Published:Updated:

``Rugged boy ஓகேதான்" - பிரியங்கா மோகன்

பிரியங்கா மோகன்

``கல்யாணத்துக்கப்புறம் நடிக்கக்குறதுக்கு நோ சொல்லக்கூடாது" என்று ப்ரியங்கா சொல்லவே, விஷ்ணு விஷால் இடைமறித்து ``கல்யாணத்துக்கு முன்னால சரின்னுதான் சொல்லுவாங்க" எனச் சொல்லவே அரங்கில் கனத்த சிரிப்பலை எழுந்தது.

``Rugged boy ஓகேதான்" - பிரியங்கா மோகன்

``கல்யாணத்துக்கப்புறம் நடிக்கக்குறதுக்கு நோ சொல்லக்கூடாது" என்று ப்ரியங்கா சொல்லவே, விஷ்ணு விஷால் இடைமறித்து ``கல்யாணத்துக்கு முன்னால சரின்னுதான் சொல்லுவாங்க" எனச் சொல்லவே அரங்கில் கனத்த சிரிப்பலை எழுந்தது.

Published:Updated:
பிரியங்கா மோகன்

தமிழில் நடித்து வெளியானவை 3 படங்கள்தான் என்றாலும் அவற்றில் 2 ப்ளாக்பஸ்டர் ஹிட்டுகள்.  க்யூட்டான எக்ஸ்பிரஷன்ஸால் தனக்கென ஒரு ரசிகப்படையை உருவாக்கியிருக்கும் பிரியங்கா மோகனுக்கு தனுஷ், ஜெயம் ரவி என அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களுடன் பட வாய்ப்புகள். புன்னகை ஒளி வீசும் இந்த நட்சத்திரத்துக்கு, அவள் விகடனின் `யூத் ஸ்டார்' விருது வழங்கப்பட்டது.  

பிரியங்கா மோகன் யூத் ஸ்டார் விருது பெறும் தருணம்
பிரியங்கா மோகன் யூத் ஸ்டார் விருது பெறும் தருணம்

டிசம்பர் மாதம் வெளியாகவிருக்கிற `கட்டா குஸ்தி' திரைப்படத்தின் இயக்குநர் செல்லா அய்யாவு மற்றும் நாயகன் விஷ்ணு விஷால் ஆகியோர் இவ்விருதினை வழங்க மேடையேறினர். நடனக்கலைஞர்கள் `ஜாலியா நீ வாடி இது பிரைவேட் பார்ட்டிதான்' என்கிற வைரல் பாடலுக்கு நடனமாடியபடியே பிரியங்கா மோகனை  மேடையேற்றினர்.

விருதினைப் பெற்றுக்கொண்ட பிரியங்கா, வெள்ளி விழா கொண்டாடும் அவள் விகடனுக்கு வாழ்த்துகளும், விருதுக்கு நன்றியும் தெரிவித்தார்.

``Rugged boy ஓகேதான்" - பிரியங்கா மோகன்

அவள் விருதுகள் நிகழ்வினைத் தொகுத்த சின்னத்திரைப் பிரபலங்களான தீபக் - நட்சத்திரா ஆகியோர், அவரிடம் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தனர்...

``டாக்டர்’ படத்துல சிவகார்த்திகேயன் உங்களைப் பொண்ணு பார்க்க வர்றப்போ நிறைய கேள்விகள் கேட்டீங்க. ரியல் லைஃப்ல என்னவெல்லாம் கேட்பீங்க?"

``நம்பிக்கையானவரா இருப்பாங்களா... ரெஸ்பெக்ட் பண்ணுவாங்களான்னு பார்ப்பேன். கல்யாணத்துக்கப்புறம் நடிக்கக்குறதுக்கு நோ சொல்லக்கூடாது" என்று ப்ரியங்கா சொல்லவே, விஷ்ணு விஷால் இடைமறித்து ``கல்யாணத்துக்கு முன்னால சரின்னுதான் சொல்லுவாங்க" எனச் சொல்லவே அரங்கில் கனத்த சிரிப்பலை எழுந்தது.

அடுத்ததாக, ஆம், இல்லை இரண்டில் ஒன்று சொல்லும்படியான கேள்விகளைக் கேட்டனர்.  

Relationship Status Single -ஆ?

``யெஸ்"

Rugged Boy Ok - ஆ?  தாடியெல்லம் வெச்சுக்கிட்டு?

``யெஸ்... தாடி வெச்சிருக்குற பசங்களைப் பிடிக்கும்"

``Rugged boy ஓகேதான்" - பிரியங்கா மோகன்

நீங்க Party Girl- ஆ

``நோ"

First Bencher - ஆ?

ஸ்கூல்ல ஃபர்ஸ்ட் பெஞ்ச்சர்... காலேஜ்ல அப்படியே பின்னாடி போயிட்டேன்.
 
Foodie-ஆ?

``நிறைய சாப்பிட மாட்டேன்... ஆனா, நிறைய எக்ஸ்ப்ளோர் பண்ணப்பிடிக்கும்" என அனைவரும் ரசிக்கும் விதமாக க்யூட் பதில்களைச் சொல்லி கைத்தட்டல்களை வாங்கினார்.