லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

சேனல் சைட் டிஷ்

சேனல் சைட் டிஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
சேனல் சைட் டிஷ்

'எனக்கு கல்யாணமா...?'

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் ரித்திகா, திடீரென ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்து மூன்றே வாரங்களில் எலிமினேட்டும் ஆனார். `ரித்திகாவுக்கு உடம்பு சரியில்லை' என அவரின் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் களேபரத்தை உண்டு பண்ண, அதையே லீடாக வைத்து அவரிடம் பேசினோம்.

‘`அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க. திடீர்னு லோ பி.பி ஆயிடுச்சு. ஷூட்டிங்ல பிசியா இருந்ததால ஹெல்த்தை கவனிக்காம விட்டுட்டேன். அதான் வீட்டுலயே உக்கார வெச்சு ட்ரிப்ஸ் ஏத்த வெச்சிட்டாரு மிஸ்டர் லோ பி.பி. இப்ப ஐம் ஆல்ரைட்’’ என கலகலப்பானார்.

ரித்திகா
ரித்திகா

உங்க மீடியா பயணம் எங்க ஆரம்பிச்சது..?

``நான் கோயம்புத்தூர் பொண்ணுங்க. எம்.எஸ்ஸி சாஃப்ட்வேர் சிஸ்டம்ஸ் படிச்சேன். காலேஜ் புரொஃபசர் ஆகணும்ங்குறதுதான் என் ஆசை. காலேஜ் படிக்கறப்பவே பார்ட் டைமா ஆங்கரிங் பண்ணிட்டு இருந்தேன். கார்ப்பரேட் ஈவென்ட்ஸ் ஹோஸ்ட் பண்ணியிருக்கேன். சில வருஷங்களுக்கு முன்ன டிக்-டாக், டப்ஸ்மாஷ் டிரெண்டானபோது நானும் என் ஃபிரெண்ட்ஸோட சேர்ந்து டிக்-டாக், டப்ஸ்மாஷ் பண்ண ஆரம்பிச்சேன். சிலதை என் இன்ஸ்டா பக்கத்துல போஸ்ட் செய்தேன். டிக்-டாக்ல நான் பர்ஃபார்ம் செய்ததைப் பார்த்துட்டுதான் மீடியா வாய்ப்பு வந்தது.

உங்க இன்ஸ்டா பேஜ்ல `தமிழ் ரித்திகா'னு பெயர் வெச்சிருக்கீங்களே...

என் சர்டிஃபிகேட் பேரு தமிழ்ச்செல்வி. மீடியாவுக்காக ரித்திகான்னு வெச்சிக்கிட்டேன். ரெண்டு பெயர்லயும் என்னைத் தெரிஞ்சவங்க இருக்காங்க.

குழப்பம் வந்துடக் கூடாதுன்னு இன்ஸ்டாவுல `தமிழ் ரித்திகா'னு வெச்சிக்கிட்டேன்.

நீங்க மதுரை முத்துவோட ஃபீமேல் வெர்ஷனாமே..?

ஹா... ஹா... `குக் வித் கோமாளி’ ஷோ கடைசி எபிசோடுல பாலாவுடன் கவுன்ட்டர் போட்டுட்டே இருந்தேன். `முத்து அண்ணாதான் இப்படி பண்றார்னா நீயும் இப்படிப் பண்றியேம்மா'னு பாலா அந்த எபிசோடுல சொன்னாரு. அப்படித்தான் மதுரை முத்துவோட ஃபீமேல் வெர்ஷன்னு எனக்கு பேரு வந்துச்சு. அன்னிக்கு பாலா சொன்னதை எல்லாரும் புடிச்சுக்கிட்டாங்க.

உங்களுக்குக் கல்யாணம்னு சொல்றாங்க... நிஜமாவா?

செம்ம ஃபன்... முன்னாடி ‘காதலே காதலே’ ஷோ பண்ணியிருந்தேன். அந்த ஸ்டேஜ்ல கன்டென்ட்டுக்காக பாலாவை என்கிட்ட புரொபோஸ் பண்ணச் சொன்னாங்க. பாலா காமெடி பண்ணி மக்கள் பார்த்திருக்காங்க, காதல் பண்ணிப் பார்த்ததே இல்லை. அந்தப் பையனுக்குள்ள இருக்குற ரொமான்டிக் சைடை வெளிய கொண்டு வரத்தான் அப்படிப் பண்ணினாங்க. `ஸாரி பாலா, அடுத்த மாசம் எனக்கு கல்யாணம்'னு காமெடியா சொன்னேன். அதுக்கு அவர் ‘அப்ப தர்ஷா குப்தாவுக்குதான் கேட்டரிங் கான்டராக்ட்’னு காமெடியா ஒரு கன்டென்ட் போட்டாரு. இதுதான் நடந்துச்சு. இப்ப வரைக்கும் அடுத்த மாசம் உங்களுக்குக் கல்யாணமா, கல்யாணமான்னு கேட்டுக்கிட்டே இருக்காங்க. எனக்கு கல்யாணம்னு என் அப்பா அம்மாவுக்குக்கூட தெரியாது. ஏன் எனக்கேகூட தெரியாதுங்க. ஆனா, ஊருக்கே தெரிஞ்சிருக்கு.''

இது வேற லெவல் லவ்...

ஷூட்டிங் இல்லாத நேரத்துல சின்னத்திரை நடிகைகள் என்ன பண்ணுவாங்க... அவங்களுக்கு என்னவெல்லாம் பிடிக்கும்? சும்மா கேட்டுவெச்சோம்... சமையல் முதல் பெட்ஸ்வரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை...

சேனல் சைட் டிஷ்

சாப்பாட்டு லவ்வர் லதா ராவ்

`சமைக்கப் பிடிக் குமா, சாப்பிட பிடிக் குமா'னு கேட்டா...எனக்கு சாப்பிடத்தான் பிடிக்கும். அதுக்காக எனக்கு சமைக்கத் தெரியாதுன்னு நினைச்சுடாதீங்க. சூப்பரா சமைப்பேன். ஷூட்டிங் போற இடங்கள்ல டேஸ்ட்டியான சாப்பாடு கிடைக்குற கையேந்தி பவன்களைத் தேடிக் கண்டுபிடிச்சிடுவேன். எந்த ஊர்ல என்ன சாப்பாடு நல்லா இருக்கும், எங்க சாப்பிடலாம்னு கேட்டா புட்டுபுட்டு வைப்பேன். சாப்பாட்டுக்கு அடுத்து கோயில்கள், கர்னாடிக் சாங்ஸ், எஸ்.பி.பி... என் ஃபேவரைட்ஸ்.

சேனல் சைட் டிஷ்

பெட் லவ்வர் சந்தியா

னிமல்ஸ்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். ப்யூரஸ்ட் ஃபார்ம் ஆஃப் லவ்வை நான் உணர்ந்தது விலங்குகள்கிட்ட தான். பெட்ஸ் வளர்க்க ஆரம்பிச்சதுல இருந்து எங்க வீட்டுல மொத்த ஃபேமிலியுமே வெஜிடேரியனா மாறிட்டோம். தெரு நாய்கள்ல ஒரு நாய்க்காவது தினமும் சாப்பாடு கொடுக்கிறதை கொள்கையா வெச்சிருக்கேன். பெட் வளர்க்குறது, ஒரு குழந்தையை வளர்க்குறதுக்கு சமம். அந்த அளவுக்கு கமிட்மென்ட் இருக்கணும்.

சேனல் சைட் டிஷ்

சாரி லவ்வர் நீலிமா

சங்கி இருக்குற சேலையை அயர்ன் பண்ணுறப்போ அதோட கஷ்டத் தையே தீர்த்து வெச்ச அளவுக்கு அப்படி ஒரு ஃபீல் கிடைக்கும். அந்த அளவுக்கு சாரீஸ்ன்னா எனக்கு உயிர். விதவிதமா பட்டுப்புடவைகள் எடுக்குறதுல இருந்து சமீபத்துல கைத்தறிப் புடவைகளுக்கு மாறியிருக்கேன். கைத்தறிப் புடவைகளை நெய்யறவங்ககிட்ட நேரடியாவே போய் வாங்கிடுவேன். அந்த திருப்தி பெரிய ஜவுளிக்கடைகள்ல எடுத்தப்போகூட எனக்குக் கிடைச்சதில்ல.

சேனல் சைட் டிஷ்

டிரைவிங் லவ்வர் அபிதா

`தி
ருமதி செல்வம்' சீரியல்ல மட்டுமல்லீங்க நிஜ வாழ்க்கையிலும் அபிதா செம பொறுப்பான குடும்பத் தலைவிதான். குழந்தைங்களைப் படிக்க வைக்குறது, பார்த்துக்குறதுன்னு நேரம் போறதே தெரியாது. கேரளா ஸ்பெஷலாகட்டும், தமிழ்நாட்டு விருந்தாகட்டும், எல்லாத்தையும் பிரமாதமா சமைப்பேன். தனியா கார்ல லாங் டிரைவ் போகணும்னா வேற லெவல் குஷி ஆகிடுவேன்.

சேனல் சைட் டிஷ்