என்டர்டெயின்மென்ட்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

நீங்கதான் பாஸ்... காட்டலாம் மாஸ்! யூடியூபில் வெற்றிபெற வழிகாட்டும் நட்டாலியே

யூடியூபில் வெற்றி
பிரீமியம் ஸ்டோரி
News
யூடியூபில் வெற்றி

வெற்றிகரமாக யூடியூப் சேனலை நடத்துவதில் இருக்கும் சிரமங்களைப் பற்றிக் கூறுகையில், “ `ஒரு கேமரா இருந்தால் போதும்.

“உங்களுக்கு நீங்களே முதலாளியாக இருப்பது எளிதான காரியமல்ல. காரணம், உங்களுக்கு நீங்களே ‘ஸ்ட்ரிக்ட் ஆபீஸர்’ ஆக இருக்க வேண்டும்” - யூடியூபில் கலக்க விரும்பும் இளம்பெண்களுக்கு நட்டாலியே அல்சேட்டின் சின்சியர் அட்வைஸ் இதுதான். தனது 20 வயதிலேயே யூடியூப் சேனலைத் (Natalies Outlet) தொடங்கி, 8.38 மில்லியன் சப்ஸ் கிரைபர்ஸை சம்பாதித்திருக்கிறார் நட்டாலியே.

‘டூ இட் யுவர்செல்ஃப்’ (DIY) கிராஃப்ட் மற்றும் ஹேக்ஸ் வகை வீடியோக்கள்தான் அமெரிக்காவைச் சேர்ந்த நட்டாலியேவின் ஸ்பெஷல். சோம்பேறிகளுக்கான மார்னிங் ஹேக்ஸ், 60 விநாடியில் தூங்குவது எப்படி, 48 மணி நேரம் பொய் சொல்லும் சேலஞ்ச், ஜப்பான் ட்ரிப் போவது போன்று அம்மாவை பிராங்க் செய்வது, கேட்ஜெட் அறிமுகம், ரெவ்யூ எனத் தன் வீடியோக்களில் வெரைட்டி காட்டுகிறார். இரட்டை சகோதரிபோல் வேட மிட்டு அவர் உருவாக்கும் வீடியோக்கள் ஹிட் ரகம்.

நீங்கதான் பாஸ்... காட்டலாம் மாஸ்! யூடியூபில் வெற்றிபெற வழிகாட்டும் நட்டாலியே

“ஆறாம் வகுப்பு படிக்கும்போதே யூடியூப் சேனல்களைப் பார்த்திருக்கிறேன். அவற்றில் பல பெண்கள் என்னைக் கவர்ந்திருக்கிறார்கள். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது நானே தனியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து 2014-ல் ஆரம்பித்ததுதான் இந்தச் சேனல். நானே தயாரித்து, நானே நடித்து, நானே எடிட் செய்து பப்ளிஷ் செய்வது என அனைத்து விஷயங்களும் மிகவும் சவாலாக இருந்தன. கடவுளுக்கு நன்றி. இப்போது எடிட்டர் ஒருவரைப் பணியமர்த்தியிருக்கிறேன்” என்பவர் புதன் மற்றும் சனிக்கிழமை என வாரம் இரண்டு வீடியோக்கள் வெளியிடுகிறார்.

அந்த வீடியோக்களுக்குப் பின்னால் அசாத்திய உழைப்பு தெரிகிறது. “திங்கள், வெள்ளிக்கிழமைகளில் வீடியோக்களை ஷூட் செய்வேன். ஒரு வீடியோவை ஷூட் செய்ய 8 மணி நேரம், எடிட் செய்ய 16 மணி நேரம் பிடிக்கும். வீடியோ பப்ளிஷ் செய்வது, புரொமோ, என்கேஜ்மென்ட் என அனைத்தையும் ஒருங்கிணைத்து இரண்டு வீடியோக்கள் வெளியிடுவதற்கு ஒரு வார காலம் தேவைப்படும்” எனும் நட்டாலியே, வீடியோக்களுக்கு தம்ப்நெயிலில் வைக்கும் சிறிய படம்தான் வீடியோவுக்குள் ஆடியன்ஸை இழுத்து வரும் ‘பட்டன்’ என்கிறார்.

வெற்றிகரமாக யூடியூப் சேனலை நடத்துவதில் இருக்கும் சிரமங்களைப் பற்றிக் கூறுகையில், “ `ஒரு கேமரா இருந்தால் போதும். ஓரிடத்தில் உட்கார்ந்து 7 நிமிடங்கள் வீடியோ எடுத்து வெளியிட்டுவிடலாம். யூடியூப் சேனல் நடத்துவதெல்லாம் ரொம்ப ஈஸியான காரியம்’ எனப் பலரும் கூறுவதைக் கேட்டிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை, அடுத்தவர்களின் ஷூக்களுக்குள் என் கால்களை நுழைப்பது போன்று கடினமானது அந்தப் பணி” என்பவர் வெற்றி பெறும் வழியையும் காட்டுகிறார்.

“உங்களுக்குப் பிடித்தமான நபரின் சேனலைப் பார்க்கும்போது எதற்காக இந்த சேனலைத் தொடர்ந்து பார்க்கிறோம், இந்தச் சேனலின் எந்த அம்சம் சப்ஸ்கிரைப் செய்ய வைத்தது ஆகியவற்றை ஆராய வேண்டும். அதோடு விட்டுவிடாமல் நாம் தொடங்க விரும்பும் சேனலைப் போன்ற பிறரின் சேனல்களை அதிகமாகப் பார்க்க வேண்டும். குறிப்பாக, ஹிட்டான வீடியோக்களில், வீடியோவை எதற்காக இப்படித் தொடங்கியிருக்கிறார்கள், இந்த இடத்தில் ஏன் இப்படிப் பேசுகிறார்கள், இந்த வீடியோவில் எந்த விஷயம் அதிகமானவர்களை ஈர்த்திருக்கிறது ஆகிய விஷயங்களை உள்வாங்க வேண்டும். இவை அனைத்தி லிருந்தும் மாறுபட்டு, அதே சமயம் அனைவரும் விரும்பும் வகையில் வீடியோக்களைக் கொடுத்தால் லைக்ஸ் மட்டு மல்ல வருமானத்தையும் அள்ளலாம்” என்பவர் நீண்டநாள் நண்பரான ஒரு யூடியூபரையே அண்மையில் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். இருவரும் இணைந்து ‘நட்டா லியே அண்டு டென்னிஸ் ஷோ’ என்ற பெயரில் ஷோ நடத்துகின்றனர்.

“என்னுடைய சேனல்... நினைத்தால் வீடியோ போடுவேன், போடவில்லை யென்றாலும் என்னைக் கேட்க யாரும் இல்லை என்கிற மனநிலை வெற்றியைத் தராது. உங்களுக்கு நீங்களே பாஸாக மாறி, வேலைகளை முடித்தால் மட்டுமே வெற்றி சாத்தியம். காரணம், யூடியூப் என்பது தனிநபர் சம்பந்தப்பட்டது இல்லை. பலதரப்பட்ட மக்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டிய களம் அது” என்ற எச்சரிக்கையும் கொடுக்கிறார்.

வெற்றி நிச்சயம்!