Published:Updated:

“வெயிட்டா வருவோம்!” ‘நக்கலைட்ஸ்’ மகளிர் படை

‘நக்கலைட்ஸ்’ மகளிர் படை
பிரீமியம் ஸ்டோரி
‘நக்கலைட்ஸ்’ மகளிர் படை

கலக்கல் பெண்கள்

“வெயிட்டா வருவோம்!” ‘நக்கலைட்ஸ்’ மகளிர் படை

கலக்கல் பெண்கள்

Published:Updated:
‘நக்கலைட்ஸ்’ மகளிர் படை
பிரீமியம் ஸ்டோரி
‘நக்கலைட்ஸ்’ மகளிர் படை

கொங்குத் தமிழ் நக்கலுடன் பார்வையாளர்களைக் கவரும் ‘நக்கலைட்ஸ்’ யூடியூப் சேனலுக்கு அறிமுகம் தேவையில்லை.

ஜாலி, கேலி வீடியோக்களுக்கு ‘நக்கலைட்ஸ்’, தெளிவான அரசியல் பார்வைக்கு ‘அர்பன் நக்கலைட்ஸ்’ என்ற வரிசையில் நக்கலைட்ஸின் புதுவரவு... ‘நக்கலைட்ஸ் FZone’. பெண்களின் உலகைத் தங்களது டிரேட்மார்க் கொங்குத் தமிழில் பேச ஆரம்பித்திருக்கிறது நக்கலைட்ஸின் இந்த மகளிர் படை. பெண்களே ஸ்க்ரிப்ட்டிங், நடிகர்களும் 99% சதவிகிதம் பெண்கள் என்று கவனம் ஈர்த்திருக்கிறது. கோவையில் உள்ள அலுவலகத்தில் அவர்க சந்தித்தோம்.

“பெண்களுக்கென பிரத்யேக யூடியூப் சேனல் தொடங்கணும்னு நக்கலைட்ஸ்ல நீண்ட நாள்களாவே யோசித்துக்கொண்டிருந்தோம். பெண்களின் கதைகள், பெண்களின் பார்வையிலிருந்தே வர வேண்டும்னு நினைத்தோம். இதோ எங்களோட FZone கிக் ஸ்டார்ட் ஆகிவிட்டது. இப்போதைக்கு ஸ்க்ரிப்ட் ரைட்டிங், நடிப்பு ஆகியவற்றை பெண்கள் கையில் எடுத்திருக்கோம். விரைவில், அனைத்து விஷயங்களையும் பெண்களே செய்வோம்” என்று ஸ்க்ரிப்ட் ரைட்டர் இலக்கியா தம்ஸ்அப் காட்ட, யூடியூப் ரசிகர்களின் எவர்கிரீன் அம்மா தனம் தொடர்ந்தார்...

“வீடு என்பது பெண் சார்ந்த உலகம். அவர்களின் கதைகளை அவர்களே சொல்லும் ஒரு பாசிட்டிவ் தளமாக இது இருக்கும். நக்கலைட்ஸில் ஆண், பெண் பேதமெல்லாம் இல்லை. இங்கு அனைவரும் சமம். யார் வேண்டுமானாலும் அவர்களின் யோசனைகள், கருத்துகளைச் சொல்ல முடியும். அவர்களுக்கு விருப்பப்பட்ட எந்தப் பிரிவிலும் பணியாற்ற முடியும்” என்றார் பெருமிதத்துடன்.

‘நக்கலைட்ஸ்’ மகளிர் படை
‘நக்கலைட்ஸ்’ மகளிர் படை

“நக்கலைட்ஸ் ஷூட்னா... எந்த வேலையா இருந்தாலும் விட்டுட்டு காலையில 6 மணிக்கே வந்துடுவோம். வேலை முடிய நைட் 12 மணி ஆனாலும், என் கணவர் சப்போர்ட் கொடுத்து ஊக்கப்படுத்துவார்’’ என்று சாவித்திரி சொல்ல,

“சரி, செட்டில் ‘செம சீரியஸ்’ யார்?” என்றோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘`நிவி...’’ என்று அனைவரும் கோரஸாக நிவேதிதாவைக் கைகாட்டினார்கள்.

“ரைட்டர், டைரக்டர், சினிமாட்டோகிராபர் கதையை எடுத்துக்கிட்டு வர்றாங்க. அதுக்கு உருவம் கொடுக்கிற மிகப் பெரிய பொறுப்பு நடிகர்களுக்கு இருக்கு. அதனால வேலையில சீரியஸாவும் சின்சியராவும் இருப்பேன்” என்று நிவி பேசிக்கொண்டிருக்கும்போதே குறுக்கிடும் ஸ்ரீஜா...

“நிவி நக்கலைட்ஸோட ராஜமாதா. அவங்க எல்லா விஷயத்திலும் பர்ஃபெக்ட். அவங்களை வெச்சு ‘மிஸ் பர்ஃபெக்ட்’னு ஒரு ஸ்க்ரிப்ட்டே எழுதியிருக்கேன்” என்று கண்ணடித்தார்.

“பொதுவா நாங்க முற்போக்கு சிந்தனைகளை ஹுயூமரா சொல்லி, ஆடியன்ஸை எப்படி கனெக்ட் பண்றதுனு யோசிப்போம். பிற்போக்கு சிந்தனைகளுக்கு இங்கு இடமில்லை” - மற்றொரு ஸ்க்ரிப்ட் ரைட்டரான பிருந்தா உறுதியாகச் சொல்ல,

“சிவில் இன்ஜினீயரான நான், நக்கலைட்ஸ்ல பார்ட் டைமா சேர்ந்தேன். ரொம்பப் பிடிச்சு, இப்ப ஃபுல்டைமா சேர்ந்துட்டேன். கோயிங் குட்” என்று தனது அனுபவத்தைப் பகிர்ந்தார் மித்ரா.

“வெளியில நம்மளைப் பார்க்கும்போது, ‘நீங்க யூடியூப் ஆக்டர்தானே?’னு பலரும் அடையாளம் கண்டு ஆர்வமா பேசும்போது மனசெல்லாம் ஜில்லுனு ஆகிடும். எங்க வீடியோக்களைப் பார்த்துட்டு நிறைய பெண்கள், ‘அட இதென்ன நம்ம வீட்டுல நடக்குற மாதிரியே இருக்கு’ன்னு சொல்றாங்க. இது எங்களோட பொறுப்புகளை அதிகரிக்குது” என்கிறார்கள் கமலி, ஸ்ரீஆர்த்தி, மீனா.

“பெண்களுக்கு காமெடி வராது, பெண்களால இது முடியாது, அது முடியாதுங்கிற ஸ்டீரியோடைப்ஸை எல்லாம் எங்க வீடியோக்கள் உடைக்கும். சில வெப் சீரிஸ் பிளான் பண்ணியிருக்கோம். கொரோனாவால கொஞ்சம் தாமதமாகிட்டிருக்கு. சீக்கிரமே வெயிட்டா வருவோம். ‘பொண்ணுங்க என்னா மாதிரி பண்றாங்கப்பா...’னு நீங்க எதிர்பார்க்காத ஆட்டத்தை இனி பார்ப்பீங்க!”

- எனர்ஜியுடன் சொல்கிறார்கள் FZone கேர்ள்ஸ்!