தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

``குறைவே நிறைவு''! ஒரு தேவதையின் ‘பழைய பாசம்’!

குறைவே நிறைவு
பிரீமியம் ஸ்டோரி
News
குறைவே நிறைவு

#Entertainment

‘குறைவே நிறைவு!’ - என்பதைத் தன் தாரக மந்திரமாகக் கொண்டு வெற்றிகரமான யூடியூபராக மட்டுமல்ல; தன் கொள்கைகளால் வாழ்க்கையையும் வென்றிருக்கிறார் இந்த இளம்பெண். வடக்கு அட்லான்டிக் பகுதியின் செழிப்பான தீவான அயர்லாந்தில் வசிக்கிறார். இவரது சேனலின் பெயர் ஃபேரிலேண்டு காட்டேஜ் (Fairyland cottage). நாம் ஒவ்வொருவரும் வாழ ஆசைப்படும் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையைத் தேடி அமைத்துக்கொண்டிருக்கிறார் இவர்.

“இந்தப் பூமியிடமிருந்து வளங்களைப் பறித்துக்கொள்வதற்குப் பதில் அதன் காயங்களைக் குணப்படுத்துகிறேன். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் வேளாண் மக்களோடு வாழ்ந்தபோது நிலைத்த வேளாண்மை (Permaculture) என்ற கொள்கையால் ஈர்க்கப்பட்டேன்.

மினிமலிசம், ஸீரோ வேஸ்ட், இயற்கையோடு வாழ்க்கை போன்றவற்றில் ஈடுபாடு அதிக மாகவே கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் என் குடும்பத்துக்குச் சொந்தமான, அவர்கள் பயன்படுத்தாமல் விட்டிருந்த நிலத்தைச் சீராக்கி விவசாயம் செய்யத் திட்டமிட்டேன். அந்த நிலத்தைப் பண்படுத்தி இயற்கை முறையில் பழங்கள், காய்கறிகள் பயிரிட்டு சோலையாக மாற்றியிருக்கிறேன். இந்த அழகான வாழ்க்கையை அனைவருக்கும் பயனுள்ளதாக்கவே இந்தச் சேனலைத் தொடங்கினேன்” என்பவர் 2012-ம் ஆண்டு முதல் இதை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

இந்தப் பெண்ணின் பெயரை எங்கு தேடினாலும் கண்டறிய முடியாது. உலகம் முழுமைக்கும் `ஃபேரிலேண்டு காட்டேஜ்' என்ற அவரது வீட்டின் பெயரிலேயே அறியப்படுகிறார். வீடியோவில் முகம்காட்டிப் பேசுபவர் பெயரை மட்டும் ரகசியமாகவே வைத்திருக்கிறார்.

``குறைவே நிறைவு''! ஒரு தேவதையின் ‘பழைய பாசம்’!

“நகர்ப்புறத்தில் வாழ்ந்தபோது என் வாழ்க்கையை வாழ நான் அதிகமாக வாங்கிக் குவிக்க வேண்டியிருந்தது. ஆனால், இந்தக் கிராமப்பகுதிக்கு வந்த பிறகுதான் ஏற்கெனவே என்னிடம் நிறைய இருக்கிறது; அதற்கு மேல் வாங்கிக் குவிப்பது வீண் என்ற தெளிவு ஏற்பட்டது. இந்தக் கிராமத்தில் இயற்கையின் மடியில் கிடைக்கும் செல்வங்களை நம்பி வாழ ஆரம்பித்த பிறகு, வாழ்க்கைத் தரம் அதிகரித்து, வாங்கும் செலவு குறைந்தது” என்பவர் எந்தப் பொருளையும் வீணாக்காமல் பயன்படுத்துவது எப்படி என்பது குறித்த வீடியோக்களை அதிகமாக வெளியிட்டிருக்கிறார்.

“இந்த வாழ்க்கையை நான் தேர்ந்தெடுத் ததுக்குப் பிறகு, பல பொருள்களை வாங்கு வதை அடியோடு நிறுத்திவிட்டேன். உதாரணத்துக்கு, பதப்படுத்தப்பட்ட உணவுகள், பிரெட், ஜாம், சாஸ், பட்டர், டீ பேக் எனச் சொல்லிக்கொண்டே போகலாம். என் செல்போன் இணைப் பைக்கூட ப்ரீபெய்டாக மாற்றிவிட்டேன். தேவை ஏற்பட்டால் மட்டும் ரீசார்ஜ் செய்கிறேன். ஆடைகள், வீட்டு உபயோகப் பொருள்கள் என அனைத்தையும் செகண்டு ஹேண்டில்தான் வாங்கிப் பயன்படுத்துகிறேன்” என்பவர் அவருக் கான அழகு சாதனப் பொருள்களான டியோடரண்ட், டூத்பேஸ்ட், சோப்பு என அனைத்தையும் சமையல் அறை பொருள்களைப் பயன்படுத்தியே தயாரித் துக்கொள்கிறார்.

வீடு, கழிவறையைச் சுத்தம் செய் வதற்கான திரவங்களையும் அவரே இயற்கை முறையில் தயாரிக்கிறார்.

தனது ஹவுஸ் டூர் தொடங்கி, ஆரோக்கியமான ரெசிப்பிகள், அழகுக் குறிப்புகள், செலவுகளைக் குறைப் பதற்கான வழிமுறைகள், தோட்டமிடல் என அனைத்தையும் வீடி யோக்களின் மூலம் நம் கண்களுக்கு விருந் தாக்குகிறார். ஒவ்வொரு வீடியோவுக்கும் மில்லியன் கணக்கில் வியூஸ் கிடைப்பதில் ஆச்சர்யமில்லை.

வீடியோக்களுக்கு இவர் அளிக்கும் வாய்ஸ் ஓவர், அதில் தெரி விக்கும் தகவல்கள் என அனைத்தையும் கேட் பவர்கள் அவரைப் போன்ற ஒரு வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று ஓர் அடியாவது முன்னே எடுத்து வைப் பார்கள்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு புதிய வீடியோக்களை வெளியிடுகிறார்.

“எனக்கு ஓர் ஆசை இருக்கிறது. இந்த நிலத்தின் ஆரோக்கிய வாழ்வைத் திரும்பக்கொண்டு வர வேண்டும். இந்த உலகத்தை அனைவரும் வாழ உகந்த இடமாக மாற்ற வேண்டும்” என்று சிரிக்கிறார்.

உண்மையாகவே அது தேவதையின் வீடுதான்.