Published:Updated:

`நீங்கள்தான் என் உத்வேகம்; என் ஹீரோ!'- `தாதாசாகேப் பால்கே' அமிதாப் பச்சனால் நெகிழ்ந்த அபிஷேக்

அபிதாப் பச்சன்
அபிதாப் பச்சன் ( instagram.com )

நேற்று டெல்லியில் நடத்தப்பட்ட சிறப்பு விழாவில் தாதாசாகேப் பால்கே விருதை நடிகர் அமிதாப் பச்சனுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

திரைத்துறையின் மிக உயர்ந்த விருதாக `தாதாசாகேப் பால்கே' விருது கருதப்படுகிறது. `இந்தியத் திரைத் துறையின் தந்தை' என அழைக்கப்படும் தாதாசாகேப் பால்கேயின் நினைவாக இந்த விருது திரைத்துறையில் சாதனை படைக்கும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு வழங்கி வருகிறது.

அபிதாப் பச்சன்
அபிதாப் பச்சன்
instagram.com

இம்முறை 2019-ம் ஆண்டுக்கான `தாதாசாகேப் பால்கே' விருதுக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அபிதாப் பச்சன் தேர்வு செய்யப்பட்டார்.

சமீபத்தில் டெல்லியில் நடந்த 66-வது தேசிய திரைப்பட விழாவில் சிறந்த கலைஞர்கள் மற்றும் படங்களுக்குத் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விருதுகளை வழங்கினார். ஆனால், உடல்நலக் குறைவின் காரணமாக அபிதாப் பச்சன் இதில் கலந்து கொள்ளவில்லை.

அபிதாப் பச்சன்
அபிதாப் பச்சன்
instagram.com

எனவே, நேற்று டெல்லியில் நடத்தப்பட்ட சிறப்பு விழாவில் தாதாசாகேப் பால்கே விருதை நடிகர் அமிதாப் பச்சனுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

`90 லிட்டர் தாய்ப்பால்; 250 தாய்மார்கள்!' - அகமதாபாத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

விருதுபெற்ற தன் தந்தைக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதத்தில் அவரின் புகைப்படத்தைத் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பகிர்ந்த அபிஷேக் பச்சன்,

``நீங்கள்தான் என் உத்வேகம்; என் ஹீரோ. 'தாதாசாகேப் பால்கே' விருது பெற்றதற்காக வாழ்த்துகள் அப்பா. நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். லவ் யூ அப்பா" என்று தன் வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார்.

அபிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஜெயா பச்சன்
அபிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஜெயா பச்சன்
instagram.com

இவர் பகிர்ந்துள்ள மற்றொரு புகைப்படத்தில், ஒரு விமானத்தில் அபிஷேக், விருதுபெற்ற தன் தந்தையுடனும், தாய் ஜெயா பச்சனுடனும் உள்ளார். இந்தப் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் அமிதாப் பச்சனுக்கு தொடர்ந்து வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.

பின் செல்ல