Published:Updated:

சேனல் சைட் டிஷ்

சேனல் சைட் டிஷ்
பிரீமியம் ஸ்டோரி
சேனல் சைட் டிஷ்

#Entertainment

சேனல் சைட் டிஷ்

#Entertainment

Published:Updated:
சேனல் சைட் டிஷ்
பிரீமியம் ஸ்டோரி
சேனல் சைட் டிஷ்

ரிமோட் ரீட்டா

வெண்பாவின் விபரீத ஆசை!

கலைஞர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் கன்னக்குழியழகி ஃபரீனா ஆசாத். விஜய் டி.வி-யில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் தந்திரக்கார வில்லி வெண்பாவாகக் கண்ணம்மாவை டார்ச்சர் செய்யும் ஃபரீனா நிஜத்தில் ரொம்பவே ஸ்வீட்.

சேனல் சைட் டிஷ்

“சீரியல்லதாங்க நான் வில்லி. நிஜத்துல நான் பயங்கர பாசக்காரி. நான் சூப்பரா மெஹந்தி போடுவேன். என் தோழிங்க எல்லாரும் என்கிட்ட மெஹந்தி போட்டுக்கதான் விரும்புவாங்க. குக்கிங்ல நான் ஆவரேஜ்தான். சைக்கிள்ல இருந்து ஆட்டோவரைக்கும் எல்லாமே டிரைவ் பண்ணத் தெரியும். அடுத்ததா லாரி ஓட்ட டிரை பண்ணிட்டு இருக்கேன். இது என் ரொம்ப நாள் ஆசையும் கூட. வடிவேலு ஸ்டைல்ல சொல்லணும்னா, ரிஸ்க் எடுக்குறது நமக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி” - படபடக்கும் ஃபரீனா ‘ஃபிட்னஸ் ஃப்ரீக்’காம்! ‘கடந்த ஆறு வருஷமா ஜிம்முக்கு போயிட்டு இருக்கேன். ஆனா, அப்பப்ப லீவு போட்டுடறேன். அதான் இன்னும் புசுபுசுன்னே இருக்கேன்” என்கிறார்.

கண்ணம்மா மாதிரி வாக் பண்ணுங்க, குறையுதா பார்ப்போம்!

டிரைவிங் குயின் ஜாக்குலின்!

விஜய் டி.வி-யின் ‘வாயாடி மங்கம்மா' ஜாக்குலின். ‘தேன்மொழி பிஏ’ சீரியல், ‘கோலமாவு கோகிலா’ படம் என நடிகை புரொமோஷன் பெற்ற பிறகு, ஹேப்பியாக இருக்கிறாராம். கார் டிரைவிங் என்றால் இன்னும் ஹேப்பியாகிவிடுவாராம் ஜாக்குலின்.

சேனல் சைட் டிஷ்

“எனக்குச் சின்ன வயசுல இருந்தே ஸ்பீடா கார் ஓட்டணும்னு ரொம்ப ஆசை. ஸ்கூல் படிக்கும்போதே கார் ஓட்ட கத்துக்கிட்டேன். ஆனா, நல்லா டிரைவ் பண்ண ஆரம்பிச்சது நாலு வருஷத்துக்கு முன்னாடி கார் வாங்குனதுக்குப் பிறகுதான். அப்புறம் என்ன... எங்க போனாலும் கார் சவாரிதான். எந்த கார் கொடுத்தாலும் ஓட்டுவேன். மனசாட்சியே இல்லாம 150, 160 கிலோ மீட்டர் ஸ்பீடுல போவேன். ஃபிரெண்ட்ஸோடு வெளியில போகும்போது நான்தான் டிரைவ் பண்ணுவேன். டைம் கிடைக்கும்போதெல்லாம் லாங் டிரைவ் போயிடுவேன்” என்று சிரிக்கிறார் ஜாக்குலின். சீட் பெல்ட் போடுவீங்களா?

சேலையும் சேவையும்...

கலைஞர் தொலைக்காட்சியில் தொகுப் பாளராகவும், செய்திகள் வெளியீட்டுப் பிரிவின் இணையாசிரியராகவும் பணிபுரிபவர் பனிமலர் பன்னீர்செல்வம். சோஷியல் மீடியாவிலும் தனக்கென தனி முத்திரை பதித்துள்ள இவருக்கு லட்சக்கணக்கில் ஃபேன் ஃபாலோயர்ஸ் உள்ளனர். யூடியூப் சேனலின் வழியே குக்கரி ஷோக்களை நடத்திவரும் இவர், சமீபத்தில் இன்ஸ்டா மாடலாகவும் மாறியுள்ளார். குறிப்பாக, இவரின் சேலை போட்டோஷூட்கள் அனைத்தும் அசத்தல் ரகம்.

சேனல் சைட் டிஷ்

``எனக்குச் சேலை அணியுறது ரொம்ப பிடிக்கும். அது நம்ம தோற்றத்தைக் கம்பீரமா எடுத்துக்காட்டும். சேலையில இருக்குற என் போட்டோக்களை இன்ஸ்டாவுல பார்த்துட்டு பொட்டிக் பிசினஸ் பண்ற சில பெண்கள் என்னை அணுகி அவங்க சேலை கலெக்‌ஷன்களுக்கு மாடலா இருக்க முடியுமான்னு கேட்டாங்க. எல்லாருமே ஆரம்ப நிலை பிசினஸ் பண்றவங்க. பல கஷ்டங்களைக் கடந்து சொந்தமா பிசினஸ் செய்யுறதுக்கு வந்தவங்க. அவங்களை ஊக்கப்படுத்தற விதமா அவங்களுக்கு மாடலா இருக்க சம்மதிச்சேன். இதுக்காக அவங்ககிட்ட பணம் எதுவும் வாங்க மாட்டேன். சொந்தக்கால்ல நிற்க விரும்புற பெண்களுக்கு ஏதோ என்னால முடிஞ்ச சின்ன உதவி”

- சேலையிலும் சேவையிலும் மனம் கவர்கிறார் பனிமலர்.

பெட்ஸ்தான் பெஸ்ட் கஸ்டமர்ஸ் - விஜே தாபா!

நேபாளத்திலிருந்து வந்து நகைச்சுவை நிகழ்ச்சித் தொகுப்பாளர், மிஸ்டர் அண்டு மிஸஸ் சின்னத்திரை போட்டியாளர் எனப் பல களங்கள் கண்டவர் தாபா. டான்ஸ் மாஸ்டர் ரகுவின் மனைவியாகி தமிழகத்து மருமகளானவர். லாக்டௌனுக்குப் பிறகு, செல்லப்பிராணிகளுக்கு ஆடைகளை டிசைன் செய்யும் புதிய பிசினஸில் களமிறங்கியிருக்கிறார்.

“ஏற்கெனவே மூணு வருஷமா டிசைன் ஸ்டூடியோ நடத்திட்டு வர்றேன். நடிகர் விஜய் சேதுபதி குடும்பத்துக்கு, சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்குனு டிசைன் ஸ்டூடியோ ஒருபக்கம் போயிட்டு இருக்கு.

சேனல் சைட் டிஷ்

நானும் ரகுவும் மிஸ்டர் அண்டு மிஸஸ் சின்னத்திரை சீஸன் 2-ல கலந்துகிட்டபோது ஒரே மாதிரி டிரஸ் டிசைன் பண்ணி போட்டுப்போம். அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மாகாபா அண்ணன், எப்படித்தான் இப்படி எல்லாம் புடிக்கிறீங்களோன்னு கலாய்ச் சிட்டே இருப்பாரு. அவரோட பப்பீஸுக்கு டிரஸ் தெச்சுத் தர முடியுமான்னு கேட்டாரு. சும்மா ஃபன்னாதான் ஆரம்பிச்சேன். நான் தைச்சுக் கொடுத்த டிரஸ்னு அவர் வீடியோல சொன்னதைப் பார்த்துட்டு தமிழ்நாடு முழுக்க இருந்து ஆர்டர் வரத் தொடங்கிருச்சு”

- பிசினஸ் என்ட்ரி சொல்லும் டிசைனர் தாபா, செல்லப்பிராணிகளைக்கூட அவங்க, இவங்க என மரியாதையாகப் பேசுகிறார்.

“அவங்களுக்கு அளவெடுக்கும்போதே சவால் தொடங்கிரும். சில பேர் சமர்த்தா இருப்பாங்க. சிலர் குலைப்பாங்க. அளவெடுத்து தைச்சுக் குடுக்குறதுக்குள்ள வளர்ந்துடுவாங்க. அதுனால ஸ்ட்ரெச் ஆகுற மெட்டீரியலா பார்த்து வாங்கித் தைக்கணும். அதுக்குதான் லேட் ஆகும்.அளவெடுக்கும்போது தொணதொணன்னு பேசமாட்டாங்க. இந்த டிசைன் வேணும், நெக் லோவா வைங்க, இந்த மாடல்ல தைங்கன்னு சொல்ல மாட்டாங்க. தைச்சுக் கொடுத்தாலும் கம்ப்ளெயின்ட் இல்லாம சமர்த்தாப் போட்டுப்பாங்க. அதனால பெட்ஸ்தான் பெஸ்ட் கஸ்டமர்ஸ்.”

- சர்டிஃபிகேட் கொடுத்துச் சிரிக்கிறார் தாபா.

நடிகையாகும் வீராங்கனை!

நடிகர்களைத் தொடர்ந்து விளையாட்டு வீரர்களும் ஓடிடி தளம் குறித்து கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். இந்த வரிசையில் இணைந்துள்ளார் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா.

சேனல் சைட் டிஷ்

`எம்டிவி நிஷேத்' என்ற வெப் சீரிஸ் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. பாலியல், கருக்கலைப்பு சம்பந்தமான விஷயங்களை இதில் சொல்லி இருந்தனர். தற்போது இந்தத் தொடரின் அடுத்த பாகத்துக்கு ‘எம்டிவி நிஷேத் அலோன் டுகெதர்' (MTV Nishedh Alone Together) என்று பெயர் வைத்துள்ளனர். காசநோய் பாதிப்பை மையமாகக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்தத் தொடரில் அறிமுகமாகிறார் சானியா. “காசநோய் நம் நாட்டில் தீராத நோயாக இருக்கு. கொரோனா காலத்துல நோய் பாதிப்பு இன்னும் அதிகரிச்சிருக்கு. இந்த நோய் குறித்த விழிப்புணர்வை `எம்டிவி நிஷேத் அலோன் டுகெதர்' தொடர் அழுத்தமாகப் பதிவு செய்யும். நான் இந்தத் தொடரில் நடிப்பது மாற்றத்தை ஏற்படுத்தும்னு நம்புறேன்” என்கிறார்.

சேனல் சைட் டிஷ்

நான் ரொம்ப கோவக்காரி!

‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி

விஜய் டி.வி-யின் சூப்பர் சிங்கர் வழியே நமக்கு அறிமுகமானவர் ஷிவாங்கி. தற்போது, அதே சேனலில் ‘குக் வித் கோமாளி’ ஷோவில் தன் காமெடி கலாட்டாக்களால் பட்டையைக் கிளப்பிவரும் இவரிடம் பேசி னோம். ‘இது ரொம்ப சீக்ரெட்’ என்று ஒரு விஷயத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலகலவென சிரித்த முகத்துடன் வலம்வரும் இவருக்கு கன்னாபின்னாவென கோபம் வருமாம். ‘நான் எதுக்கெடுத்தாலும் ரொம்ப டென்ஷன் ஆவேன். பதற்றப்படுவேன். எனக்கு ஆங்ஸைட்டி வந்துட்டா வீட்டுல எல்லாரையும் உண்டு இல்லன்னு பண்ணிடுவேன். ஆனா, வெளியில இது எதுவுமே தெரியாது. எனக்குப் பொறுமையே கிடையாது. நான் பொறுமையா உட்கார்ந்து மேக்கப்கூட பண்ணிக்க மாட்டேன். அதனாலதான் போட்டோஷூட்லாம் பண்றதே இல்ல. குக் வித் கோமாளி ஷோவுக்காக மட்டும் கஷ்டப்பட்டு பொறுமையா மேக்கப் பண்ணிக்கிறேன். இந்த ஷோவுல குக் நிறைய பேர் சமைக்க சொல்லிக்கொடுக்குறாங்க. ஆனா, எனக்குக் காய்கறி வெட்டவும், ஸ்டவ் பத்த வைக்கவும் மட்டும்தான் வருது!’ என்கிற ஆங்க்ரி பேர்டு ஷிவாங்கி, பட வாய்ப்புகள் வந்தால் நடிக்க ரெடியாம்.

சேனல் சைட் டிஷ்