Published:Updated:

`விஜய்யின் அக்கறை, கீர்த்தி சுரேஷூக்கு பிரியாணி, மாஸ்டர் டீசர்!' - ப்ரீத்தி சஞ்சீவ் ஷேரிங்ஸ்

கீர்த்தி சுரேஷின் தீபாவளி கொண்டாட்டம்

"எங்க வீட்டில் செஞ்ச பலகாரங்களுடன், வெஜ் பிரியாணி செஞ்சு அவங்க வீட்டுக்குக் கொடுத்தேன். கீர்த்தியின் அக்கா செஞ்ச லேகியத்தை எங்களுக்குக் கொடுத்தாங்க."

`விஜய்யின் அக்கறை, கீர்த்தி சுரேஷூக்கு பிரியாணி, மாஸ்டர் டீசர்!' - ப்ரீத்தி சஞ்சீவ் ஷேரிங்ஸ்

"எங்க வீட்டில் செஞ்ச பலகாரங்களுடன், வெஜ் பிரியாணி செஞ்சு அவங்க வீட்டுக்குக் கொடுத்தேன். கீர்த்தியின் அக்கா செஞ்ச லேகியத்தை எங்களுக்குக் கொடுத்தாங்க."

Published:Updated:
கீர்த்தி சுரேஷின் தீபாவளி கொண்டாட்டம்
கேரளத்தைப் பூர்விகமாகக் கொண்ட, கோலிவுட் கனவுக் கன்னிகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். பல மொழிப் படங்களிலும் பிஸியாக நடித்துக்கொண்டிருப்பவர், சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்துவருகிறார். பண்டிகை, ஓய்வு நாள்களில் கேரளாவிலுள்ள தன் பெற்றோர் வீட்டுக்குப் பறந்துவிடுவார். ஆனால், இந்த ஆண்டு சென்னையில் தீபாவளி கொண்டாடியிருக்கிறார். இதுதொடர்பான புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார். அவை சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கின்றன.
அக்காவுடன் கீர்த்தி...
அக்காவுடன் கீர்த்தி...

தன் அக்கா ரேவதி குடும்பம் மற்றும் நடிகர் விஜய்யின் நண்பரும் சின்னத்திரை நடிகருமான சஞ்சீவ் குடும்பத்துடன் இணைந்து தீபாவளிக் கொண்டாடியிருக்கிறார் கீர்த்தி. அத்துடன், அக்காவுடன் பயந்துகொண்டே கீர்த்தி சுரேஷ் வெடி வெடிப்பது போன்ற படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்தக் கொண்டாட்ட தருணங்கள் பற்றி சஞ்சீவ்வின் மனைவியும் சின்னத்திரை நடிகையுமான ப்ரீத்தியிடம் பேசினோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"பாலக்காடு பிராமின் குடும்பத்தினர் மற்றும் சினிமா துறையைச் சார்ந்தவங்க என்ற ஒற்றுமைகள் கீர்த்திக்கும் எனக்கும் உண்டு. மத்தபடி எங்களுக்குப் பெரிசா பழக்கம் இருந்ததில்லை. இந்த நிலையில், எங்க அடுக்குமாடி குடியிருப்பில் மூணு வருஷத்துக்கு முன்பு சொந்த ஃபிளாட் வாங்கி குடிவந்தாங்க. இந்த வீட்டில் தங்கியிருந்தபடிதான், தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களுக்கான ஷூட்டிங் போவாங்க. அவங்களுக்கு ஓய்வுநேரம் கிடைக்கும்போதும், பண்டிகை நாள்கள்லயும் கேரளாவிலுள்ள அவங்க வீட்டுக்குப் போயிடுவாங்க. அதனால, இதுக்கு முன்பு வரை நாங்க ஒண்ணா தீபாவளி கொண்டாடினதில்லை.

keerthy suresh
keerthy suresh

எங்க வீட்டுக்கு மேல் போர்ஷன்ல கீர்த்தி வசிக்கறாங்க. அவங்களுக்கு சைவ உணவுகள் அதிகம் பிடிக்கும். அதில் சில ஃபேவரைட் டிஷ்ஷை அவ்வப்போது கீர்த்திக்குச் செய்துகொடுப்பேன். என் குழந்தைகளுடன் அவங்க ஜாலியா விளையாடுவதுடன், பசங்களுக்கு சாக்லேட் தோசை செய்து கொடுப்பாங்க. என் பையனின் பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸா கேக் செஞ்சு கொண்டுவந்து பரிசா கொடுத்தாங்க. 'அக்கா'ன்னு என்கிட்ட சகஜமா பேசுவாங்க. எங்க குடும்பத்துக்கும் அவங்களுக்கும் நல்ல நட்பு உண்டு.

லாக்டெளன் கடுமையா இருந்த சில மாதங்கள் வரை கீர்த்தி சென்னையில்தான் தங்கியிருந்தாங்க. அப்போதான் அவருக்கும் எங்க குடும்பத்துக்கும் நட்பு பலமாச்சு. உணவுகள் பரிமாற்றம் செய்துகிட்டோம். மாலை நேரத்தில் மொட்டைமாடியில் ஒண்ணா விளையாடி, பேசி மகிழ்ந்தோம். கீர்த்தியின் நாய்க்குட்டியுடன் என் குழந்தைகள் அடிக்கடி விளையாடுவாங்க. இந்த நிலையில், இ-பாஸ் வழங்க ஆரம்பிச்சதும் கேரளாவிலுள்ள அவங்க வீட்டுக்குப் போயிட்டாங்க. சமீபத்தில்தான் மீண்டும் சென்னைக்கு வந்தாங்க. அவங்க அக்கா குடும்பத்தினரும் கீர்த்தியுடன் தீபாவளி கொண்டாட வந்திருந்தாங்க.

ப்ரீத்தியுடன் கீர்த்தி
ப்ரீத்தியுடன் கீர்த்தி

ஒவ்வொரு வருஷமும் விஜய் அண்ணாவின் படம் ரிலீஸாகும். என் கணவர் முதல் ஷோ டிக்கெட் வாங்கிடுவார். குடும்பத்துடன் படம் பார்க்கப் போயிடுவோம். இந்த வருஷம் கொரோனா பிரச்னையால, படம் ரிலீஸாகலை. அதனால சின்ன வருத்தம் இருந்தாலும், குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட அதிக நேரம் கிடைச்சது.

அக்கம்பக்க வீட்டுக்காரங்களும் சொந்தங்கள் போலத்தானே! அதனால, கீர்த்தி குடும்பமும் நாங்களும் இந்த வருஷம் தீபாவளியில் ஒண்ணா பட்டாசு வெடிச்சுக் கொண்டாடினோம். எங்க வீட்டில் செஞ்ச பலகாரங்களுடன், வெஜ் பிரியாணி செஞ்சு அவங்க வீட்டுக்குக் கொடுத்தேன். கீர்த்தியின் அக்கா செஞ்ச லேகியத்தை எங்களுக்குக் கொடுத்தாங்க. இந்த வருஷ தீபாவளி ரொம்பவே ஸ்பெஷலா அமைஞ்சது" என்று புன்னகையுடன் கூறும் ப்ரீத்தி, லாக்டெளன் காலகட்டம் பற்றிப் பகிர்ந்தார்.

சஞ்சீவ் குடும்பத்தினருடன்
சஞ்சீவ் குடும்பத்தினருடன்

"எங்க வாழ்க்கையிலும் குடும்பத்திலும் விஜய் அண்ணாவும் அவர் குடும்பமும் தவிர்க்க முடியாத அங்கம். இருவரின் வீடும் சென்னை நீலாங்கரையில் அருகருகேதான் இருக்கு. பொதுவா அவர் எங்க வீட்டுக்கு வருவதும், நாங்க அவர் வீட்டுக்குப் போவதும் வாடிக்கை. ஆனா, கொரோனா சூழலால் ரெண்டு குடும்பத்தினரும் வீட்டிலேயே எங்களைத் தனிமைப்படுத்திகிட்டோம். அதனால, நாங்க அதிகம் சந்திச்சுக்கலை. ஆனா, போன்ல பேசிப்போம். விஜய் அண்ணா, என் கணவர் உட்பட ஆண் நண்பர்கள் ஜூம் வீடியோல பேசிக்கிறாங்க.

இந்த நிலையில், என் கணவருக்குக் கொஞ்சம் உடல்நிலை சரியில்லாம போச்சு. அப்போ சில நாள்கள் விஜய் அண்ணா சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தார். மாசம்தோறும் 20 நாளுக்கு மேல கணவர் ஷூட்டிங் போயிடுவார். அவர் மொத்தமா ரெண்டு நாள்கள் எங்களோடு நேரம் செலவிடுவதே அபூர்வமா இருக்கும். பெரிசா அவுட்டிங் போகக்கூட நேரமிருக்காது. இந்த நிலையை கொரோனா மாத்தியிருக்கு.

கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்

பல வருஷங்களுக்குப் பிறகு, குடும்பமா நாங்க ஒண்ணா இருக்க முடிஞ்சது. தினமும் விளையாட்டு, மொட்டைமாடி டான்ஸ், மதியம்தோறும் ஒரு சினிமா பார்க்கிறது, அரட்டை, ஒண்ணா சாப்பிடுறதுனு இந்த கொரோனா காலகட்டம் எங்களுக்கு மறக்க முடியாத நினைவுகளைக் கொடுத்திருக்கு.

கிளாசிகல் டான்ஸ் வகுப்புகள் எடுத்திட்டிருந்தேன். இப்போ, அதை ஆன்லைன்ல நடத்தறேன். எனக்கு சமையலிலும் அதிக ஆர்வம் உண்டு. அதைப் பயனுள்ள வகையில் மக்களுக்குத் தெரியப்படுத்தலாம்னு புது யூடியூப் சேனல் ஒண்ணு ஆரம்பிச்சேன். குடும்பத்துக்குச் சமைக்கிறதையே எளிமையான முறையில் வீடியோ எடுத்துப் பதிவிடறேன். இந்த சேனலும் நல்லா ரீச் ஆகியிருக்கு.

நண்பர்களுடன் விஜய்
நண்பர்களுடன் விஜய்

விஜய் அண்ணாவோட ரசிகர்களா நாங்களும் 'மாஸ்டர்' படத்துக்காகக் காத்திருக்கோம். தீபாவளியில் அவர் படத்தின் டீசர் பார்த்து ரொம்பவே சந்தோஷப்பட்டோம். சீக்கிரமே `மாஸ்டர்' படத்தை தியேட்டர்ல பார்க்க மொத்தக் குடும்பமும் வெறித்தன வெயிட்டிங்" என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் ப்ரீத்தி.