Published:Updated:

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாரதி பாஸ்கர்; இப்போது எப்படி இருக்கிறது உடல்நிலை?

பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல், பலரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. இதுகுறித்து உண்மை நிலை அறிய, அவரது நெருங்கிய குடும்ப வட்டாரத்தில் பேசினோம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல், பலரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதுகுறித்து உண்மை நிலை அறிய, அவரது நெருங்கிய குடும்ப வட்டாரத்தில் பேசினோம்.

பாரதி பாஸ்கர்
பாரதி பாஸ்கர்
பட்டிமன்றப் புகழ் பாரதி பாஸ்கர் அப்பல்லோவில் அனுமதி... திடீர் உடல்நலக் குறைபாடு!

``பாரதி, வழக்கம்போல நேற்றும் அலுவல் சார்ந்த வேலைகளைக் கவனிச்சாங்க. மதியத்துக்கு மேல திடீர்னு அவங்களுக்கு அதீத தலைவலியுடன் வாந்தியும் ஏற்பட்டிருக்கு. இரவுல தாங்க முடியாத தலைவலி ஏற்படவே, உடனடியா ஆஸ்பத்திரியில சேர்க்கப்பட்டாங்க. உடனடியா சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டுச்சு. மூளையில ரத்தக்கசிவு மாதிரியான பாதிப்பு ஏற்பட்டதா சொல்லப்படுது. ஆபரேஷன் எதுவும் நடக்கல. ஆனா, ரத்தக்கசிவு பாதிப்பைச் சரிசெய்யுறதுக்கான சிகிச்சை (Procedure) இன்னைக்குக் காலையில நடந்துச்சு.

அனஸ்தீசியா கொடுக்கப்பட்டதால பாரதி மயக்க நிலையிலதான் இருக்காங்க. பயப்பட வேண்டிய சிக்கல் இல்ல. சீக்கிரமே பாரதி கண் முழிச்சுடுவாங்க. சில நாள்கள் ஆஸ்பத்திரியிலதான் இருப்பாங்க. அதன் பிறகு பாரதியின் உடல்நிலை முன்னேற்றத்தைப் பொறுத்து வீடு திரும்பிடுவாங்க. குடும்பத்தினர் பலரும் கூடவே இருந்து பாரதியைக் கவனிச்சுக்குறோம். ரசிகர்கள் உட்பட எல்லோரும் பாரதிக்காக வேண்டிக்கோங்க" என்று நம்பிக்கையுடன் கூறினர்.

பாரதி பாஸ்கர்
பாரதி பாஸ்கர்

சென்னையிலுள்ள தனியார் வங்கியில் உயர் பொறுப்பில் இருக்கும் பாரதி பாஸ்கர், பட்டிமன்றப் பேச்சாளராகவும், தன்னம்பிக்கைப் பேச்சாளராகவும் வெகுஜன மக்களுக்கும் பரிச்சயமானவர். அவர் விரைவிலேயே குணமாகி, வீடு திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு