Published:Updated:

6 மாதங்களில் 6 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ்... பார்த்தாலே பரவசமூட்டும் பாரம்பர்ய சமையல்!

நாடி
பிரீமியம் ஸ்டோரி
நாடி

#Entertainment

6 மாதங்களில் 6 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ்... பார்த்தாலே பரவசமூட்டும் பாரம்பர்ய சமையல்!

#Entertainment

Published:Updated:
நாடி
பிரீமியம் ஸ்டோரி
நாடி
6 மாதங்களில் 6 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ்... பார்த்தாலே பரவசமூட்டும் பாரம்பர்ய சமையல்!

“மல்லிலிலிலிலி......” என்ற உரத்த குரலில் அழைத்து உலக மக்கள் பலரின் இதயங்களில் இடம்பிடித்தவர் யூடியூப் பிரபலம் நாடி. இலங்கையைச் சேர்ந்த இளம்பெண் நாடியின் ‘டிரெடிஷனல் மீ’ (Traditional Me) சேனலுக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் உண்டு. பெண்களால் நடத்தப்படும் யூடியூப் சேனல்கள் பெரும்பாலும் சமையல் சார்ந்தவைதான். அதே வகையில் இதுவும் சமையல் வீடியோக்கள் அடங்கிய சேனல்தான். லாக்டௌன் காலத்தில் பல ஆயிரம் சமையல் யூடியூப் சேனல்கள் தொடங்கப்பட்டுள்ளன. சமையலுடன் இலங்கையின் வாழ்வியலை கேமரா கண்கள் வழியாகக் காண்பிக்கும் லைஃப்ஸ்டைல் சேனலாக `டிரெடிஷனல் மீ' இருப்பதால்தான் தனித்து நிற்கிறது.

“இலங்கையில் நகர்ப்புறங்களைத் தாண்டிய சிறிய கிராமம் எங்களுடையது. நான், என் பாட்டி, தம்பி என மூன்று பேர் கொண்ட சிறிய குடும்பம். அவர்களுக்கு ருசியான சமையல் செய்து கொடுப்பதுதான் என் பொழுதுபோக்கு. இலங்கை என்பது பல்வேறு கலாசாரம் கலந்த நாடு என்பதால் இங்குள்ள உணவு வகைகளும் மிகவும் பிரபலமானவை.எங்கள் நாட்டு சமையலுடன் அண்டை நாடான இந்தியா, அரேபியா, மலாய் உணவு களைச் சமைப்பதிலும் ஆர்வம் அதிகம். அந்த உணவில் என்னுடைய இனோவேஷனும் நிச்சயம் இருக்கும்” - தன்னைப் பற்றிய நாடியின் சுயகுறிப்பு இதுதான்.

6 மாதங்களில் 6 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ்... பார்த்தாலே பரவசமூட்டும் பாரம்பர்ய சமையல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கவுன் போன்ற உடுப்பை அணிந்து, சிறிய மூங்கில் கூடையை எடுத்துக்கொண்டு வெறும் கால்களுடன் பசுமையடர்ந்த பகுதிகளில் காய்கறிகளையும் பழங்களையும் தேடிச்சென்று பறித்து வருவது, வீட்டின் அருகே ஓடும் தெளிந்த நீரோடையில் காய்கறிகளை அலசுவது, வீட்டில் காய்த்திருக்கும் கிழங்கு வகைகளை தம்பியுடன் சேர்த்துத் தோண்டி அவற்றைக்கொண்டு உணவுகளைத் தயாரிப்பதைப் பார்க்கும் நமக்கும் இப்படி ஒரு வாழ்க்கை அமையாதா என்ற ஏக்கம் நிச்சயம் எழும். குடிசை போன்ற அமைப்பில் விறகடுப்பில் சமையல், மண் பாத்திரங்களின் பயன்பாடு, அம்மி, உரல் என ஆரோக்கிய வாழ்க்கையின் சான்றாக இருக்கிறது நாடியின் சேனல்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“இந்த நவீன உலகத்தில் நான் மட்டும் ஏன் பண்டைய முறையில் சமைக்கிறேன் என்ற கேள்வி எழலாம்.

புதிய தொழில் நுட்பங்களையும், தயாரிப்பு முறைகளையும் உணவில் புகுத்தும்போது பாரம்பர்ய சுவை நிச்சயம் கிடைக்காது.

உடலிலிருந்து மனதைப் பிரித்துவிட்டது போன்ற உணர்வைக் கொடுக்கும். அதனால்தான் பாரம்பர்ய வாழ்க்கையையே தொடர்கிறேன்” என்கிறார் நாடி.

நாடி மட்டுமன்றி அவரின் தம்பி, வயதான பாட்டியும் அவ்வப்போது சமையல் களத்தில் இறங்கிவிடுவார்கள். பாட்டியுடன் பாசம், தம்பியுடன் வம்பு, ரம்மியமான சூழல்... என ஒவ்வொரு வீடியோவும் ஒரு குறும்படம் பார்ப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தும்.

6 மாதங்களில் 6 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ்... பார்த்தாலே பரவசமூட்டும் பாரம்பர்ய சமையல்!

இரவின் இருட்டில் வெறும் விளக்கு வெளிச்சத்தில் விறகடுப்பில் செய்யும் சமையல், அதே வெளிச்சத்தில் மூன்று பேரும் அமர்ந்து இரவு நேரத்து உணவைச் சாப்பிடுவதைப் பார்க்கும்போது நமக்குப் பின்னணியில் ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ பாடல் ஒலிக்கும். குறுகிய இடைவெளியில் வீடியோக்களை இவர் வெளியிடுவதில்லை. அதற்கான காரணத்தையும் அவரே சொல்கிறார்.

“ஒரு கான்செப்டை திட்டமிட்டு வீடியோ ஷூட் முடிப்பதற்கு 5 அல்லது 6 நாள்கள் ஆகிவிடும். அதன் பிறகு, முழுமையான படைப்பாக மாற்றி பப்ளிஷ் செய்வதற்கு 12 நாள்களுக்கு மேல் ஆகிவிடுகிறது. ரசிகர்களைக் காக்க வைத்தாலும், அதற்கு பதில் சொல்வதுபோல் வீடியோவின் தரம் இருக்க வேண்டும் என்பதுதான் என் நோக்கம். கேமராவுக்குப் பின்னால் என்னுடன் இணைந்திருக்கும் குழுவினர்தான் இந்த சேனலின் முதுகெலும்பு” என்கிறார்.

டிரெடிஷனல் மீ சேனலுக்கு ஆறே மாதங்களுக்குள் 6 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் கிடைத்துள்ளனர். ஒவ்வொரு வீடியோவுக்கும் 5 லட்சத்துக்கும் மேல் வியூஸ். இதுபோன்ற யூடியூப் சேனல்களை நடத்தும் போது அதற்கான போட்டிச் சேனல்கள் வரிசைகட்டி நிற்கும். ஆனால், தனித்துவமான வழியைக் கண்டறியும்போது வெற்றி எட்டும் தூரத்தில் வசமாகிறது என்பதற்கு நாடியே சான்று!

கட்டுரையின் தொடக்கத்தில் நாடி, மல்லி என்று அழைப்பது அவரின் தம்பியை... மல்லி என்றால் சிங்களத்தில் தம்பி என்று அர்த்தமாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism