Published:Updated:

நாலு ஜோக், ரெண்டு பாட்டு, ரெண்டு கவுன்ட்டர் இருந்தா சமாளிச்சிடலாம்... கல்பாக்கம் காயத்ரி

கல்பாக்கம் காயத்ரி
பிரீமியம் ஸ்டோரி
கல்பாக்கம் காயத்ரி

#Entertainment

நாலு ஜோக், ரெண்டு பாட்டு, ரெண்டு கவுன்ட்டர் இருந்தா சமாளிச்சிடலாம்... கல்பாக்கம் காயத்ரி

#Entertainment

Published:Updated:
கல்பாக்கம் காயத்ரி
பிரீமியம் ஸ்டோரி
கல்பாக்கம் காயத்ரி

விஜய் டி.வி-யில் `கலக்கப்போவது யாரு சீஸன் 9'-ல் டாப் 5 போட்டியாளர்களில் ஒருவராக முன்னேறியிருக்கிறார் கல்பாக்கம் காயத்ரி. உடலை ஒரு பக்கம் சாய்த்து, கீச் குரலில் விநோத ஒலியெழுப்பி, அவர் பெர்ஃபாம் பண்ணும் விதமே சிரிப்பை வரவழைத்துவிடும். ஆண்கள் கோலோச்சும் துறையில் இளம் வயதிலேயே முத்திரை பதித்துள்ளதற்கு ‘வாழ்த்துகள்’ சொல்லிப் பேசினோம்.

“கல்பாக்கம்தான் என் சொந்த ஊரு. குடும்பச் சூழல் காரணமா ப்ளஸ் டூவோடு படிப்பை நிறுத்திட்டேன். அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம போகவே, வேலைதேடி சென்னைக்கு வந்தேன். ஒரு ஹாஸ்டல்ல தங்கி வேலை தேடினேன். எங்கே போறது, யார்கிட்ட வேலை கேக்குறதுனு எதுவுமே தெரியாது. கையில காசும் இருக்காது. தினமும் பல கிலோமீட்டர் நடந்தே போய் வேலை தேடியிருக்கேன். ஒருவழியா செல்போன் கடையில வேலை கிடைச்சுது.

நாலு ஜோக், ரெண்டு பாட்டு, ரெண்டு கவுன்ட்டர் இருந்தா சமாளிச்சிடலாம்...
கல்பாக்கம் காயத்ரி

கடைக்கு வர்ற கஸ்டமர்கிட்ட நான் லொடலொடன்னு பேசுறதைப் பார்த்து என்கூட வேலை பார்த்தவங்க... `நீ நல்லா பேசுற... ஆர்ஜேவாக டிரை பண்ணு’ன்னு சொன்னாங்க. அப்படின்னா என்ன வேலைன்னுகூட தெரியாது. ஆர்ஜேன்னா என்னன்னு கேட்டேன். ரேடியோல பேசுறதுன்னு சொன்னாங்க. அந்தக் கடையிலயும் ஆண்களுக்கு நிகரா வேலை பார்ப்பேன். ராத்திரி 10 மணிக்கு கடை மூடுறவரைக்கும் ஓவர் டைம் பார்ப்பேன். இப்பவரைக்கும் என் குடும்பத்தை நான் தான் பாத்துக்கிறேன்’’

- சீரியஸாகப் பேசியவர் தொலைதூரக் கல்வியில் பி.எல்லும் முடித்திருக்கிறாராம்.

‘‘நான் ஆர்ஜே ஆகுறேன்னு பண்ணின காமெடிய சொல்றேன்... கேளுங்க” என்று கலகலத்து டிராக் மாற்றினார்.

“எங்க ஊர்ல `கல்பாக்கம்

எஃப்.எம்'னு ஒண்ணு இருக்கு. அது எங்க ஊரு மக்கள்ல பாதி பேருக்குத் தெரியாது. அங்க போய் வேலை கேட்டேன். நல்லாதான் பேசுறீங்க. கரெஸ்லதான் படிச்சிருக்கீங்க. அதனால வேற எஃப்.எம்ல டிரை பண்ணுங்கன்னு சொல்லிட்டாங்க. அப்ப மதுரையில ஒரு எஃப்.எம் ஸ்டேஷன்ல ஆள் எடுக்குறாங்கன்னு கேள்விப்பட்டு, மதுரைக்குப் போனேன். ‘ஆர்ஜேக்கான குரல் இருக்கு. நல்லா பேசுறீங்க. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க’ன்னு சொன்னாங்க.

அவங்க பேச்சை நம்பி ஒருநாள், ரெண்டு நாள் இல்லைங்க... ரெண்டு வருஷம் மதுரையிலயே வெயிட் பண்ணிட்டு இருந்தேன். வாய்ப்பு கிடைக்கிற மாதிரி தெரியலை. மறுபடி எங்க ஊருக்கே வந்துட்டேன்”

- வெள்ளந்தியாகப் பேசுகிறார்.

“கலக்கப் போவது யாரு சீஸன் 5-ல நிஷா அக்கா, அன்னலட்சுமி அக்கால்லாம் பெர்ஃபாம் பண்றதப் பார்த்துட்டு வீரத்தோட கிளம்பி சீஸன் 6 ஆடிஷன்ல கலந்துகிட்டேன். முதல் ரவுண்டுல செலக்ட் ஆகி, அடுத்த ரவுண்டுக்குப் போனேன். விடியற்காலை 3 மணிக்குதான் எனக்கு ஸ்டேஜ் கிடைச்சுது. பெரிய ஸ்டேஜ், பெரிய பெரிய லைட், ஜட்ஜுங்க எல்லாத்தையும் பார்த்ததும் கைகால் நடுங்கி, வியர்த்து வார்த்தையே வர்ல... அழுதுட்டே இறங்கிட்டேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கணவன்: ஏன் நடுராத்திரி 12 மணிக்கு உட்கார்ந்து இவ்ளோ வேகமாக பிஸ்கட் பாக்கெட்ட காலி பண்ணிட்டு இருக்க? மனைவி: இன்னியோடு எக்ஸ்பயரி டேட் முடியுது. அதான் அதுக்குள்ள சாப்பிட்டு முடிச்சிடலாம்னு...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

டைரக்டர் தாம்சன் சார்தான், ‘நல்லாதான் பேசுற. ஆனா ஜோக்க எப்படி டெலிவரி பண்ணனும்னு தெரியல. அதைக் கத்துகிட்டு மறுபடி வா’ன்னு சொன்னாரு”

- முதல் முயற்சியே தோல்வியில் முடிந்ததைப் பகிர்ந்தார்.

நாலு ஜோக், ரெண்டு பாட்டு, ரெண்டு கவுன்ட்டர் இருந்தா சமாளிச்சிடலாம்...
கல்பாக்கம் காயத்ரி

“கலக்கப் போவது யாருல இருந்தபோது பழனி அண்ணா எனக்கு டிரெயினரா வந்தாங்க. அவரு மூலமா எனக்கு பட்டிமன்றத்துல பேச வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது. முதல்ல பயமா இருந்துச்சு. ‘நிறைய பேச வேண்டாம். உனக்கு நல்லா தெரிஞ்ச நாலு ஜோக், ரெண்டு பாட்டு, ரெண்டு கவுன்ட்டர் வெச்சு சமாளிச்சுடு’ன்னு பழனி அண்ணாதான் சொல்லிக் கொடுத்தாரு.

‘மகிழ்ச்சியான வாழ்க்கை திருமணத்துக்கு முன்பா, பின்பா’ன்னு தலைப்பு. நான் பேசி முடிக்கும்போது, பப்ஸ்க்கு 4 எண்டு, சமோசாவுக்கு 3 எண்டு, ஸ்பிரிங் ரோலுக்கு 2 எண்டு, ஆனா, போண்டா மாதிரி இருக்கிற இந்த உலகத்துல திருமணத்துக்கு முன்னால இருக்கிற மகிழ்ச்சிக்கு நோ எண்டுன்னு முடிச்சேன். ஆடியன்ஸ்கிட்ட செம ரெஸ்பான்ஸ்.

ஹவுஸ் ஓனர்: ஏன் வீட்டுக்குள்ள உட்கார்ந்து பட்டாசு வெடிச்சிட்டு இருக்கீங்க? குடியிருப்பவர்: நீங்க தான சார் வீட்டை `காலி' பண்ண சொன்னீங்க...

எனக்கு வாய்ப்பு கொடுத்த பழனி அண்ணாவுக்கே டேட் குடுக்க முடியாத அளவுக்கு பிஸியாகி, நிறைய பட்டிமன்றங்கள் பேசியிருக்கேன். மேடைல பேசும்போது கீழே வர்ற கவுன்ட்டர் எல்லாம் பயங்கரமா இருக்கும். ஒரு தடவ, `இந்த மேடையில பேசும்போதே என் உயிர் போனாலும் பரவால்ல'ன்னு ஆவேசமா பேசிட்டு இருக்கேன்...கீழே இருந்து `நீ பேசி எத்தனை உயிர் போச்சோ'ன்னு அசால்ட்டா கவுன்ட்டர் குடுக்குறாங்க”

- மேடை அனுபவம் பகிர்ந்தபடி மீண்டும் கலக்கப்போவது யாரு சீஸன் 9-ல் கலந்துகொண்ட அனுபவம் சொன்னார்.

பேரன்: தாத்தா டிரஸ் எடுக்கணும். 5,000 ரூபா கொடுங்க! தாத்தா: அவ்ளோ காசு எதுக்குடா? அந்தக் காலத்துல வெறும் 200 ரூபாய்க்கு டிரஸ், வீட்டுக்குத் தேவையான பொருள்னு எல்லாத்தையும் எடுத்திடுவேன். பேரன்: இப்போல்லாம் அப்படி எடுக்க முடியாது தாத்தா...எல்லா கடையிலயும் சிசிடிவி வெச்சிருப்பாங்க.

“சீஸன் 6-ல வாய்ப்பு கிடைக்காத போது, இந்த ஏரியா பக்கமே வர மாட்டேன்னு அழுதுட்டே சபதம் போட்டுட்டு வந்தேன். ஆனா சீஸன் 9 அறிவிச்ச உடனே நானே போய் கலந்துகிட்டேன். முதல் எபிசோட் ஒளிபரப்பானதும் லாக்டௌன் வந்திருச்சு. வந்த வாய்ப்பும் போயிருச்சோன்னு நினைச்சப்பதான், மறுபடியும் ஷூட் தொடங்கிச்சு. 18 பேர்ல நான் ஒருத்திதான் பொண்ணு. இப்போ டாப் 5 வரைக்கும் வந்துட்டேன்” என்றவரிடம், எல்லாரும் மாமியார் மருமகள் காமெடிதான் பண்ணுவாங்க...நீங்க என்ன புதுசா அண்ணி கேரக்டரை கலாய்க்கிறீங்களே என்றோம்.

“உண்மையைச் சொல்லப் போனா அப்படி ஒரு கேரக்டரே கிடையாது. டைரக்டர் சார்தான் அந்த ஐடியா கொடுத்து பண்ணச் சொன்னாரு. அது இவ்ளோ ஹிட் ஆகும்னு நினைக்கவே இல்ல” என்றார்.

வாகைசூட வாழ்த்து சொல்லி விடைபெற்றோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism