தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

இலக்கு ஏதுமில்லை... ஆனால், தொட்டதெல்லாம் ஹிட்! - ‘அசுர’த்தனமாக அசத்தும் மஞ்சு வாரியர்

மஞ்சு வாரியர்
பிரீமியம் ஸ்டோரி
News
மஞ்சு வாரியர்

கைவசம் ஏராளமான படங்களுடன், சினிமா படப்பிடிப்புக்கான அனுமதிக்குக் காத்திருப்பவர், கேரளாவிலுள்ள அண்ணன் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுகிறார்.

நாயகர்களை நம்பியே சுழலும் திரையுல கத்தை, நடிகைகளை மையப்படுத்தியும் இயங்க வைத்து மலையாள சினிமாவில் பாக்ஸ் ஆபீஸ் குயினாக இருக்கிறார் மஞ்சு வாரியர். மல்லுவுட்டின் செல்ல மகள். அடுத்த தமிழ்ப்படம், சமீபத்திய ‘சதுர் முகம்’ பட வெற்றி, ரீ-என்ட்ரி சக்சஸ் எனப் பல விஷயங் கள் குறித்தும் பேசுபவரின் குரலில் உற்சாகம் ததும்புகிறது.

“ ‘அசுரன்’ வெற்றிக்குப் பிறகு, கடந்த ஒன்றரை வருஷத்துல நிறைய தமிழ்ப் பட வாய்ப்புகள் வந்தன. அதுல, பெரிய இயக்குநர் களின் கதைகள் உட்பட பெரும்பாலானவையும் ‘அசுரன்’ல நடிச்ச கிராமத்து சப்ஜெக்ட் சாயல்லயே இருந்துச்சு. ஒரே மாதிரியான கதைகள்ல நடிக்க எனக்கு விருப்பம் இல்ல. ‘அசுரன்’ படம் ஏற்படுத்திய பெஞ்ச் மார்க்கைத் தாண்டும்படியா, வித்தியாசமான ரோல்ல நடிக்கணும்னு ஆசைப்படுறேன். முதல் கட்டமா நாலு கதைகளைத் தேர்வு செஞ்சிருக் கேன். அந்தப் படங்களுக்கான பேச்சு வார்த் தைகளும் கதை விவாதங்களும் போயிட்டு இருக்கு. கூடிய சீக்கிரமே என்னோட அடுத்த தமிழ்ப்படம் உறுதியாகிடும். தமிழ் சினிமா வோட வளர்ச்சி வியப்பையும் மகிழ்ச்சியையும் தருது. அதுல, தமிழ்நாட்டுப் பெண்ணான (கன்னியாகுமரியை பூர்வீகமாகக் கொண் டவர்) நானும் ஓர் அங்கமா இருக்க ஆசைப் படுறேன்...” கலகலவெனச் சிரிக்கிறார்.

அசுரனில்
அசுரனில்

மஞ்சுவின் நடிப்பில் வெற்றி பெற்ற ‘ப்ரதி பூவன்கோழி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை, நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் பெற்றுள்ளார். இதில் வாய்ப்பு அமைந்தால், டபுள் ஓகே சொல்லி நடிக்கத் தயாராக இருக்கிறார் மஞ்சு.

“ ‘ப்ரதி பூவன்கோழி’ படம் இப்போ வரைக்கும் பேசப்படுது. வேலை உட்பட வெளியிடங்களுக்குப் போயிட்டு வீடு திரும்புற பெண்கள் தினமும் எதிர்கொள்ற சவால்கள் ஏராளம். குறிப்பா, பயணம் செய்யுறப்போ நிறைய பெண்கள் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகியிருப்பாங்க. தப்பு செய்யுற ஆண்களோட கையைத் தட்டி விடணும். பொது வெளியிலயே அவனைக் கண்டிக்கும் தைரியம் பெண்களுக்கு வரணும். ‘பிரச்னையைப் பெரிசாக்க வேண்டாம்’னு அமைதியா கடந்து போனா, தப்பு செய்யுற சில ஆண்களோட கொட்டத்தை ஒடுக்க முடியாது. அந்த மாற்றத்துக்கான விதையை இந்தப் படமும் விதைச்சிருப்பதுல பெருமிதம். தப்பு செஞ்ச நபரை க்ளைமாக்ஸ்ல விரட்டி தண்டிக்குற காட்சிகள்ல சக பெண்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்குற நபராகத்தான் நடிச்சேன்.

