லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 3

புதிர்ப் போட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
புதிர்ப் போட்டி

#Entertainment

லத்திகா சுகுமார்

மூளைக்கு வேலை என்றால் கூடுதல் உற்சாகத்தோடு கலக்கும் வாசகிகளே, விதவிதமான புதிர்ப் போட்டிகள் உங்களுக்காக இங்கே வரிசைகட்ட இருக்கின்றன. அந்த வரிசையில் இதோ... குறுக்கெழுத்துப் போட்டி. விடைகளையும் உங்களைப் பற்றிய விவரங்களையும் பூர்த்தி செய்து, தபால் மூலமாக அனுப்பலாம். பூர்த்தி செய்த படிவத்தைப் புகைப்படமாக எடுத்து avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அனுப்பலாம். கூடவே,

உங்கள் கையில் தவழும் இந்த இதழ் பற்றிய விமர்சனத்தை (குட்டு அல்லது ஷொட்டு) அதற்கென கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்துக்குள் ஐந்து வரிகளுக்கு மிகாமல் எழுத வேண்டும். சரியான விடைகளோடு, சிறப்பான விமர்சனத்தையும் எழுதும் 10 பேருக்கு தலா 500 பரிசுத் தொகை காத்திருக்கிறது. `புதிர்ப் போட்டி 1'-ன் முடிவுகள் அடுத்த பக்கத்தில்... `புதிர்ப் போட்டி 2'-ன் முடிவுகள் அடுத்த இதழில்...

இடமிருந்து வலம்:

1. ஒரு வகை புல்லின் வேர். தண்ணீரில் போட்டு வைப்பார்கள் (5)

8. பொருள்கள் வாங்கும் இடம் (2)

10. கல், முள் குத்துவதால் பாதத்தில் தோன்றும் தடித்த தோல் (2)

13. விதியை இதனால் வெல்லலாம் (2)

14. வற்றல் குழம்புக்கு சுட்ட... நல்ல காம்பினேஷன் (5)

15. நான் ஒரு சிந்து... (6)

17. இந்த உணர்ச்சியைக் கட்டுப்படுத்துதல் உடலுக்கும் பிறருக்கும் நல்லது (3)

18. நாட்டியத்துக்கும் கட்டடக்கலைக்கும் புகழ்பெற்ற ஊர் (6)

வலமிருந்து இடம்:

2. 1947, ஆகஸ்ட் 15 (6)

4. இதைத் திறந்தால் நீர்ப்பாசனத்துக்குத் தண்ணீர் கிடைக்கும் (3)

6. மிகப் பெரிய அலையாத்திக் காடு இங்கே

இருக்கிறது (6)

7. உரலுக்கு ஒரு பக்கம் இடி; இதற்கு இரு பக்கங்களிலும் இடி (5)

11. நான் என்றால் உதடு ஒட்டாது. ... என்றால் உதடு ஒட்டும் (2)

20. மகிழ்ச்சி என்பதை இப்படியும் அழைக்கலாம் (5)

மேலிருந்து கீழ்:

1. கருவிகள், ஆயுதங்கள், பாத்திரங்கள் செய்யப்படும் உலோகக் கலவை (5)

2. மூன்றாம் பிறை விஜி வளர்க்கும் நாய் (6)

5. அரிசி மாவைக் காய்ச்சி, சிறு வட்டங்களாக ஊற்றி, வெயிலில் காய வைத்து எடுத்து வைத்தால் இது தயார் (4)

12. இதுவும் மருந்தும் மூன்று நாள்கள் (4)

17. வாசலுக்கு அழகு சேர்க்கும் (3)

கீழிருந்து மேல்:

3. திமிங்கிலம்... போட்டு பால் கொடுக்கும் (3)

4. பூ (3)

9. ஐந்து வகை நிலங்களில் ஒன்று. வயலும் வயலைச் சார்ந்த இடமும். (4)

16. தமிழ் மாதங்களில் ஒன்று (4)

18. நின்றால் குடை,

அமர்ந்தால்... (6)

19. இசைக் கருவிகளில் ஒன்று. மண்ணால் செய்யப்பட்டிருக்கும் (3)

20. நெற்றியில் வைப்பது (5)

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 3

புதிர்ப்போட்டி - 1 முடிவுகள்

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 3

500 பரிசு பெறும் 10 வாசகிகள்

1. எம்.உமாராணி, திண்டுக்கல்

`அவள் பதில்கள்’ சேர்த்ததற்கு ஒரு ஷொட்டு... `போஸ்ட்’ சேர்க்காததற்கு ஒரு குட்டு... புதிய பகுதிகள் அனைத்துக்கும் ஒரு Good!

2. என்.உஷாதேவி, மதுரை-9

2கே கிட்ஸைத் தட்டிக்கொடுப்பது, சங்கு விற்கும் சாமான்யரிலிருந்து சாதனைப் பெண்கள் வரை கைதட்டி பாராட்டுவது எல்லாம் உனக்கே சாத்தியம். 23 வயது நளினத்தோடு எல்லாவற்றையும் அப்டேட் செய்துள்ளதால் அன்றும் இன்றும் என்றும் நீயில்லாமல் நானில்லை.

3. வி.விஜயலட்சுமி, மதுரை-1

மதுரையில் நடந்த `ஜாலி டே’வில் கலந்துகொண்டேன். அங்கு கொடுத்த படிவத்தில் அவள் விகடனில் புதுமையான மாற்றங்களை எழுதச் சொன்னார்கள். அதில் `புதிர்ப்போட்டி வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தேன். சிறப்பிதழில் புதிர்ப்போட்டியைப் பார்த்ததும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

4. வே.பிரேமா, கரூர்

முதல் புத்தகம் என் அப்பா வாங்கித் தந்தார். திருமணத்துக்குப் பிறகு, என் சந்தேகங்களுக்கு பதில் தந்த தோழி `அவள்’. என் அப்பா இன்று இல்லை. `அவளை’ அவராகவே பார்க்கிறேன். என் அறிவை மேலும் வளம்பெறச் செய்யும் உன்னை வாழ்த்துகிறேன்.

5. எஸ்.சண்முகப்பிரியா, பெரியாக்குறிச்சி.

வாசகியரை அனைத்து பரிமாணங்களிலும் பரிமளிக்கச் செய்து, அடுத்தடுத்த லெவலுக்குக் கொண்டுசெல்லும் அக்கறையைத் `தாயினும் சாலப்பரிந்து’ அவள் விகடன் செய்து இருப்பது 23-ம் ஆண்டுச் சிறப்பிதழ் தயாரிப்பில் மிளிர்ந்தது. மனம் நிறைந்த பாராட்டுகள்.

6. உமா சேதுராமன், சென்னை-47

23-ம் ஆண்டில் அவளுடன் அவனையும் இணைத்து எழுதிய புதிய பகுதிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இயக்குநர் பாக்யராஜ் ‘அவளு’க்கு ஏற்படுத்திய விழிப்புணர்வு சிறப்பு. அவன் இல்லாமல் அவள் இல்லை. `அவள்' இல்லாமல் நானில்லை.

7. மீனா பத்மனாபன், புவனேஸ்வர்

மார்ச் லாக்டெளனுக்குப்பின் வந்த 23 வயது பேத்தி - பாட்டி சந்திப்பு. அவளின் வழவழ கன்னம் தடவி, கல்யாண கோலத்தில் கண்டு ஆனந்தமடைந்தேன். புத்தம் புதிய அவளைப் பார்த்த நிறைவு எனக்கு..

8. மனோரஞ்சிதம் காந்தி, திருச்சி

என் சுகத்தையும் துக்கத்தையும் தோளில் சாய்ந்து பரிமாறிக்கொள்ளும் 23 வயது தோழி யாய் அவள் விகடனில் ஆறுதல் இருக்கிறது. குறிப்பாக, ‘உனக்கு நானிருக்கேன். எனக்கு நீயிருக்க. வேற என்ன வேணும்...’ என்று விசிறி விற்று வாழும் வைராக்கிய தம்பதியின் கட்டுரை எனக்கும் பொருந்தும்.

9. மணிமேகலை செந்தில், புதுச்சேரி

தாய்வீட்டுக்கு வந்து திரும்பும் மகளுக்கு புதுப் புடவை முதல் தோட்டத்துக் காய்கறி வரை எல்லாம் கொடுத்த பின்னரும் இன்னும் என்ன கொடுக்கலாம் என்று அலைபாயும் அம்மாவின் மனது... எங்கள் அவள் விகடனைப் பற்றி கூறுவதற்கு சாலப்பொருந்தும்.

10. மகாலட்சுமி சரவணன், பண்ருட்டி

ஒன்பது புதிய தொடர்களுடன் அதே பொலிவுடன், அதே மிடுக்குடன் வாசகிகள் மேல் அதே பரிவுடன் தாயாக, சகோதரியாக, மகளாகத் தொடர்கிறார் அவள் விகடன்.

23-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதற்கு ஓராயிரம் ஷொட்டுகள் மட்டுமே. ஒற்றைக் குட்டுக்கும் இடமில்லை.