Published:Updated:

இதுதான் எங்கள் பாதுகாப்பு!

‘செம்பருத்தி’ சீரியல் ஷபானா
பிரீமியம் ஸ்டோரி
‘செம்பருத்தி’ சீரியல் ஷபானா

இரவில் தாமதாக வீடு திரும்ப நேரும் பெண் பிரபலங்கள் தங்கள் பாதுகாப்புக்கு என்ன செய்கிறார்கள்?

இதுதான் எங்கள் பாதுகாப்பு!

இரவில் தாமதாக வீடு திரும்ப நேரும் பெண் பிரபலங்கள் தங்கள் பாதுகாப்புக்கு என்ன செய்கிறார்கள்?

Published:Updated:
‘செம்பருத்தி’ சீரியல் ஷபானா
பிரீமியம் ஸ்டோரி
‘செம்பருத்தி’ சீரியல் ஷபானா

தொகுப்பாளினி பாவனா

“சென்னை மற்றும் மும்பையில் ஷூட்டிங் முடிந்து இரவு தாமதமா வீடு திரும்பும்போது, நான் பயணிக்கிற ‘கேப்’பின் எண், என்னோட லைவ் லொக்கேஷன் போன்றவற்றை என் பெற்றோருக்கோ, கணவருக்கோ மெசேஜ் பண்ணிடுவேன்.

தொகுப்பாளினி பாவனா
தொகுப்பாளினி பாவனா

நான் கிளம்பும் நேரத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள்ள வீட்டுக்குப் போயிடுவேன் என்பதால, ஒருவேளை தாமதமானா அவங்களே கால் பண்ணிடுவாங்க. வெகுதூரப் பயணங்கள், லேட் நைட் ஷூட்டிங்குகளில் என் குடும்பத்தினர், மேனேஜர்னு யாராச்சும் நிச்சயம் உடன் இருப்பாங்க என்பதால், அதைத் தாண்டி தற்காப்புக்குன்னு இன்னும் எதையும் யோசிக்கலை. ஒரு பெப்பர் ஸ்பிரே வாங்கி ஹேண்ட்பேக்ல வைக்கணும்.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மாடல் பிரதாயினி

‘`பெரும்பாலும் ஷூட் முடிச்சுட்டு வரும்போது நான்தான் டிரைவ் பண்ணுவேன் என்றாலும், தற்காப்புக்கு ஏதாச்சும் வெச்சுக்கணும்னு இப்போ நீங்க கேட்டதுக்கு அப்புறம்தான் தோணுது. பொதுவா கார்ல ஏறினதும், காரிலிருந்து இறங்கியதும் நாலு கதவுகளும் லாக் ஆகிடுச்சான்னு செக் பண்ணிக்குவேன்.

மாடல் பிரதாயினி
மாடல் பிரதாயினி

பயணத்தை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி என் ஃபிரெண்ட்ஸுக்கு எங்கிருந்து, எந்த நேரத்தில் கிளம்புகிறேன்னும், எங்க வந்துட்டு இருக்கேங்கிறதையும் அப்டேட் செய்வேன். ஒருவேளை இதுல ஏதாவது மிஸ் ஆச்சுன்னா, உடனே என் ஃபிரெண்ட்ஸ் எனக்கு போன் பண்ணிடுவாங்க. வீட்டுக்குப் போனதும் ‘ரீச்டு ஹோம் சேஃப்’னு மெசேஜ் அனுப்பிடுவேன். நாம பத்திரமா வீடு போய்ச் சேர்ந்துட்டோமான்னு காத்திருந்து கேட்கிற மனுஷங்க கிடைக்கிறது பிளஸ்ஸிங்!”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மருத்துவர் பிரியா செல்வராஜ்!

“என் அம்மா டாக்டர் கமலா செல்வராஜ் இரவு நேரங்கள்ல பயணம் செய்ய வேண்டி வந்தா, பெப்பர் ஸ்பிரேவும் ஒரு விசிலும் எடுத்துட்டுப் போவாங்க. நான் காலேஜ் படிக்கிற வரைக்கும் பாதுகாப்புக்காகச் சின்னக் கத்தரிக்கோல், பேனாக்கத்தி வெச்சிட்டிருந்தேன். இப்ப அதுக்குப்பதிலா, போன்ல ICE - என்ற ஆப் வெச்சிருக்கேன். இதுல என்னோட ஃபேமிலி மெம்பர்களோட நம்பர்ஸ் இருக்கும். யாராவது என்னை அட்டாக் பண்ணுனா, என் வீட்டாருக்குத் தெரிஞ்சிடும்.

மருத்துவர் பிரியா செல்வராஜ்!
மருத்துவர் பிரியா செல்வராஜ்!

இதை என் பசங்கதான் எனக்குச் சொல்லிக் கொடுத்தாங்க. நான் என் பொண்ணுங்களை தற்காப்புக்காக புடோக்காய் கராத்தே கிளாஸ்ல ( budokai karate) சேர்த்துவிட்டிருக்கேன். தலைமுறையைப் பொறுத்து பாதுகாப்பு வழிமுறைகள் மாறிக்கிட்டே இருக்கு. ஆனா, பெண்களுக்கு பாதுகாப்புதான் இன்னும் கிடைக்க மாட்டேங்குது.’’

பாடகி நித்யஸ்ரீ மகாதேவன்

‘`இரவில் நான் தனியா பயணிப்பது ரொம்ப அரிது. கச்சேரிக்குப் போயிட்டு வரும்போது, பக்கவாத்தியக் கலைஞர்கள் என்னுடனோ, பின்னாடி இன்னொரு கார்லயோ வருவாங்க.

பாடகி நித்யஸ்ரீ மகாதேவன்
பாடகி நித்யஸ்ரீ மகாதேவன்

அதையும் மீறி, ஏதாவது ஒரு சூழ்நிலையில் பாதுகாப்பின்மையா உணர்ந்தா, முதல்ல ஹேண்ட்பேக் கிலிருந்து செல்போனை எடுத்துக் கையில் வெச்சுக்குவேன். அப்படியும் பதற்றம் தொடர்ந்தா குடும்பத்தி னருக்கோ, நண்பர்களுக்கோ போன் பண்ணி என் அப்போதைய நிலையைச் சொல்வேன். அதேபோல, என் பயணத்துல ஒரு மணி நேரம் தாமதம் போன்ற சின்ன மாற்றம் ஏற்பட்டாகூட, உடனே அதை அவங்களுக்குத் தெரிவிச்சிடுவேன். ்’அவங்களுக்குத் தகவல் தெரிவிக்க ஒரு நிமிஷம்கூட யோசிக்கவோ, தாமதிக்கவோ மாட்டேன்.’’

செம்பருத்தி’ சீரியல் ஷபானா

“மும்பையில, நான் படிச்ச பள்ளியில, பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பை ஒரு பாடமாவே கற்றுக்கொடுத்தாங்க. அப்போதான், பெண்கள் தங்கள் பாதுகாப்புக்காகத் தடிபோன்ற எதையாவது வெச்சுக்கணும்னு சொல்லிக்கொடுத்தாங்க.

‘செம்பருத்தி’ சீரியல் ஷபானா
‘செம்பருத்தி’ சீரியல் ஷபானா

ஆனா, வளர்ந்த பிறகும் அதைச் செய்யணும்னு எனக்குத் தோணலை. சமீப நாள்களா, ஷூட்டிங் போகும்போது காரை நிறுத்திட்டுப் போனா, அடையாளம் தெரியாத நபர்கள் கார்ல கீறல் போடுவது, டயர்ல காற்றைப் பிடுங்கிவிடுறதுன்னு ரெண்டு, மூணு தடவை நடந்திருச்சு. அப்புறம்தான், ஒரு ஹாக்கி பேட்டை வாங்கி டிக்கியில போட்டுவெச்சிருக்கேன். ஏதாச்சும் பிரச்னைனா, முதல் அடி அடிக்கவாவது அதை வெச்சு சமாளிச்சிடலாம்னு நம்பிக்கை இருக்கு. ஆறு மாசமாச்சு... பேட்டுக்கு இன்னும் வேலை வரலை. நல்ல விஷயம்தான்!”

இயக்குநர் ஹலீதா ஷமீம்

‘`ஷூட்டிங் முடிஞ்சு பெரும்பாலும் இரவு நேரங்கள்ல தனியாதான் வீட்டுக்கு வர நேரிடும். அந்தச் சந்தர்ப்பங்களில் நான் எப்பவும் வெச்சிருக்கிற தற்காப்பு ஆயுதம், என் நம்பிக்கைதான்.

இயக்குநர் ஹலீதா ஷமீம்
இயக்குநர் ஹலீதா ஷமீம்

என் மேல உள்ள நம்பிக்கையைச் சொல்லலை. நம்மைச் சுத்தியிருக்கிற மனுஷங்கள்மீது நான் வெச்சிருக்கிற நம்பிக்கையைச் சொல்றேன். இரவு ரெண்டு, மூணு மணிக்கு எல்லாம் கேப், ஆட்டோல வீட்டுக்கு வந்திருக்கேன். அந்த டிரைவர் அண்ணன்கள் எல்லாம் என்னை ரொம்பப் பாதுகாப்பாவும், நிம்மதியாவும் உணரவெச்சிருக்காங்க. இரவு என்றாலே அச்சம் என்ற எண்ணத்தை மாத்திக்கிட்டு, அதைச் சந்திக்கிற தைரியத்தைப் பெண்கள் வளர்த்துக்கணும். சேஃப்டி ஆப்ஸ், ஹெல்ப்லைன் நம்பர்கள்னு பயன்படுத்தக் கத்துக்கலாம்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism