தீராத ஆசை

சாந்தலட்சுமி, நிகழ்ச்சித் தொகுப்பாளர்

பள்ளியில் படிக்கிற காலத்துலயே ஏற்பட்ட ஒரு விபரீத ஆசை இது. நான் படிச்ச பள்ளிக்கே நான் சிறப்பு அழைப்பாளரா போகணும். அப்படி போகும்போது எனக்கு சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களெல்லாம் ‘முன்னாள் மாணவி’ன்னு என்னை அறிமுகப் படுத்த, போட்டில ஜெயிச்ச பசங்களுக்கு நான் பரிசுகள் கொடுக்கணும்னு ஒரு கற்பனைக் கடலே அந்த ஆசைக்குள்ள இருக்கு. அது நிச்சயம் நடக்கும்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்!

நெகிழ்ந்த நிமிடம்

ரோஸ், பண்பலை தொகுப்பாளினி

கடந்த வருடம் என் பிறந்தநாளின்போது ரசிகர் ஒருவர், ஊட்டியிலேருந்து 10, 15 பரிசுப்பொருள்கள் வாங்கிட்டு என்னைப் பார்க்க வந்துட்டாரு. நான் எப்படி இருப்பேன்னுகூட அவருக்குத் தெரியாது. எந்த அறிமுகமும் இல்லாம ஆபீஸுக்கே வந்து என்னை சர்ப்ரைஸ் பண்ணாரு. எதுக்காக இவ்வளவு சிரமப்பட்டு, இவ்வளவு காசு செலவு பண்ணி கிஃப்ட் வாங்கிட்டு வரணும்னு அவர்மேல எனக்கு முதல்ல கோபம்தான் வந்தது. பின்னாடி, அவர் என்மேல வெச்ச அந்தத் தூய்மையான அன்பை உணர்ந்தபோது நான் ரொம்ப நெகிழ்ந்துட்டேன்.

தாக்கத்தை ஏற்படுத்திய நபர்

தேன்மொழி தாஸ், பாடலாசிரியர்

மனிதநேயமோ, நற்பண்பு களோ... எனக்குள் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்திய நபர் திருமாவளவன்தான். அவர் எழுதிய ‘அமைப்பாய் திரள்வோம்’ புத்தகம்தான் என் வாழ்நாளிலேயே என்னை மிகவும் பாதித்த, பல நாள்கள் தூங்கவிடாமல் செய்த புத்தகம். அந்தப் புத்தகத்தில் பக்கத்துக்குப் பக்கம் சமத்துவத்தை நிரப்பியிருந்தார். அவரைப் போன்று அரசியலை கருத்தியலோடு அணுகிய அரசியல் ஆர்வலரை நான் கண்டதே இல்லை.

எந்த ஓர் எதிர்பார்ப்பும் இல்லாமல், உள்ளன்போடு பழகக்கூடியவர் திருமாவளவன். உண்மையிலேயே அவருடைய செயல்பாடுகளும் எழுத்துகளும் Absolutely Stunning!

சமீபத்தில் வாங்கிய பொருள்

சுசீலா ஆனந்த், வழக்கறிஞர்

நகரத்துக்குள்ளே நீர்நிலைகளை முறையாகப் பயன்படுத்துவது குறித்தும், காற்றாலைகளின் பயன் குறித்தும் நடத்தப்பட்ட ஒரு கலந்தாய்வுக்காக அண்மையில் நெதர்லாந்துக்குச் சென்று வந்தேன்.

நெதர்லாந்து மக்கள் காற்றாலை களை அந்த நாட்டின் அடையாள மாகவே கருதுகிறார்கள். அப்படி அவர்கள் பெரிதும் மதிக்கும் காற்றாலைகளின் சிறப்புகளை அறிந்ததும், அதை நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில் ஒரு காற்றாலைப் பொம்மையை வாங்கினேன். அதுதான் நான் சமீபத்தில் வாங்கிய பொருள்.

பிடித்த படம்

லவ்லின் சந்திரசேகர், நடிகை

என்னுடைய பொழுதுபோக்கே படங்கள் பார்க்கறதுதான். கொஞ்சம் நேரம் கிடைச்சாலும் சினிமாவுக்குள் மூழ்கிடுவேன். எனக்கு நிறைய படங்கள் பிடிக்கும். இருந்தாலும், ஆல் டைம் ஃபேவரைட் ‘மூன்றாம் பிறை’தான். சின்னவயசுல ஒரு குழந்தையா அந்தப் படம் பார்க்கும்போதே ரொம்பப் பிடிச்சு போச்சு. கதையில் இருந்து காஸ்டிங் வரை இந்திய சினிமாவுல தவிர்க்கவே முடியாத படமா ‘மூன்றாம் பிறை’யைச் சொல்லலாம்!

கடைப்பிடிக்கும் பழக்கம்

நந்தினி மாதேஷ், யூடியூப் ஆர்டிஸ்ட்

ஆட்டோக்காரங்க, சக பயணின்னு அதுக்கு முன்னாடி நான் பார்க்காத ஒரு மனிதர்கிட்ட தினமும் குறைஞ்சது ஐந்து நிமிடங்களாவது பேசுவேன். ஓர் ஆர்ட்டிஸ்ட்டா அவங்களுடைய உடல்மொழியையும் பேச்சுவழக்கையும் உன்னிப்பா கவனிப்பேன். அவங்ககிட்ட பேசும்போது புதுசா நிறைய விஷயங்களை கத்துக்கலாம். ‘இதெல்லாம் பாத்தா பைத்தியக்காரத்தனமா இருக்கு'ன்னு என் ஃப்ரெண்ட்ஸ் பயங்கரமா கலாய்ப்பாங்க. ஆனால், யூடியூப்ல ஷோ பண்ண ஆரம்பிச்சதிலிருந்து இந்தப் பழக்கத்தை விடாம பண்றேன். கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக இதைத் தொடர்ந்துட்டு இருக்கேன்.

பிடித்த புத்தகம்

திவ்யா துரைசாமி, செய்தி வாசிப்பாளர்

நான் படிச்சதிலேயே ‘Freedom at Midnight’ புத்தகம்தான் எனக்கு மிகவும் பிடிச்ச புத்தகம். இந்தியா எப்படி சுதந்திரம் அடைந்ததுங்கறதையும், அந்த சுதந்திரத்துக்காக நடந்த ஒட்டுமொத்தப் போராட்டத்தையும் வலியையும் மவுன்ட்பேட்டனின் பார்வையில் சொல்கிற மாதிரி அந்த புத்தகத்தைத் தொகுத்திருப்பாங்க. இதோடு, கல்கியின் வரலாற்று நாவல்களையும் அடிக்கடி விரும்பிப் படிப்பேன்.