Published:Updated:

இது சிங்கப்பெண்களின் திருவிழா!

அவள் விகடன் ஜாலி டே
பிரீமியம் ஸ்டோரி
அவள் விகடன் ஜாலி டே

திருச்சி அவள் விகடன் ஜாலி டே

இது சிங்கப்பெண்களின் திருவிழா!

திருச்சி அவள் விகடன் ஜாலி டே

Published:Updated:
அவள் விகடன் ஜாலி டே
பிரீமியம் ஸ்டோரி
அவள் விகடன் ஜாலி டே

வம்பர் 17 அன்று திருச்சியையே அதிரவைத்தனர் நம் வாசகிகள். சிங்கப்பெண்களின் திருவிழாவான அவள் விகடன் ஜாலி டே - பவர்டு பை போத்தீஸ் நிகழ்ச்சி அன்றுதானே!

அவள் விகடன் ஜாலி டே
அவள் விகடன் ஜாலி டே
அவள் விகடன் ஜாலி டே
அவள் விகடன் ஜாலி டே

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதல்நாள், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள ரவி மினி ஹாலில் முன்தேர்வுப் போட்டிகளும், மறுநாள் தாஜ் திருமண மஹாலில் ஜாலி டே கொண்டாட்டமும் நடைபெற்றன. நடனம், பாட்டு, ரங்கோலி, பேச்சு, டப்ஸ்மாஸ், மிமிக்ரி, நடிப்பு, அடுப்பில்லா சமையல் என சகலகலா வல்லிகளாக தங்களுடைய தனித்திறமைகளை வெளிப்படுத்தி அசரவைத்தனர் வாசகிகள்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘ஜாலி டே’ அன்று காலை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக இயக்குநர் டாக்டர் பாலசுப்பிரமணியம், `உயிர்துளி' ரத்ததான மைய இயக்குநர் டாக்டர் பிரபாகரன், திருச்சி பெல் மகளிர் மன்றத்தின் ஸ்ரீரஞ்சனி, அவள் விகடன் வாசகி நந்தினி உள்ளிட்டோர் குத்து விளக்கேற்றி விழாவைத் தொடக்கிவைத்தனர். சின்னத்திரை பிரபலங்களான சுட்டி அரவிந்த் மற்றும் சித்ரா நிகழ்ச்சிகளை கலகல கலாட்டாக்களுடன் தொகுத்து வழங்கினர்.

அவள் விகடன் ஜாலி டே
அவள் விகடன் ஜாலி டே

விழாவில் பேசிய டாக்டர் தமிழரசி, ``பிரசவ காலங்களில் 200 எலும்புகள் உடையும் அளவுக்கான வலிகளைத் தாங்கும் நாம்தான் சின்ன ஊசிக்குப் பயப்படுகிறோம். நான் 36 முறை ரத்ததானம் செய்துள்ளேன். ஒருமுறை ரத்ததானம் செய்வதின் மூலம் நான்கு பேரின் உயிரைக் காப்பாற்ற முடியும்” என ரத்ததானத்தின் அவசியத்தை முன்வைத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவள் விகடன் ஜாலி டே
அவள் விகடன் ஜாலி டே

குளித்தலை வாசகி கலைவாணி, சித்ராவின் பழைய புகைப்பட ஆல்பத்தை `சர்ப்ரைஸ் கிப்ட்'டாகக் கொடுத்தார். அடுத்து மேடையேறிய அறந்தாங்கி நிஷா பெண் களின் திறமைகளைப் புகழ்ந்ததோடு, அப்பா எனும் உறவை சிலாகித்தார். கலகலப்பாக மட்டுமே பார்த்துப் பழகிய நிஷாவின் எமோஷனல் எபிசோடு எல்லோரையும் கலங்கவைத்தது.

அவள் விகடன் ஜாலி டே
அவள் விகடன் ஜாலி டே

இடையிடையே டிஜே ஷாம் ஜாலியான கமெண்ட்ரி போல பாடல்களை ஒலிக்கவிட்டு வாசகிகளை உற்சாகப்படுத்தினார். பர்கர் சாப்பிடும் போட்டி, மதிப்பிடும் போட்டி, மியூஸிக் சேர், காணொலியைப் பார்த்து விடை சொல்லுதல் என `ஆன் தி ஸ்பாட்’ போட்டிகளில் பொறி பறந்தது. நடிகர் டி.எஸ்.கே மிமிக்ரி, மாணவிகளின் துள்ளல் நடனம், பாட்டிகளின் ஸ்டேஜ் பர்ஃபாமன்ஸ் என ஒவ்வொன்றும் ரசனைக்கு விருந்து!

அவள் விகடன் ஜாலி டே
அவள் விகடன் ஜாலி டே

திடீரென வேட்டி, சட்டை சகிதமாக நடிகர் கவின் மேடையில் தோன்ற... சர்ப்ரை ஸான வாசகிகள் விசிலடித்து வரவேற்பு கொடுத்தனர். வாசகி ஒருவர் தன் ப்ரியமான `கவின் அண்ணா’வுக்கு நினைவுப் பரிசு வழங்கி ஆனந்தக் கண்ணீர் விட்டார். நடிகர் கவின் `வெறித்தனம்' பாடலுக்கு ஆட, நம் வாசகிகளும் ஆடி மெர்சல் காட்டினர்!

பரிசுகளை அள்ளிய ஸ்ரீரங்கம் சுமித்ரா, “ஜாலி டே போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளுடன் சென்றால் அக்கம்பக்கத்தினரும் எனது திறமையை மதிக்கிறார்கள். இதற் காகவே அவள் விகடனுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்'' என்றார். திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான ரேவதி, “பெண்களுக்குத் தன்னம்பிக்கையை விதைக்கிற இந்த ஜாலி டே அடுத்து எப்போ வரும் என்று காத்திருக்கிறேன்” என்றார் ஆர்வமாக..

அவள் விகடன் ஜாலி டே
அவள் விகடன் ஜாலி டே

``அவள் விகடன் ஜாலி டே அறிவிப்பு வந்ததிலிருந்து, எங்க பொண்ணுங்க அடம் பிடிச்சுக்கிட்டே இருந்தாங்க. இங்கே எங்களுக்கு 20,000 ரூபாய் மதிப்புள்ள பரிசுகள் கிடைச்சிருக்கு. அவள் விகடன், தனது வாசகிகளை இவ்வளவு சந்தோஷமாக வைத்திருக்கும் என நினைக்கவே இல்லை” என மேடையிலேயே மகிழ்ந்தார் வரகனேரி லதா சின்னதுரை. அதை ஆமோதித்து அனைவருமே கைதட்ட விழா நிறைவாக முடிந்தது!

வெ.கெளசல்யா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism