ஹேமமாலினி... 70-களில் பாலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையாக வலம்வந்த அழகுப் பெண். இந்திய சினிமா உலகின் முடிசூடா ராணியாக இருந்த முதல் தமிழச்சி. சென்னையில் ஒரு வர்த்தக நிறுவனத்தின் அறிமுக விழாவுக்கு வந்திருந்தவரைச் சந்தித்தோம். அவரைப்போலவே அவர் பேசிய தமிழும் நளினமாக இருந்தது.
‘‘ மேடம்... அவ்ளோ இளமையா இருக்கீங்க... எப்படி?’’ என்று பேச்சை ஆரம்பித்தால் மிக அழகான சிரிப்பை பதிலாகத் தருகிறார்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS‘‘ ‘இவ்வளவு வயசாகிடுச்சு... இன்னும் இளமையா இருக்கீங்களே’னு பார்க்கிறவங்கள்லாம் கேக்கறாங்க. என்னை நான் எப்பவுமே உற்சாகமா வெச்சுக்கறதுதான் அந்த ரகசியம். புன்னகையை விடவும் நம்மளை வசீகரமாகவும் இளமையாகவும் காட்டுற மந்திரம் வேற எதுவுமே இல்லை. இன்னோர் உண்மை சொல்லட்டுமா? நான் இந்தியா முழுக்கப் போய்க்கிட்டிருக்கிறவ... நான் பார்த்த வரைக்கும் தமிழ்ப் பெண்கள்தான் ரொம்ப அழகு. நானும் தமிழ்ப் பெண்தானே!’’ என்கிறார் நீங்காத புன்னகையுடன்!

தன் இளம் பிராயத்தைப் பற்றி சொல்லும் போது அவர் முகத்தில் அத்தனை உணர்ச்சிகள்...
‘‘ ‘காவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும் மறந்து போகுமா?’னு ‘சிவாஜி’ படத்துல ரஜினி பாடுற மாதிரி என்னால காவிரி ஆத்தையும் திருச்சிக்குப் பக்கத்துல நான் பொறந்து வளர்ந்த அம்மன்குடி வாழ்க்கையையும் மறக்கவே முடியாது. அவ்வளவு அழகான, அற்புதமான நாள்கள். சாதாரண குடும்பம்தான். ஆனா, என்னை காணக் கிடைக்காத தேவதை மாதிரி வளர்த்தாங்க.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அப்ப பிள்ளைங்களை சென்னையில படிக்கவைக்கிறதுதான் பெரும்பாலான பெத்தவங்களோட கனவா இருக்கும். என்னை சென்னை, ஆந்திர மகிள சபாவில படிக்க வெச்சாங்க. படிக்கிறப்பவே என்னை நாட்டியத்தின் மேல கவனம் செலுத்தச் சொன்னதும் என் அம்மாதான். சின்ன வயசுல பல ஸ்டேஜ் ஷோக்கள் செய்திருக்கேன்.
பிறகுதான் திடீர்னு சினிமா மேல ஆசை வந்து ஒரு பிரபல டைரக்டர்கிட்ட போய் சான்ஸ் கேட்டப்போ, ‘சினிமாவுக்கான முகம் உனக்கில்லைம்மா’னு சொல்லிட்டார். ஆனா, அப்போ என்னை அவர் நிராகரிச்சுதுக்காக இப்போ அவருக்கு நான் நன்றி சொல்லணும். அதனாலதானே பாலிவுட்ல என்னால சாதிக்க முடிஞ்சது!’’ என்கிறவர், அருமையான வாழ்க்கைத் தத்துவம் ஒன்றையும் சொல்கிறார்.
‘‘ ‘துன்பம் வரும் வேளையிலே சிரிங்க’னு நம்ம வள்ளுவர் சொன்னாரே... அதை நான் அப்படியே ஃபாலோ பண்றேன். எல்லார்கிட்டயும் சொல்ற ஒரு விஷயத்தை உங்ககிட்டயும் சொல்றேன். எப்பவுமே நம்மளோட கஷ்டத்தை ஒரு பையில போட்டு வையுங்க. அந்தப் பையோட அடிப்புறத்துல ஒரு துவாரத்தையும் போட்டு வையுங்க. கஷ்டமே உங்ககிட்ட நிக்காது!’’ என்று சொல்லி அசத்தல் சிரிப்பு சிரிக்கிறார் இந்த இளமை நாயகி!
(2007 செப்டம்பர் 28)