Published:Updated:

``4,000 பேர் வேலை செய்றாங்க; பிசினஸூக்கே நேரம் சரியா இருக்கு!" - நடிகை ராதா ஷேரிங்

மூணு `5 ஸ்டார்' ஹோட்டல்களை நடத்துறோம். பிசினஸில் நான் பிஸி!

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம்வந்த ராதா, நீண்டகாலமாக நடிக்காமல் இருக்கிறார். ஆனாலும், தமிழ் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக அவ்வப்போது பணியாற்றுகிறார். இன்றும் எவர்கிரீன் நாயகியாகப் புகழுடன் இருக்கும் ராதா, தன் பர்சனல் பக்கங்களைப் பகிர்கிறார்.

Actress Radha
Actress Radha

`` `அலைகள் ஓய்வதில்லை' படத்துல என்னை நடிக்க வைக்க முடிவெடுத்த பாரதிராஜா சார், அதுபத்தி பேசக் கேரளாவிலுள்ள எங்க வீட்டுக்கு ஒருநாள் வந்தார். அந்தச் சின்ன வயசுல சினிமா பத்தின எனக்கு எந்த விவரமும் தெரியாது. எனவே, ``சினிமாவில் நடிக்கப் பிடிக்குமா?'னு அவர் கேட்டால், `ஆமாம்! பிடிக்கும்'னு சொல்லு. `எப்படி நடிப்பே?'னு கேட்டால், `நீங்க சொல்லிக்கொடுக்கிறதைப் பார்த்து அப்படியே நடிப்பேன்'னு சொல்லு'னு எங்கம்மா முன்கூட்டியே எனக்குச் சொல்லிக்கொடுத்தாங்க.

அதன்படியே பேசினேன். தவிர, பாரதிராஜா சார் என்கிட்ட சில கேள்விகள் கேட்டார். மலையாளம், இங்கிலீஸ் மற்றும் அரைகுறை தமிழ்னு மூணு மொழிகளிலும் கலந்து பதில் சொன்னேன். பாரதிராஜா சார் என்னை ஹீரோயினா தேர்வு செய்துட்டார். 

Actress Radha
Actress Radha

தொடர்ந்து ஓய்வில்லாம நடிச்சேன். அப்போ, அப்பாதான் என்கூட ஷூட்டிங்க்கு உடன் வருவார். அவர் மேல எனக்கு அளவுகடந்த பாசம் உண்டு. என் கல்யாணத்துக்கு முன்னாடி அவர் இறந்துட்டார். இப்போவரை என் அப்பாவின் இழப்பால் வருத்தப்படுறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

10 வருஷம் பிஸியா நடிச்சேன். நல்லா சம்பாதிச்சேன். இந்த நிலையில், கல்யாணம் செய்துகிட்டேன். இனி நடிக்க வேண்டாம்னு அப்போ முடிவெடுத்தேன். கணவர், என் மூணு குழந்தைகள்னு குடும்பம்தான் என் உலகமா ஆச்சு. என் கணவர் பிசினஸை கவனிச்சுகிட்டார். 

Actress Radha
Actress Radha

நான் மூணு குழந்தைகளையும் நல்லபடியா வளர்த்து ஆளாக்கினேன். அந்த அம்மா பொறுப்புதான், என் வாழ்க்கையில மிகச் சிறந்த வேலை" என்கிற ராதா, தற்போது பிஸியான பிசினஸ் உமன்.

``நான் ஹீரோயினா நடிச்சுகிட்டு இருந்தப்போவே சென்னை மற்றும் கேரளாவுல ஃபிலிம் ஸ்டூடியோவைத் தொடங்கினோம். அவை இப்போவரை இயங்கிட்டு இருக்கு. குழந்தைங்க ஓரளவுக்கு வளர்ந்துட்ட பிறகு, கணவரின் பிசினஸ்ல நானும் இறங்கினேன்.

நானும் என் கணவரும் பிசினஸைப் பார்த்துகிட்டாலும், எங்களுக்குப் பிறகு எல்லா நிர்வாகத்தையும் பிள்ளைங்கதான் பார்த்துக்கணும்னு ஆசைப்படுகிறோம்.
நடிகை ராதா

எங்களுக்குக் கேரளாவில் மூணு `5 ஸ்டார்' ஹோட்டல்கள் இருக்கு. அவற்றைக் கவனிச்சுக்கிறது மிகப்பெரிய பொறுப்பா இருக்கு. 

Actress Radha with family
Actress Radha with family

தவிர, ஸ்கூல், மும்பையிலுள்ள பல ரெஸ்டாரன்ட்ஸ், சினிமா தியேட்டர்னு பல தொழில்களை நடத்திட்டு இருக்கிறோம். எங்க அனுபவம்கூடக்கூட பிசினஸ் பயணத்தையும் விரிவுபடுத்திட்டே இருக்கிறோம். இப்போ 4,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் எங்ககிட்ட வேலை செய்றாங்க. தொடர்ந்து பிஸியா இருக்கிறது நல்ல அனுபவம்.

பிசினஸ் வேலைகளைக் கவனிச்சுக்கவே நேரம் போதலை. இதுக்கிடையே நடிக்க, நான் பெரிசா கவனம் செலுத்தலை. கார்த்திகா நாயர், விக்‌னேஷ் நாயர், துளசி நாயர்னு எங்களுக்கு மூணு பிள்ளைகள். துளசிக்கு இன்னும் படிப்பு முடியலை. மத்த இருவரும் படிப்பை முடிச்சுட்டாங்க. அவங்களுக்கும் பிசினஸில்தான் ஆர்வம் அதிகம். 

Actress Radha
Actress Radha

நானும் என் கணவரும் பிசினஸைப் பார்த்துகிட்டாலும், எங்களுக்குப் பிறகு எல்லா நிர்வாகத்தையும் பிள்ளைங்கதான் பார்த்துக்கணும்னு ஆசைப்படுகிறோம். எனவே, என் பிள்ளைகள் சீக்கிரமே எங்க பிசினஸ்லயே கவனம் செலுத்துவாங்க. அப்போதான் எனக்குக் கொஞ்சம் ஓய்வு இருக்கும்னு நினைக்கிறேன்.

என் பசங்க வெளிநாட்டுல படிக்கலாம்; வேலை செய்யலாம். ஆனா, நம்ம இந்திய கலாசாரப்படிதான் இருக்கணும்னு கண்டிப்புடன் வளர்த்திருக்கேன். சின்ன வயசுல இருந்து இப்போவரை, அவங்க நலன் சார்ந்த விஷயங்கள்ல நான் ரொம்பவே கண்டிப்புடன்தான் இருப்பேன். 

நாங்க சினிமாவில் தொடர்ந்து நடிச்சாலும் நடிக்காட்டியும், சினிமா துறைக்கு எங்க குடும்பமே கடமைப்பட்டிருக்கு. சினிமா மீதான எங்க மதிப்பும் குறையாது.
நடிகை ராதா

கார்த்திகாவும், துளசியும் சில படங்கள்லதான் நடிச்சாங்க. அதுவே மகிழ்ச்சிதான். நாங்க சினிமாவில் தொடர்ந்து நடிச்சாலும் நடிக்காட்டியும், சினிமா துறைக்கு எங்க குடும்பமே கடமைப்பட்டிருக்கு. சினிமா மீதான எங்க மதிப்பும் குறையாது" என்று நிறைவான மகிழ்ச்சியுடன் முடித்தார் ராதா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு