Published:Updated:

`நான் இவ்ளோ நல்லா கானா பாடுவேன்னு எனக்கே அப்போதான் தெரிஞ்சுது!' - #BBC100Women இசைவாணி

கானா பாடகி இசைவாணி

``கானா பாடல்கள் எளிய மக்களுடைய மொழி. அவங்களுடைய உரிமைக்கான குரலை இது மூலமா மட்டும்தான் எழுப்ப முடியும்." என்கிறார் இசைவாணி.

`நான் இவ்ளோ நல்லா கானா பாடுவேன்னு எனக்கே அப்போதான் தெரிஞ்சுது!' - #BBC100Women இசைவாணி

``கானா பாடல்கள் எளிய மக்களுடைய மொழி. அவங்களுடைய உரிமைக்கான குரலை இது மூலமா மட்டும்தான் எழுப்ப முடியும்." என்கிறார் இசைவாணி.

Published:Updated:
கானா பாடகி இசைவாணி

பிபிசியின் 2020-ம் ஆண்டின் உலக டாப்-100 பெண்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. மிகவும் கடினமான சூழலிலிருந்து வாழ்க்கையில் முன்னேறிய நம்பிக்கையும் ஊக்கமும் உள்ள, உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் இதற்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.

கானா பாடகி இசைவாணி
கானா பாடகி இசைவாணி

இம்முறை இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார் சென்னையைச் சேர்ந்த 24 வயதான கானா பாடகி `இசைவாணி'. இவர் இயக்குநர் பா.இரஞ்சித்தின் `கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் (Casteless Collective)' என்ற கானா இசைக் குழுவைச் சேர்ந்தவர்.

தான் பாடும் கானா பாடல்களின் வழியே அரசியல் அவலங்களையும், சமூகத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும் மக்களின் கஷ்டங்களையும் மற்றவர்களுக்கு எடுத்துரைத்து வருகிறார் இசைவாணி. அவரிடம் பேசினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே வடசென்னையில்தான். அம்மா, அப்பா, நான், அண்ணன்னு எங்க குடும்பம் ரொம்ப சின்னது. என் அப்பா சிவகுமார் நல்லா ஹார்மோனியம் வாசிப்பார். கோயில் திருவிழாவின்போது நடைபெறும் இன்னிசை நிகழ்ச்சி, கச்சேரி போன்ற கலை நிகழ்ச்சிகளில் இசைக்கலைஞரா வேலை பார்த்துட்டு இருந்தார். நானும் சின்ன வயசுல எங்கள் தெருவுல நடக்குற கோயில் விழாக்கள்லயும், சில கச்சேரிகள்லயும் சினிமா பாடல்கள் பாடியிருக்கேன். ஆனாலும் இசை, பாடல்கள் மேல எனக்கு பெருசா ஆர்வம் இருந்தது கிடையாது.

கானா பாடகி இசைவாணி
கானா பாடகி இசைவாணி

ஒரு கட்டத்துல வீட்டுல ரொம்ப பணக்கஷ்டம். என்னால ஸ்கூலுக்கே போக முடியாத நிலைமை ஏற்பட்டுச்சு. ப்ளஸ் டூ படிச்சிட்டு இருக்கும்போது பாதியிலேயே படிப்பை நிறுத்திட்டேன். எனக்கு நிறைய படிக்கணும்னு ஆசை. நல்லா படிப்பேன். வகுப்புத் தேர்வுகளில் ஒருமுறை கூட தோல்வியடைஞ்சது கிடையாது. ஆனா, இனிமேல் படிக்கவே முடியாதுன்னு ஆன பிறகு, முழுசா நொறுங்கிப்போயிட்டேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமா மீண்டு, குடும்ப கஷ்டத்தை மனசுல வச்சு சின்னச் சின்ன வேலைகள் செஞ்சிட்டு இருந்தேன். வெளியூர்களுக்குச் சென்று கச்சேரிகளில் பாடுவேன். அப்படி ஒருமுறை கச்சேரியில் பாடிட்டு இருந்தபோது அங்க உள்ள இளைஞர்கள் எல்லாம் `நீ சென்னையில இருந்துதானே வந்துருக்க... ஒரு கானா பாட்டுப் பாடு'ன்னு கத்த ஆரம்பிச்சிட்டாங்க. கானா பாட்டுலாம் பாடி எனக்கு பெருசா பழக்கமில்ல. அவங்க கேட்டுக்கிட்டாங்கன்னு எனக்குத் தெரிஞ்ச சில கானா பாடல்களைப் பாடி டிரை பண்ணிப் பார்த்தேன். நான் இவ்ளோ நல்லா கானா பாடுவேன்னு எனக்கே அங்கதான் தெரிய வந்துச்சு. எல்லாரும் பாராட்டினாங்க.