அந்தப் படத்தை தியேட்டர்ல மக்களுடன் பார்த்தேன். படம் முடிஞ்சதும் நிறைய பெண்கள் எழுந்து நின்னு கைதட்டினாங்க. இந்தப் படத்தைப் போலவே, ‘சதுர் முகமு’ம் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை மையப் படுத்தின கதைதான். செல்போன் பயன் பாடுகள்ல மூழ்கிப்போன பெண் சந்திக்கும் சவாலான நிகழ்வுகளை, டெக்னோ ஹாரர் த்ரில்லிங் உணர்வுகளுடன் புது முயற்சியா இந்தப் படத்தை உருவாக்கினோம். சில மாதங்களுக்கு முன்பே தியேட்டர்ல ரிலீஸாகி வரவேற்பைப் பெற்றுச்சு. கொரோனா கட்டுப்பாடுகளால தியேட் டர்கள் மூடப்பட்டதால, இப்போ ஓ.டி.டி தளத்துல இந்தப் படத்தை ரீ-ரிலீஸ் பண்ணியிருக்கோம். மீண்டும் நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு”

- கைவசம் ஏராளமான படங்களுடன், சினிமா படப்பிடிப்புக்கான அனுமதிக்குக் காத்திருப்பவர், கேரளாவிலுள்ள அண்ணன் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுகிறார்.

இலக்கு ஏதுமில்லை... ஆனால், தொட்டதெல்லாம் ஹிட்! - ‘அசுர’த்தனமாக அசத்தும் மஞ்சு வாரியர்

செகண்டு இன்னிங்ஸ் வளர்ச்சியை ஆச்சர்யமாகவே பார்க்கும் மஞ்சு வுக்கு, சினிமாத் துறையில் எந்த இலக்கும் கிடையாதாம். “1999-ல் சினிமாவுல இருந்து பிரேக் எடுத்தேன். வாழ்க்கையில எந்த விஷயத்தையும் பிளான் பண்ணிச் செய்ய மாட்டேன். மறுபடியும் நடிக்குற யோசனை இல்லாத நிலையிலதான், சந்தர்ப்ப சூழலால ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ படத்துல நடிச்சேன். அந்தப் படம் பெரிய ஹிட்டாச்சு. நம்மள ஆக்டிவ்வா வெச்சுக்க ஏதாச்சும் ஒரு வேலை செய்தாகணுமே. எனக்குத் தெரிஞ்ச ஒரே தொழில் சினிமாதான். ஸோ, புதுமுக நடிகைங்கிற உணர்வோடு தான் தொடர்ந்து நடிக்குறேன்.

ஹீரோ, ஹீரோயினுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்குற டிரெண்டு மாறிடுச்சுன்னு நினைக்கிறேன். படத்தோட வெற்றியைத் தீர்மானிக் குற சக்தி கதை மட்டும்தான். என்னை மையப்படுத்தி நல்ல கதைகள் எழுதுறாங்க. அந்தக் கதையை விஷுவலா யோசிச்சு, ரசிகையா தியேட்டர்ல உட்கார்ந்து பார்க்கும்போது, அந்தப் படம் எனக்குப் பிடிச்ச மாதிரி இருக்கு மான்னு யோசிப்பேன்.

கதை நாயகினு இல்லாம, சமீபத் துல மம்முட்டி சார்கூட ‘தி ப்ரீஸ்ட்’ படத்துல நடிச்சதுபோல, கேமியோ ரோல்லயும் நடிப்பேன். அம்மா, அண்ணன் குடும்பம்னு மகிழ்ச்சியான குடும்ப சூழல்ல வாழுறேன். கடந்து வந்த பாதையில சில ஏற்ற இறக்கங்கள் இருக்குது. ஆனா, அதையும் எதிர் காலத்தையும் நினைச்சுப் பார்க்குற பழக்கம் எனக்கு இல்ல. வாழ்க்கை கூட்டிட்டுப் போற பாதையில போறேன். வாழுற இந்தக் கணத்தை மகிழ்ச்சியா வெச்சுக்கிறேன். ஐ’ம் ப்ளெஸ்டு!”

*******

அன்பைக் கொடுப்போம்!

வரதட்சணைக்கு எதிரான விழிப்புணர்வுடன், பெண்களுக்கான ஹெல்ப்லைன் எண்ணைப் பிரபலப் படுத்தும் கேரள அரசின் விளம்பரப் படத்தில் மஞ்சு வாரியர் பேசிய வாசகங்கள் கவனம் பெற்றுள்ளன. இதுகுறித்துப் பேசுபவர், “கடந்த சில வருஷங்கள்ல, பெண்கள் பல விஷயங்கள்லயும் தைரியமா மாறி யிருக்காங்க. பல துறைகள்லயும் வளர்ந்திருக்காங்க. பெண்களை ஆதரிக்குற ஆண்களும் அதிகரிச் சிருக்காங்க. இதையெல்லாம் வரவேற்கும் வேளையில, கேரளாவுல இப்போ கவனம் பெற்றிருக்குற வரதட்சணைக்கு எதிரான குரல்கள், ஒட்டுமொத்த சமூகத்துல இருந்தும் உரக்க ஒலிக்கணும். அதுல ஒரு துளிதான், இந்த விளம்பரத்துல வரும் என்னோட குரலும். எவ்வளவு பணம், நகைகள் கொடுத்தாலும் அவை ஒருகட்டத்துல கரைஞ்சுடும். உண்மையான பாசத்தைப் பெருக்கும் அன்பையும் நம்பிக்கையையும் கொடுப்போம்; பெறுவோம்” என்ப வரின் பேச்சில் பொறுப்புணர்வு.