என்டர்டெயின்மென்ட்
லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

மாற்றுத்திறன் சுமையல்ல... கௌரவம்! - மாற்றங்களுக்கு வித்திடும் லாரன்

லாரன்
பிரீமியம் ஸ்டோரி
News
லாரன்

என் வீடியோக் களுக்கு வந்த கமென்ட்டுகள் தான் என்னை மாற்றின.

ன்னுடைய குரலாக மட்டுமன்றி, தன்னைப் போன்ற குரலற்றவர்களின் குரலாகவும் ஒலிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் யூடியூப் சேனலை நடத்திக்கொண்டிருப்பவர் லாரன் ஸ்பென்சர். “திரைப்படங்களில் நடித்த கறுப்பினத்தைச் சேர்ந்த முதல் மாற்றுத்திறனாளி நான்தான்” - கம்பீரமாகவே தன்னை அறிமுகப் படுத்திக்கொள்கிறார் லாரன்.

சிறுவயதிலேயே ஓட்டப்பந்தயம், ஹாக்கி, நடனம் என துடிப்புடன் ஓடிக்கொண்டிருந்தவர் லாரன். தன்னுடைய 14 வயதில் அதிக சோர்வாகவும் தசைகள் வலிமை யிழப்பதையும் உணரத் தொடங்கினார்...

“ஒரு நாள் இரவு வீட்டு கிச்சன் கபோர் டிலிருந்த தட்டை எடுக்க முயன்றேன். என் கை தளர்ந்து கீழே விழுந்துவிட்டது. அதற்குப் பிறகு, என்னால் கைகளை அசைக்கவே முடியவில்லை டாக்டர் பரிசோதித்துவிட்டு அது இள வயதினரை பாதிக்கும் `ஏஎல்எஸ்' (Amyotrophic Lateral Sclerosis - ALS) எனப்படும் ஒருவகை நரம்பியல் பிரச்னை என்று சொன்னார். ஓடிக்கொண்டிருந்த நான் வீல்சேரில் முடங்கினேன்.

மாற்றுத்திறன் சுமையல்ல... கௌரவம்! - மாற்றங்களுக்கு வித்திடும் லாரன்

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகபட்சம் இரண்டு முதல் ஏழு ஆண்டுகள் வரைதான் உயிர் வாழ்வார்கள் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். மருத்துவர்களின் கூற்றைப் பொய்யாக்கி 20 ஆண்டுகளாக சந்தோஷமாக வலம் வந்துகொண்டிருக்கிறேன். என் உடல் எனக்கேற்றாற்போல் மெள்ள மெள்ள மாறிக்கொண்டதுதான் ஆச்சர்யம். மருத்துவர்கள் எனக்கு ஆயுள் குறைவு என்று சொன்னதும், என் வாழ்க்கையை முழுமையாக வாழ வேண்டும் என்று தீர்மானித்தேன். ஏஎல்எஸ் நோய் என்னுடைய வாழ்க்கை அல்ல. அது வாழ்க்கையின் ஓர் அங்கம் என்ற புரிந்துணர்வுக்கு வந்தேன்” எனும் லாரனுக்கு கன்டென்ட் கிரியேட்டர், மாடல், நடிகை, பப்ளிக் ஸ்பீக்கர் எனப் பல முகங்கள்.

“Sitting Pretty Lolo யூடியூப் சேனலைத் தொடங்கியபோது என்னுடைய லைஃப் ஸ்டைலைப் பற்றி மட்டும்தான் வீடியோக்கள் வெளியிட நினைத்தேன். ஆனால், அங்கிருந்துதான் வாழ்க்கை மாறத் தொடங்கியது. என் வீடியோக்களுக்கு வந்த கமென்ட்டுகள்தான் என்னை மாற்றின. அந்த கமென்ட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான தேவை அதிகம் என்பதைப் புரியவைத்தன” என்பவர் அமெரிக்காவிலிருந்து மாற்றுத் திறனாளிகளுக்கான பயன்பாட்டுப் பொருள்களுக்கான ரெவ்யூ, லைஃப் ஹேக்ஸ், டேட்டிங், ரிலேஷன்ஷிப் ஆலோசனைகள் என ஏ டு இஸட் விஷயங்களை வீடியோக் களாக வெளியிட்டு வருகிறார்.

பல லட்சம் வியூஸ், டிரெண்டிங் என எந்த இலக்கும் இல்லாமல் குறைவான சப்ஸ்கிரைபர்ஸ், வியூஸுடன் பயனுள்ள ஆஃப் பீட் சேனலாகக் கவனம் ஈர்க்கிறது இவரது சேனல்.

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் க்வாரன்டீனில் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான லாரனின் ஆலோசனை வீடியோவுக்கு பெரிய வரவேற்பு. என்டெர் டெயின்மென்ட், மாடலிங், சினிமா போன்ற துறைகளில் மாற்றுத்திறனாளிகள் தயக்கமின்றி நுழைய வேண்டும் என்பதைத் தன் வீடியோக்களில் அடிக்கடி வலியுறுத்துகிறார் லாரன்.

“பெரும்பாலும் மாற்றுத் திறனாளிகளைச் சுற்றிலும் அனுதாப அலையே சுற்றும். அதை முற்றிலும் வெறுப்பவள் நான். அந்த எண்ணத்தையே என் சக நண்பர்களுக்கும் என் வீடியோக்கள் மூலம் கடத்த விரும்புகிறேன். பாசிட்டிவ்வாக சிந்திப்பவர் கள் தங்கள் வாழ்க்கையை மேலும் ஸ்பெஷல் ஆக்கு கிறார்கள்” என்பவர், என்டர்டெயின்மென்ட் துறையில் கவனத்தைச் செலுத்துவதற்காக, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டிருக்கிறார். திரைப்படங்களிலும் நடித்து விட்டார்.

“மாற்றுத்திறனுடையவர் களுக்கென்று சில வரம்புகள் உண்டு. ஒவ்வொரு நாளைக் கடப்பதற்குமே சிரமங்கள் இருக்கும். ஆனால், அந்த வரம்புகளுக்குள்ளும் சிறகடித்துப் பறக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் சிறகுகளைக் கட்டவிழ்க்க தேவையான விஷயங்களை அளிப்பதற்குச் சரியான நபர் நானாகத்தான் இருக்க முடியும். ஏனென்றால், மாற்றுத்திறன் என்பது சுமை யல்ல... அது ஒரு கௌரவம்”

கெத்தாகச் சிரிக்கிறார் லாரன் ஸ்பென்சர்.