Published:Updated:

அமெரிக்கா லைஃப் ஸ்டைல் எப்படியிருக்கும் தெரியுமா? - யூ டியூப்பில் அசத்தும் மதுரைப் பெண் #MyVikatan

மேற்கத்திய Halloween day முதல் நம்மூர் தீபாவளி வரை இவர் வெளியிட்டுள்ள அனைத்து வீடியோக்களுமே தெறி ஹிட்.

ப்ரியமீனா மனோகரன்
ப்ரியமீனா மனோகரன்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசிக்கும் மதுரைக்காரப் பெண் ஒருவர், சமீபத்தில் தன் வருவாயில் ஒரு பெரிய பங்கை தன் யு டியூப் subscribers-களுக்குக் கொடுத்து மகிழ்ந்திருக்கிறார். வேலை, குடும்பத்தை நிர்வகித்தல், Youtuber என்று பன்முகத்தன்மை கொண்ட இவருக்கு ஒரு வருடத்திற்குள்ளாகவே ஒரு லட்சத்திற்கும் மேலான subscribers-கள்.

ப்ரியமீனா மனோகரன்
ப்ரியமீனா மனோகரன்

"வணக்கம்" என்று இவர் சொல்லும் போதே, இவரின் யு டியூப் சேனலை பார்ப்பவர்களுக்கு உற்சாகம் தொற்றிக் கொள்கிறது. மேற்கத்திய Halloween day முதல் நம்மூர் தீபாவளி வரை இவர் வெளியிட்டுள்ள அனைத்து வீடியோக்களுமே தெறி ஹிட். தன் குடும்பம், யு டியூப் சேனல் ஆரம்பித்தது, அதில் ஏற்பட்ட நெருக்கடியிலிருந்து மீண்டது எப்படி? என்று நம்முடைய பல கேள்விகளுக்கு உற்சாகமாகப் பதிலளித்தார் "ப்ரியமீனா மனோகரன்" எனும் யு டியூப் சேனலை நடத்தி வரும் ப்ரியமீனா மனோகரன் அவர்கள். அவரின் பேட்டி இதோ:

அமெரிக்காவில் தமிழில் யு டியூப் சேனல் எப்படி?

நான் பக்கா மதுரைக்கார பொண்ணுங்க. கணவர் பெயர் செந்தில். அமெரிக்காவில் வேலை. நான் மதுரையில் உள்ள நேஷனல் இன்ஜினீ யரிங் காலேஜில் B.E படித்தேன். படிப்பு முடிந்ததும் திருமணம். உடனே நானும் அவருடன் நியூயார்க் வந்துவிட்டேன். இங்கே ஒரு கம்பனியில் Project Coordinator ஆக இருக்கிறேன். மகன் ஆதர்ஷ், 9ம் வகுப்பு படிக்கிறார். மகள் சாராஸ் மழலையர் பள்ளியில் படிக்கிறார். அளவான குடும்பம், சந்தோஷமான வாழ்க்கை. நான் எங்க அம்மா மாதிரி. ஏதாவது பண்ணிக்கிட்டே இருக்கணும்னு நினைப்பேன். அதோட செயல்லயும் இறங்கிடுவேன். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சும்மா தானே இருக்கோம், ஏதாவது உருப்படியா பண்ணலாமேன்னு யோசிக்கும் போது கிடைச்சதுதான் இந்த Youtube சேனல் ஆரம்பிக்கும் ஐடியா.

ப்ரியமீனா மனோகரன்
ப்ரியமீனா மனோகரன்

தொடக்கத்தில் உங்கள் குடும்பத்தினரின் ஆதரவு?

இந்த சேனலை ஆரம்பிக்கப்போறேன்னு சொன்னதும் என் கணவர் பச்சைக் கொடி காட்டியதோடு நிறைய யோசனைகளையும் கூறினார். அது எனக்கு உத்வேகமாக இருந்தது. உதாரணமாக, என்னோட பட்டுப் புடவைகள் கலெக்ஷன் பற்றி ஒரு வீடியோ போடச்சொன்னார். அது எவ்வளவு பெரிய ஹிட்டுன்னு அந்த viewing count ஐப் பார்த்தாலே உங்களுக்குப் புரியும்.

Turning Point னு சொல்வாங்களே! அது உங்களுக்கு எந்த வீடியோவில் வந்தது?

ப்ரியமீனா மனோகரன்
ப்ரியமீனா மனோகரன்

எங்க Anniversary கொண்டாட்டத்தை வீடியோவாக வெளியிட்டிருந்தேன். அந்த வீடியோதான் பல Subscriber களை எனக்குப் பெற்றுத் தந்தது. பெட்ரோல் பங்க்ல காருக்கு பெட்ரோல் போடும் போது, கட கடனு அந்த மீட்டர் ஓடுமே! அது மாதிரி 500, 600 னு என் Subscriber எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது. அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. இந்த நேரத்தில் என்னுடைய அனைத்து Subscriber-களுக்கும் நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன். தனித்துவம் தாங்க. நான் யாரையும் காப்பி அடிக்கிறதில்லை. அது மட்டுமல்ல. காப்பியடிக்கும் போது, நம் சுயத்தை இழந்து விடுகிறோம். ஒரு கட்டத்துக்கு மேல என்ன பண்ணணும்னு நமக்கே புரியாது. அதனால, எனக்கு என்ன வருமோ, அதைத்தான் நான் பண்றேன். இதை ப்ரியமீனா ஸ்டைல்னு வெச்சிக்கலாம். எனக்கு இது பிடிச்சிருக்கு.

பெண்களுக்கு பெரும் இடையூறாக இருக்கும் Harassment பிரச்னையை எப்படி உடைத்து வெளிவந்தீர்கள்?

தொடக்கத்தில் மிகவும் கஷ்டமாகத்தான் இருந்தது. மனதளவில் ரொம்ப சோர்ந்துவிட்டேன். அந்த சமயத்தில் என் கணவர் மிகவும் சப்போட்டாக இருந்தார். அடுத்தடுத்து என் வீடியோக்கள் ஹிட்டாகி பார்வையாளர்கள் அதிகமானவுடன் என் சப்ஸ்கிரைபர்களே இந்த எதிர்மறையாளர்களுக்கு பதிலடி கொடுக்கத் தொடங்கிவிட்டனர். அது மட்டுமல்ல. Fake Id பெயரில் தப்பா கமென்ட் போடுறவங்களைப்பத்தி தனியாக ஒரு வீடியோவே வெளியிட்டேன். அப்புறமென்ன! துண்டைக் காணோம் துணியக் காணோம் னு ஓடிட்டாங்க. மதுரைக்காரப் பொண்ணாயிற்றே! தைரியமும் என் கூடவே பிறந்தது.

குடும்பத்தை நிர்வகித்தல், அலுவலக வேலை, Youtuber ; 24 மணி நேரம் போதுமா?

ப்ரியமீனா மனோகரன்
ப்ரியமீனா மனோகரன்

Scheduling ரொம்ப முக்கியம்னு நான் நினைக்கிறன். சுவர் இருந்தாத்தானே சித்திரம் வரைய முடியும். அதனால நான் Health க்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கிறேன். அப்புறம் குடும்பம், அடுத்து வேலை மற்றும் சனிக்கிழமைகளில் Youtube வீடியோ என்று நேரத்தைப் பிரிச்சுக்கிறதால எனக்கு ஈஸியா Manage பண்ண முடியுது.

வாழ்க்கையில் முன்னேறத்துடிக்கும் பெண்களுக்கு உங்களின் Advice என்ன?

ப்ரியமீனா மனோகரன்
ப்ரியமீனா மனோகரன்

"மங்கையராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா" னு கவிமணி சொன்னதை நல்ல ஞாபகத்துல வச்சுக்குங்க. அது தான் நம்மளோட மிகப்பெரிய ப்ளஸ். அடுத்து, தைரியமாய் செயல்ல இறங்குங்க. எட்டு எட்டா ஏறினா, இமயமலையும் நம் காலடியில்தான். அது மாதிரி, தினமும் ஒரு சதவிகிதம் வேலை செய்தாலே வருடக் கடைசியில் 365% வேலை செய்து முடித்திருப்போம். இது எத்தனை மடங்கு அதிகம்னு யோசிச்சிப் பாருங்க. அப்போ நீங்களே உங்க காலரைத் தூக்கி விட்டுக்குவீங்க.

உங்களின் எதிர்காலத்திட்டம்? அவரின் ஆசைகள் நிறைவேற வாழ்த்துகள் கூறி விடை பெற்றோம்.-ஜேசு ஞானராஜ்அவரின் ஆசைகள் நிறைவேற வாழ்த்துகள் கூறி விடை பெற்றோம்.-ஜேசு ஞானராஜ்

ப்ரியமீனா மனோகரன்
ப்ரியமீனா மனோகரன்

பணம் நிறைய சம்பாதிக்கணும்னு நான் என்னைக்குமே நினைச்சதில்லை. அதனால் தான் என்னுடைய வருமானதுல ஒரு பங்கை என் Subscriber களுக்குக் கொடுத்து, அவங்க மகிழ்ச்சியில நான் சந்தோஷப்பட்டுக்கிட்டேன். அவர்களுக்கு நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். குடும்பத்தைப் பொறுத்த வரையில் பிள்ளைகள் படிப்பில் ரொம்ப கவனமாக இருக்கிறேன். "பிள்ளைகளிடம் தோற்றுப் போவதுதான் பெற்றவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி" ன்னு சொல்வாங்களே! அந்த வெற்றிக்காகக் காத்திருக்கிறேன்.

அவரின் ஆசைகள் நிறைவேற வாழ்த்துகள் கூறி விடை பெற்றோம்.-ஜேசு ஞானராஜ்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/