Published:Updated:

சேனல் சைட் டிஷ்

சேனல் சைட் டிஷ்
பிரீமியம் ஸ்டோரி
சேனல் சைட் டிஷ்

#Entertainment

சேனல் சைட் டிஷ்

#Entertainment

Published:Updated:
சேனல் சைட் டிஷ்
பிரீமியம் ஸ்டோரி
சேனல் சைட் டிஷ்

ரிமோட் ரீட்டா

பிக் பாஸே பார்க்கிறதில்லை-ஜூலி

பிக் பாஸ் முதல் சீஸனிலேயே பரபரப்பைக் கிளப்பியவர் ஜூலி. நீட் தேர்வை எதிர்த்து தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் சுயசரிதையான `Dr.அனிதா M.B.B.S' என்ற படத்தில் நடித்து வந்தார். சமீப காலமாக இவரின் போட்டோஷூட்கள் கவனம் ஈர்க்கின்றன. கடற்கரை மணலுக்குள் புதைந்துகிடைப்பது போன்ற போட்டோஷூட் சமீபத்திய வைரல்.

பிக் பாஸுக்குப் பிறகு மீண்டும் பரபரப்பாகியிருக்கும் ஜூலியிடம் ஒரு ஜாலி பேட்டி...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திடீர்னு கிளாமர் பக்கம் போயிட்டீங்கபோல?

அந்த போட்டோஷூட்ல என் கையும் காலும் தவிர வேறு எதுவும் தெரியல. அப்புறம் எப்படி அதை கிளாமர்னு சொல்ல முடியும். கிளாமர்ங்கிறது உங்க பார்வையிலதான் இருக்கு.

தமிழ்ப்பொண்ணு இப்படித்தான் டிரஸ் பண்ணு வாங்கன்னு ஒரு வரையறையை வெச்சுக்கிறாங்க. அந்தக் காலத்துல பாட்டிங்க எல்லாம் ஜாக்கெட் இல்லாமதான் புடவை கட்டுனாங்க. அதை கிளாமர்னு சொல்வாங்களா? அதே மாதிரி இப்போ டிரஸ் பண்ணினா அதை கிளாமர்னு சொல்றாங்க.

எதைக் காட்டக் கூடாதோ அதைக் காட்டல. அதை கிளாமர்னு சொன்னாங்கன்னா, அதே மாதிரி நிறைய பண்ணுவேன்.

வெள்ளித்திரை பக்கம் எப்போ வரப்போறீங்க?

ஒரு பெரிய புரொடக்‌ஷன்ல லீட் ரோல்ல கமிட் ஆகியிருக்கேன். அதைப் பத்தி வெளில பேசக் கூடாதுன்னு டைரக்டர் சொல்லியிருக்காங்க. மொத்தம் நாலு படங்கள் கைவசம் இருக்கு.

Dr.அனிதா M.B.B.S படம் என்னாச்சு?

ஷூட்டிங்லாம் தொடங்கி நடந்துச்சு. அனிதாவோட குடும்பம், ஒரு கேஸ் போட்டிருக்கிறதால படத்தை நிறுத்தி வெச்சிருக்காங்க.

பிக் பாஸ்-4 பார்க்கிறீங்களா?

நான் கலந்துகிட்ட முதல் சீஸன் எபிசோட்ஸையே இன்னும் பார்க்கல. ஒரு மணி நேரம் ஷோவை பார்த்துட்டு யாரையும் ஜட்ஜ் பண்ணாதீங்கன்னு நான் சொல்லிட்டு இருக்கேன். அப்புறம் நானே அதைப் பார்த்துட்டு கருத்து சொல்றது நல்லாயிருக்காதுல்ல. பிக் பாஸ் நிகழ்ச்சியை ரெவ்யூ பண்றதுக்குக்கூட கேட்டாங்க. ஒரு மணி நேர நிகழ்ச்சியில எதைக் காட்டுவாங்க, எதைக் காட்ட மாட்டாங்கன்னு எனக்குத் தெரியும். அது தெரிஞ்சே உள்ளே இருக்கிறவங்க கேரக்டரை விமர்சனம் செய்யறது சரியா இருக்காது. அதனால நான் பிக் பாஸே பார்க்கிறதில்லை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நான் அதுக்கு சரிப்படமாட்டேன் - மலர்

“சின்ன வயசுல எனக்குப் பெயரே வாயாடிதான்!” செய்தி வாசிப்பாளர் மலர் அவருக்கே கொடுத்துக்கொள்ளும் இன்ட்ரோ இது. குழந்தையாக இருந்தபோது, தூர்தர்ஷனில் ஷோபனா ரவியைப் பார்த்து செய்தி வாசிப்பில் ஆர்வம் அரும்பியிருக்கிறது மலருக்கு. பெற்றோர் மீடியா துறைக்கு அனுப்பத் தயங்க, அடம்பிடித்து, தனது கனவைக் கைப்பற்றியிருக்கிறார். ஆறு ஆண்டுகளாகச் செய்தி வாசிப்பாளராக இருக்கும் மலர் தற்போது சன் நியூஸில் ப்ரைம் டைம் நியூஸ் ரீடர்.

“டிவில ஒருநாள் நியூஸ் படிச்சுக் காட்டுறேன் பாருங்கன்னு சின்ன வயசுல அப்பாகிட்ட சொல்லிட்டே இருப்பேன். இந்தத் துறையில எந்த சப்போர்ட்டும் இல்லாம சுயமா முயற்சிசெஞ்சு இந்த இடத்தை அடைஞ்சிருக்கேன்.

சேனல் சைட் டிஷ்

இப்போ நியூஸ் ரீடிங் தாண்டி மாடலிங்கும் பண்ணிட்டு இருக்கேன். மில்கி மிஸ்ட், அப்போலோ ஹாஸ்பிட்டல்னு பல விளம்பரங்கள்ல என்னைப் பார்த்திருப்பீங்க.

சீரியல்ல லீட் ரோல்ல நடிக்க நிறைய ஆஃபர்ஸ் வருது. ஆனா, அதுல கண்டிப்பா எனக்கு ஜோடி யாராவது இருப்பாங்க. அவங்க ளோடு நெருக்கமான காட்சிகள்ல நடிக்க வேண்டி இருக்கும். அதனாலேயே தயக்கமா இருக்கு. எனக்கு கிளாமரா டிரஸ் பண்ணப் பிடிக்காது. நான் அதுக்கு சரிப்பட மாட்டேன். அந்த மாதிரி காட்சிகள்லாம் இல்லாம, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற மாதிரி, என் கொள்கை களுக்கும் செட்டாகுற மாதிரி கேரக்டர் வந்தா நிச்சயம் நடிப்பேன்”

- ஸ்ட்ரிக்ட் ஆபீசராக சொல்லும் மலருக்கு விரைவில் டும் டும் டும்!

அட்வான்ஸ் வாழ்த்துகள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜீன்ஸ், ஷார்ட்ஸ் போட்டா தப்பான பொண்ணா? - ‘குக் வித் கோமாளி’ தர்ஷா குப்தா

போட்டோஷூட் பிரபலங்கள் ரம்யா பாண்டியனும், ஷிவானியும் பிக் பாஸ் வீட்டில் பிசியாக இருக்க, வெற்றிடத்தை நிரப்ப வந்திருக்கிறார் தர்ஷா குப்தா.

சீரியல் நடிகையான இவரும் இன்ஸ்டாவில் வெளியிடும் போட்டோஷுட்டுகள் மூலம் பிரபலமானவரே. பூர்வீகம் கேரளாவாம். ஆனாலும் கோயம்புத்தூர் பொண்ணாம். விஜய் டி.வி-யில் ‘குக் வித் கோமாளி’, ‘செந்தூரப்பூவே’ தொடர் மற்றும் ஜீ5 ஓடிடியில் ‘தந்து விட்டேன் என்னை’ வெப் சீரிஸ் என பரபரப்பாக இருக்கும் தர்ஷாவிடம் பேசினோம்.

குக் வித் கோமாளி அனுபவம் எப்படி இருக்கு?

நான் அசைவ உணவுகள் நல்லா சமைப்பேன். அப்பா மலையாளிங்குறதால எங்க வீட்டுல முக்கால்வாசி கேரள முறை சமையல்தான். பழம் பொரிச்சது, புட்டு, கடலைக்கறி, ஆப்பம், இடியாப்பம், சிக்கன் வெள்ளைக் குழம்பு எல்லாம் செய்வேன்.

குக் வித் கோமாளி ஷோல அவங்க கொடுக்கிற 45 நிமிஷத் துக்குள்ள சமைக்க வேண்டியிருக்கு. கோமாளிகளுக்கு சமையல் பத்தி எதுவுமே தெரியாது. அவங்களுக்கு சொல்லிப் புரியவைக்கிறது ரொம்ப கஷ்டம். கோதுமை மாவு எடுத்துட்டு வரச் சொன்னா மைதா மாவு எடுத்துட்டு வருவாங்க. அவங்களை வெச்சுக்கிட்டு கொடுக்கப்பட்ட நேரத்துல சமைக்கிறது பெரிய சவாலாத்தான் இருக்கு.

`குக் வித் கோமாளி' டைட்டில் வின்னராகணும்ங்கிற லட்சியத்தோட வெறித்தனமா வேலை செஞ்சுகிட்டிருக்கேன். ஹோம் வொர்க் பண்ண வேண்டியிருக்கு. இப்ப நான் `செந்தூரப்பூவே' சீரியல்லயும், `தந்து விட்டேன் என்னை; வெப் சீரிஸிலும் நடிச்சிட்டிருக்கிறதால எனக்கு சமைக்க நேரமே இல்லை. எப்படியோ சமாளிச்சிட்டிருக்கேன்.

நடிக்க வர்றதுக்கு முன்னாடி நீங்க டீச்சராமே?

பெங்களூர்ல ஒரு தனியார் பள்ளியில் கம்ப்யூட்டர் சயின்ஸ், பரத நாட்டியம் ரெண்டும் டீச் பண்ணேன். சப்ஜெக்ட்ஸை தாண்டி பொது அறிவு, சுகாதார நடவடிக்கைகள், தமிழ், மலையாளம் மொழிகளும் கத்துக்கொடுத்திருக்கேன். எதிர் காலத்தில் எனக்கு எந்த வாய்ப்பும் இல்லாமப் போனாலும் டீச்சர் வேலைக்குப் போயிடுவேன். அந்த வேலை அவ்வளவு பிடிக்கும்.

சேனல் சைட் டிஷ்

இன்ஸ்டாகிராம்ல உங்க படங்கள்தான் உங்களுக்கான ரசிகர் வட்டத்தை உருவாக்கியிருக்கு. ப்ளான் பண்ணதா..?

இயல்பா நடந்ததுன்னுதான் சொல்லணும். ‘செந்தூரப்பூவே’ சீரியலுக்காக நிறைய காஸ்டியூம், அக்ஸஸரீஸ் வாங்க வேண்டியிருந்தது. இன்ஸ்டால போட்டோ போட்டோம்னா நிறைய ஸ்பான்சர்ஸ் கிடைப்பாங்கன்ற ஐடியாவுலதான் போஸ்ட் பண்ணேன். லாக்டெளன் டைம்ல அம்மாவோட புடவையைக் கட்டி ஜிமிக்கி போட்டு பூச்சூடி, சந்தனம் வெச்சு போட்டோ ஷூட் பண்ணேன். அது பெரிய அளவுக்கு ரீச் ஆகும்னு எதிர்பார்க்கலை.

கிளாமர் போட்டோ ஷூட்டுகளுக்கு ஏதாவது எதிர்ப்பு வந்திருக்கா?

‘அக்கா இந்த மாதிரி போட்டோ போடாதீங்க’ன்னு அக்கறையோட நிறைய பேர் சொல்லிருக்காங்க. நான் லைவ்ல பேசும்போது நிறைய நல்ல விஷயங்களைப் பேசுவேன். எனக்கு 450-க்கும் அதிகமா ஃபேன் பேஜ் இருக்குன்னா அதுக்கு காரணம் என் கேரக்டர்தான்.

என்னதான் கிளாமரா போட்டோஸ் போட்டாலும் அது வெளித்தோற்றம்தான். என் ரசிகர்களுக்கு அது தெரியும். ஜீன்ஸ், ஷார்ட்ஸ் போட்டா தப்பான பொண்ணுன்னு நினைக்குறவங்க இன்னும் இருக்காங்க. அதையெல்லாம் நான் பொருட்படுத்துறதில்லை. ‘முள்ளும் மலரும்’ சீரியல்ல வேலைக் காரி கதாபாத்திரத்துக்காக கொஞ்சம் கறுப்பா இருக்குற மாதிரி மேக்கப் போட்டு நடிச்சிருந்தேன். அந்த போட்டோஸை இப்போ எடுத்த போட்டோஸோடு ஒப்பிட்டு ‘காசு வந்தா காக்காகூட கலராகும்'னெல்லாம் ட்ரோல் பண்ணிருந்தாங்க. நான் கண்டுக்கிறதே இல்லை.

சினிமா வாய்ப்புகள் வருதா?

வருது. ‘குக் வித் கோமாளி’ ’செந்தூரப்பூவே’ ‘தந்துவிட்டேன் என்னை’-னு பிஸியா இருக்கிறதால தேதி கொடுக்க முடியலை. ஹீரோயினா தான் நடிப்பேன்னெல்லாம் கண்டிஷன் இல்லை. கிளாமர் தவிர்த்த நல்ல கேரக்டர்னா ஓகே.

‘சாம்-ஜாம்’ சமந்தா! களைகட்டும் தெலுங்கு ஓடிடி தளம்

டிடி பக்கம் வந்திருக்கும் லேட்டஸ்ட் பிரபலம் நடிகை சமந்தா.திருமணத்துக்குப் பிறகும் பிஸியான நாயகியாக நடித்துவரும் சமந்தா, ஏற்கெனவே ‘தி ஃபேமிலி மேன்’ என்ற ஓடிடி தொடரில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் குடும்பத்தினருக்குச் சொந்தமான ‘ஆஹா’ ஓடிடி தளத்தில் ‘சாம் ஜாம்’ என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கத் தொடங்கியுள்ளார். 10 எபிசோடுகளை கொண்ட இந்த நிகழ்ச்சியின் ஒவ்வோர் எபிசோடிலும் ஒரு பிரபலத்துடன் ஜாலி பேட்டி காண்கிறார்.

சேனல் சைட் டிஷ்

நிகழ்ச்சியின் முதல் எபிசோடில் ‘அர்ஜுன் ரெட்டி’ ஹீரோ விஜய் தேவரகொண்டா கலந்துகொண்டார். அடுத்த எபிசோடில் நடிகர் சிரஞ்சீவி கலந்துகொண்டார். இரண்டு எபிசோடுகளும் செம ஹிட். 10 எபிசோடுகளுக்கு ரூ.1.5 கோடி சம்பளம் பெறுகிறாராம் சமந்தா. சமந்தாவுக்காகவே இந்த ஷோவை பார்க்க ஆஹா ஓடிடி நோக்கிப் படையெடுத்துக்கொண்டிருக்கிறது ரசிகர் பட்டாளம்!

நீ கலக்கு பேபி!

இந்திய வெப் சீரிஸ்களில் டாப் 5

1) பாதாள் லோக் - Paatal Lok (Amazon Prime Video)

2) ஸ்பெஷல் ஓபிஎஸ் - Special Ops (Disney+ Hotstar)

3) பஞ்சாயத் - Panchayat (Amazon Prime Video)

4) அசூர் - Asur (Voot Select)

5) ஆர்யா - Aarya (Disney+ Hotstar)

தமிழ்த் தொலைக்காட்சி தொடர்களின் சென்ற வார TRP ரேட்டிங்

டி.ஆர்.பி டேட்டா

சேனல் சைட் டிஷ்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism