Published:Updated:

மல்லிப்பூ பாட்டு, கும்மியாட்டம்... கோவையில் களைகட்டிய அவள் விகடன் `ஜாலி டே’ கொண்டாட்டம்!

அவள் ஜாலி டே

ஜாலி டே முன் தேர்வில் இளம் பெண்கள் சீனியர் பெண்கள் வரை 150 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தங்களுடைய தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். மல்லிப்பூ பாடல் பாடியும், கும்மியாட்டம் ஆடியும் வாசகிகள் அசத்தினர்.

மல்லிப்பூ பாட்டு, கும்மியாட்டம்... கோவையில் களைகட்டிய அவள் விகடன் `ஜாலி டே’ கொண்டாட்டம்!

ஜாலி டே முன் தேர்வில் இளம் பெண்கள் சீனியர் பெண்கள் வரை 150 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தங்களுடைய தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். மல்லிப்பூ பாடல் பாடியும், கும்மியாட்டம் ஆடியும் வாசகிகள் அசத்தினர்.

Published:Updated:
அவள் ஜாலி டே

பெண்களின் தனித்திறமையை வெளிப்படுத்தி, வாசகிகளுக்கு மகிழ்ச்சிக் கொண்டாட்டமாக அமைவது அவள் விகடன் நடத்தும் ‘ஜாலி டே’ நிகழ்ச்சி. இம்முறை கோவையில், பிருத்வி இன்னர்வேர்ஸ் மற்றும் அவள் விகடன் இணைந்து நடத்தும் 'ஜாலி டே' இரண்டு நள்களாக உற்சாகமாக நடந்து வருகிறது.

அவள் ஜாலிடே
அவள் ஜாலிடே

கோவை, நவ இந்தியா சாலையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான வாசகிகள் கலந்து கொண்டனர். விஜய் டிவி பாலாவும், தீபிகாஷியும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

இன்று நடைபெறும் நிகழ்ச்சி, தேஜஸ்ரீயின்  அழகான நடனத்துடன் தொடங்கியது.

அவள் ஜாலிடே
அவள் ஜாலிடே

தொடர்ந்து ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் முதல்வரான என்.ஆர்.அலமேலு, பிரித்திவியின் நிர்வாக இயக்குநர் பாலன், எஸ்.ஆன்.ஆர் குழுத்தின் மக்கள் தொடர்பு அலுவலர்  பிரகதீஸ்வரன், விகடன் முகவர்களான ராதா, இந்திராணி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்.

அவள் ஜாலி டே
அவள் ஜாலி டே

மேலும் பல்வேறு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடந்து வருகின்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

முன்னதாக, நேற்று ’ஜாலி டே’ போட்டிகளுக்கான முன் தேர்வில் இளம் பெண்கள் முதல் முதியவர்கள் வரை 150 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தங்களுடைய தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்.

அவள் ஜாலி டே
அவள் ஜாலி டே

பாட்டு, நடனம், நடிப்பு, ரங்கோலி, மெஹந்தி, ஆர்ட் அண்ட் கிராஃப்ட், அடுப்பில்லா சமையல், கவிதை பட்டிமன்றம் எனப் பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்ற வாசகிகள் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். மல்லிப்பூ பாடல் பாடியும், கும்மியாட்டம் ஆடியும்  வாசகிகள் அசத்தினர்.