பா.இரஞ்சித்துடன் இசைவாணி
பா.இரஞ்சித்துடன் இசைவாணி

என் அப்பா அடிக்கடி சொல்ற ஒரு விஷயம்,``பிறந்தோம், வாழ்ந்தோம், செத்தோம்ன்னு இருக்கக் கூடாது. ஏதாவது சாதிக்கணும்." அப்படி என் வாழ்க்கையில சாதிக்க இந்த கானா பாடல்கள் கை கொடுக்கும்னு நம்பினேன். என் முழு கவனத்தையும் அதுல செலுத்தத் தொடங்கினேன். ஆரம்பத்துல நான் கானா பாட்டு பாடுறதுக்கு எங்க வீட்டுல இருந்தே எதிர்ப்பு வந்துச்சு. அதையெல்லாம் ஆண்கள்தான் பாடுவாங்கன்னு சொன்னாங்க. ஆனா, நான் என் முடிவுல உறுதியா இருந்தேன். நிறைய கானா பாடல்கள் பாடத் தொடங்கினேன். இந்த நேரத்துலதான் பா.இரஞ்சித் அண்ணனோட `கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்' பத்தி தெரிய வந்துச்சு. அந்தக் குழுவுல சேர்ந்த பிறகு `கானா பாடல்கள்' எனக்கான முழு அடையாளமா மாறிடுச்சு.

சாதாரணமான கானா பாடல்களைப் பாடிட்டு இருந்த நான், அதன் பிறகு அரசியல் அவலங்கள் குறித்தும், ஏழை எளிய, சமூகரீதியில் பின்தங்கிய மக்கள் மற்றும் நசுக்கப்படுகிற அவங்களோட உரிமைகள் பத்தியும் பாடத் தொடங்கினேன். எங்களோட கருத்துகள் எளிமையா எல்லா மக்களையும் சென்று சேர்ந்துச்சு. கானா பாடல்கள் எளிய மக்களுடைய மொழி. அவங்களுடைய உரிமைக்கான குரலை இது மூலமா மட்டும்தான் எழுப்ப முடியும்.

நிறைய பெண்களுக்கு கானா பாடல்கள் பாட விருப்பம் இருந்தாலும் பல தயக்கங்களால அவங்க பாடுறது இல்ல. நான் இந்தத் துறைக்குள்ள வந்த பிறகு நிறைய பெண்கள் என்னைத் தொடர்புகொண்டு பேசி, அவங்களோட `கானா கனவு' பத்தி சொல்லிருக்காங்க. சிலர் கானா பாடல்களைப் பாடி எனக்கு அனுப்பிருக்காங்க. அவங்களுக்கெல்லாம் என்னால முடிஞ்ச உத்வேகத்தை என் பாடல்கள் மூலமாகவும், செயல்கள் மூலமாகவும் கொடுத்துட்டு வர்றேன். பெண்கள் நிச்சயமா அவங்களுக்குப் பிடிச்ச துறையில சாதிக்கணும். அதுக்கு எத்தனை தடைகள் இருந்தாலும் தாண்டி வரணும்" என்கிறார் இந்த இசைக்குயில்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism