஃபுட் உணவு முறையால் அதிகம் உணர்ந்தேன். பிறகுதான், ஃபிட்னஸில் அதிக கவனம் செலுத்த ஆரம்பிச்சேன்.

இந்தத் தலைமுறையில சாப்பாடு, தூக்கம், மகிழ்ச்சிக்கான நேரம்னு எல்லாமே மாறிடுச்சு. அதனால எல்லோருக்குமே உடற்பயிற்சி அவசியமாகிடுச்சு.
கனிகா
``சீரியல் முடியட்டும்னு இருந்தா அறுபதாம் கல்யாணம்தான்!'' - காதலரைக் கைபிடித்த `செம்பருத்தி' ஜெனிஃபர்

அதற்காக ஜிம்முக்குப் போகணும்னு இல்லை. வீட்டுல இருந்தபடியேகூட எளிமையான உடற்பயிற்சிகளைச் செய்யலாம். நான் தினமும் ஒரு மணி நேரம் ஜிம் போறேன். ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுறேன். நான் ஆரோக்கியமா இருந்தால்தான் என் குடும்பத்தையும் பார்த்துக்க முடியும். எனக்குத் தெரிஞ்சவங்களுக்கும் உடற்பயிற்சிக்கான அவசியத்தை எடுத்துச் சொல்வேன்" என்கிறார்.

சினிமா பயணம் பற்றிப் பேசும் கனிகா, "'பாய்ஸ்' படத்துல ஹீரோயினா நடிக்க வாய்ப்பு வந்துச்சு. அந்தப் படத்துக்கான போட்டோஷூட்லயும் கலந்துகிட்டேன். ஆனா, அப்போ இன்ஜினீயரிங் படிச்சுகிட்டிருந்ததால எனக்கு நடிக்க நேரமில்லைனு அந்தப் பட வாய்ப்பை மறுத்துட்டேன். படிப்பு முடிச்சதும் ஆக்டிவா நடிக்க ஆரம்பிச்சேன். நான் நடிச்ச `எதிரி' படத்தைப் பார்த்த இயக்குநர் ஷங்கர் சாருக்கு என் குரல் பிடிச்சிருக்கு.

actress kanika
actress kanika

ஒருநாள் ஷங்கர் சார் ஆபீஸ்ல இருந்து எனக்கு போன் வந்துச்சு. இன்ப அதிர்ச்சியில ரொம்பவே குஷியாகிட்டேன். `அந்நியன்' படத்துல சதாவுக்கு டப்பிங் கொடுக்கிற வாய்ப்பை எனக்குக் கொடுத்தார் ஷங்கர் சார். அதேநேரத்துல `சச்சின்' படத்துல ஜெனிலியாவுக்கு டப்பிங் கொடுக்கும் வாய்ப்பும் வந்துச்சு.

ஒரே நேரத்துல இவ்விரண்டு படங்களுக்கும் டப்பிங் கொடுத்தேன். பிறகு ஷங்கர் சாரின் `சிவாஜி' படத்துல ஸ்ரேயாவுக்கும் டப்பிங் கொடுத்தேன். கல்யாணமாகி அமெரிக்காவில் குடியேறிட்டதால, டப்பிங் வாய்ப்புகளை என்னால தொடர முடியலை.

actress kanika
actress kanika

சென்னைக்கு வந்து பல வருஷம் ஆகிடுச்சு. நடிப்பைத் தொடர்வதோடு, டப்பிங் பணிகளிலும் கவனம் செலுத்த ஆயத்தமாகியிருக்கேன்" என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் கனிகா.

அடுத்த கட்டுரைக்கு