`அடடடடா... இவ்ளோ விஷயங்கள் கொட்டிக்கிடக்கே?!' - #AllNewAvalVikatan-க்கு வாசகியின் ரிவ்யூ

தலையங்கம், லைஃப் ஸ்டைல், சமையல், தன்னம்பிக்கைத் தொடர்கள், ஹெல்த், என்றிருந்த ஆர்டரை அப்படியே திருத்தி, தலையங்கம், என்டர்டெயின்மென்ட், ஹெல்த், தொடர்கள், லைஃப் ஸ்டைல் தன்னம்பிக்கை என வந்திருக்கும் புதிய ஆர்டருக்குள் அத்தனை விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன.
20 முதல் 60 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு மாதம் இருமுறை வரும் இதழில் 'ஆல் நியூ ஆல் நியூ' எனச் சொல்கிறார்களே... அப்படி சொல்லும்படியாக என்ன பெரியதாக இருந்துவிட முடியும் என்ற எண்ணத்துடன் அவளை இனி உங்களால் அணுக முடியாதுபோல. காரணம் அத்தனை புதுசு, அத்தனையும் புதுசு.
தலையங்கம், லைஃப்ஸ்டைல், சமையல், தன்னம்பிக்கை தொடர்கள், ஹெல்த் என்றிருந்த ஆர்டரை அப்படியே திருத்தி, தலையங்கம், என்டர்டெயின்மென்ட், ஹெல்த், தொடர்கள், லைஃப்ஸ்டைல், தன்னம்பிக்கை என வந்திருக்கும் புதிய ஆர்டருக்குள் அத்தனை விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன.

'30 வகை சுண்டல் செய்வது எப்படி?', 'அதை வைத்து இதை செய்வது எப்படி?' போன்ற சமையல் குறிப்புகளில் இருந்து சற்றே விலகி தாமுவிடம் சந்தேகங்கள் கேட்கப்படும் பகுதியும், பெண்களுக்கான அரசுத் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் தொடரும், இவை இரண்டைவிடவும் 'சேவையே வாழ்க்கை' எனத் தங்கள் வாழ்க்கையை அர்த்தம் நிறைந்ததாக மாற்றிக்கொண்டு சமூகத்திற்கு சேவையாற்றி வரும் உன்னத பெண்மணிகளை வாசகர்களுக்கு அடையாளம் காட்டும் வண்ணம் வந்திருக்கும் 'சேவைப் பெண்கள்' தொடரும் மிகுந்த கவனம் ஈர்த்தன. ஏற்கெனவே வெளிச்சத்தில் இருப்பவர்களை மட்டுமல்லாது, நாடு முழுக்கப் பரவிக் கிடக்கும் சேவை நோக்குடைய தமிழ் தேவதைகள் பலரையும் இத்தொடர் மூலம் நாம் அறிந்துகொள்வோம் என்ற நம்பிக்கையுடனும், இப்புதிய 8 தொடர்கள் குறித்த அதிக எதிர்பார்ப்புடனும் we are waiting for further episodes. :)
புத்தகங்களில், பத்திரிகைகளில் வந்த வித்தியாசமான சமையல் குறிப்புகளைத் தேடிப்பார்த்து ஆச்சர்யப்பட்ட தலைமுறையைச் சேர்ந்தவள் நான். ஆனால் தொழில்நுட்பத்தின் உதவியால் 'சுடுநீர் காய்ச்சுவது எப்படி?' என்பதற்குக்கூட சுமார் 200 யூடியூப் சேனல்கள் பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்தில், ஏட்டில் படிக்கும் சமையல் குறிப்பைவிட விரல் நுனியை நகர்த்தினால் வரும் சமையல் வீடியோக்களின் மவுசு அதிகம் என அவள் விகடன் குழு உணர்ந்திருப்பார்கள் போலும். அதனால்தான் வழக்கமான சமையல் குறிப்புகள் என்ற patternலிருந்து சற்றே விலகி, சமையல் சந்தேகங்களுக்கான தீர்வுகள் பகுதி தெரிகிறது.

இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாததாகிவிட்ட ஸ்மார்ட் கேட்ஜெட்ஸை இல்லத்தரசிகளுக்கும் புரியும் வகையில் எளிமையாக விளக்க ஆரம்பமாகியிருக்கும் கேட்ஜெட் கிளாஸ் ரூம் தொடரால், 'இது என்னன்னு தெரியல கொஞ்சம் பார்த்துக் கொடுங்களேன்' எனப் பிள்ளைகளின் பின் சுற்றிய, தொழில்நுட்ப வளர்ச்சியின் முதல் படியில் நிற்கும் அம்மாக்கள்கூட, இன்னும் கொஞ்ச நாள்களுக்குள் 'அந்த ஆப்பில இந்த அப்டேட் வந்து இருக்கே?' எனப் பிள்ளைகளுக்கு அப்டேட்ஸ் கொடுத்தாலும் ஆச்சர்யம் இல்லை.
இதழியலில் ஆர்வம் உள்ள பிள்ளைகளுக்காக எட்டு பக்கங்கள்! வளரும் வயதில் விகடன் போன்ற ஒரு பெரிய நிறுவனத்தில் எல்லோருக்கும் கிடைக்காத ஓர் அரிய வாய்ப்பு எனலாம். அனுபவம் வாய்ந்த எடிட்டோரியல் நடுத்தர வயதுப் பெண்களை டார்கெட் பண்ணுமெனில் , 2கே கிட்ஸ்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இந்த 8 பக்கங்கள் இளைய தலைமுறையைக் கவர்ந்திழுக்கும்படி பேலன்ஸ் செய்ய உதவும் என்றும் நம்பலாம்.
லைக்ஸ்!
1. அள்ள அள்ளக் குறையாமல் அடுத்து அடுத்து வந்த பக்கங்கள். Time and motion study என கார்ப்பரேட் ஆஃபீஸ்களில் ஒரு பதம் உண்டு. ஒரு வேலையைச் செய்ய ஆகும் நேரத்தைக் கணக்கிடுவதை T&M என்போம். நியூ அவளை வாசிக்க ஆன T&Mஐ கணக்கிட்டால், வழக்கமாக ஆகும் நேரத்தைவிட அதிக நேரம் ஆகும் எனத் தோன்றுகிறது
2. 'இப்படியா சாப்பிடுவ நீ ? சாப்பிடத் தெரியாதா?' போன்ற கேள்விகளை பால்யத்தில் கடந்து வந்தவர்கள்தான் நம்மில் பலரும். How to eat என்ற ஹேஷ் டாக்குடன் வந்திருந்த 1 பக்க ஆர்டிகிள்கள், அப்படத்தில் இருந்த ரவாதோசையைப் போலவே crispy

மிஸ்ஸிங்..!
1. கவிதை, ஹைக்கூ, பெண்களின் சுய முன்னேற்றத்திற்கும், out of the box thinkingக்கும் வழிகாட்டும் புத்தகங்கள் போன்றவற்றை அறிமுகப்படுத்தவும், மதிப்புரை செய்யவும் ஒரு பத்தியை ஒதுக்கலாம்.
2. அவள் விகடன் வாசக மனநிலைக்கு ஏற்ற வகையில் ஹியூமர், டிட் பிட் தகவல்கள், சமூகவலைதள ஹிட்ஸ் போன்ற பகுதிகளைக் கொண்டு வருவது எப்படி என்பது குறித்துப் பரிசீலிக்கலாம்.
- அனுசுயா எம்.எஸ்